KILIYANUR ONLINE

Tuesday, 30 November 2010

சிறுநீரகக் கோளாறுகளை எதிர்க்கும் மாதுளைச் சாறு

சிறுநீரகக் கோளாறுகளை எதிர்க்கும் மாதுளைச் சாறு: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு


மாதுளம்பழச் சாறுக்கு சிறுநீரகக் கோளாறுகளை எதிர்க்கும் சக்தி உள்ளது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாதுளம் பழம் உடல் நலனுக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் மாதுளைச் சாறு சிறுநீரகக் கோளாறுகளை எதிர்த்துப் போராடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சீறு நீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு மாதுளைச் சாறு கொடுத்தனர். இதில் அவர்களின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டைக் கண்டறிந்தனர். மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ஸ் தான் இதற்கு காரணம்.

டயாலிசிஸ் செய்யும் முன் சிறுநீரக பாதிப்புள்ளவர்களுக்கு மாதுளம்பழச் சாறு அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்த நூற்றாண்டில் சிறு நீரகக் கோளாறு அதிக அளவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த ஆராய்ச்சியைமறுபடியும் மேற்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர் டாக்டர் பாட்யா கிரிஸ்டல் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாதுளை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கும், கருத்தரிப்புத் திறனை அதிகரிக்கும், வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Followers