KILIYANUR ONLINE

Friday, 10 February 2012

மழை நீர் சேகரம்

Rain Water Harvesting


மழை நீர் சேகரம்
பெரு நகரங்களில் மழை நீர் சேகரிப்பு முறைகள்.

சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும், தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.

சேகரிக்கும் முறைகள்:
நெரிசலான பெரு நகரங்களில், வீடுகள், கட்டிடங்களின் கூரையில் விழும் மழை நீரை குழாய்கள் மூலமாக பூமியில் அமைக்கப்படும் 'சம்ப்' நீர்தொட்டியில் சேகரிக்கலாம். மழை பருவத்திற்கு முன் கூரைகளை சுத்தம் செய்வதும், பொதுவாகவே கூரை, மொட்டை மாடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நல்லது.

உறிஞ்சு குழிகள் (Percolation Pits):
தற்போது நகரங்களில் அபார்ட்மெண்ட் கட்டிடங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி காம்பவுண்டு சுவர் வரை சிமெண்ட் தளங்கள் அமைத்து விடுவதால் அங்கு பெய்யும் மழை முழுவதுமாகவே பயனில்லாமல் சாலைக்கு ஓடி, கால்வாய்கள் மூலமாக சாக்கடையுடன் கலக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் இவை முழுவதுமாக கடலில் சென்று கலந்து விடுகிறது.

இதை தவிர்த்து நிலத்தடி நீரை பாதுகாக்க கட்டிடங்களச் சுற்றி ஆங்காங்கு 3 அடி ஆழமும் 12 அங்குல விட்டமும் கொண்ட துளைகள் அமைத்து, அவற்றை கூழாங்கல், மணல் முதலிவற்றால் நிரப்பி துளைகள் இடப்பட்ட 'சிலாப்'கள் கொண்டு மூடி விடலாம்.

இந்த முறையில் சுமார் ஒரு கிரவுண்டு (ஐந்தரை செண்ட்) இடத்தில் கட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி சுமார் 5 அல்லது 6 உறிஞ்சு குழிகள் அமைப்பது நிலத்தடி நீரின் அளவையும், தரத்தையும் உயர்த்த உதவும். சாதாரணமாக இவ்வாறு உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்ட பின் அருகிலுள்ள வற்றிய கிணறுகளில் நீர் மட்டம் உயர 2 வருடங்கள் ஆகும்.

மகாத்மா காந்தி பிறந்த வீட்டில் மழை நீர் சேகரிக்கப்பட்ட முறை.
போர்பந்தரில் (குஜராத் மாநிலம், இந்தியா) மஹாத்மா காந்தி பிறந்த அறைக்கு முன்புறமாக வீட்டின் மூன்று பகுதிகளுக்கு நடுவில் அமைந்த வராண்டாவின் அடியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 15 ஆழமும் கொண்ட சுமார் இருபதாயிரம் காலன்கள் கொள்ளவு கொண்ட ஒரு தொட்டியை அமைத்திருந்தனர். போர்பந்தர் பகுதியில் நிலத்தடி நீர் உப்புகரித்து கடினமாக இருப்பதால் சமையலுக்கு உபயோகிக்க இயலாததாக இருக்கிறது. ஆகவே காந்தியின் வீட்டில் மழை நீரை இந்தப் பெரிய தொட்டியில் சேகரித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்தி வந்தனர்.

பருவ மழை தொடங்குமுன் மேல் தளங்களின் கூரையை கவனமாக கழுவி விடுவார்கள். இங்கு விழும் மழைநீர் குழாய்கள் வழியாக கீழே இறங்கி, குழாய் முனையில் சுண்ணாம்பினால் வடிகட்டி சுத்தம் செய்யப்பட்ட பின் கீழ்த் தொட்டிக்கு செல்லும். இந்த வீட்டில் தான் ஐந்து தலைமுறைகளாக காந்தி குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

Source : Center for Science and Environment, New Delhi

Thursday, 9 February 2012

இலங்கையில் கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரம்: சீன நிறுவனம் ஆய்வு

கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆய்வு இலங்கையில் வெற்றி பெற்றுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட சீனாவின் ஹெனா சக்தி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சினிகியாங் சூ தலைமையிலான அதிகாரிகள் குழு, கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய தனது ஆய்வு அறிக்கையை இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம் சமர்ப்பித்துள்ளது.
சீனாவின் உதவியுடன் வவுனியா, மொனராகல, அம்பாறை, எம்பிலிட்டிய, கண்டி, நுவரெலிய போன்ற இடங்களில் இந்த மின்உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிறிசிடியா மரத்தில் இருந்து பெறப்படும் மின்சாரத்தால் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், அத்துடன் மிகக்குறைந்தளவிலான முதலீட்டில் அதிக பயனைப் பெற முடியும் என்றும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது
http://news.lankasri.com/view.php?20cILp20ePjQU4ebiGphcbdF92Oddc8292bc41pG3e43oQj3023PLI32
--

Wednesday, 8 February 2012

கழிவுத்தொட்டியில் பேக்டிசெம்!

கழிவுத்தொட்டியில் (செப்டிக்டேங்க்), ‘ஆக்டிசெம்’ என்ற நுண்ணுயிர்க் கலவையைப் போட்டால் துர்நாற்றம் வீசாது.
[septic tank] மனித மலம் சேகரமாகும் கழிவுத்தொட்டியில் (செப்டிக்டேங்க்), ‘ஆக்டிசெம்’ என்ற நுண்ணுயிர்க் கலவையைப் போட்டால் துர்நாற்றம் வீசாது. அதுமட்டுமல்ல… அந்தத் தொட்டியிலிருக்கும் நீரை செடிகளுக்குக்கூடப் பயன்படுத்தலாம் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா… விளக்கம் தேவை?” என்று தர்மபுரி மாவட்டம், பாளையத்தானூர், ராமு. வள்ளுவர் கேட்டுள்ளார். சுற்றுச்சூழல் ஆய்வாளர் பி. சதீஷ் இக்கேள்விக்குப் பதில் சொல்கிறார்.
“ஆக்டிசெம் என்பது ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள நிறுவனத்தின் தயாரிப்பு. கப்பல் மற்றும் விமானங்களில் உள்ள கழிவறைத் தொட்டிகளில் இதைப் பயன்படுத்துவார்கள். துர்நாற்றத்தைப் போக்கிவிடுவதோடு, திடமாக உள்ள கழிவுகளை தெளிந்தநீர் போல மாற்றிவிடும் தன்மையும் இதற்கு உண்டு. இது வெளிநாட்டுத் தயாரிப்பு என்பதால் அதிக விலைக்கு விற்பனையாகிறது. ஆகையால், செலவு குறைந்த நுண்ணுயிர்க் கலவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பெயர் ‘பேக்டிசெம்’. ‘ஆக்டிசெம்’ என்ற கலவையைக் காட்டிலும் வேகமாகச் செயல்பட்டு, கழிவு களில் உள்ள தீமை செய்யும் நுண்ணுயிரிகளைச் சிதைக்கும் குணமுடையது இந்த ‘பேக்டிசெம்’.
ஐந்து நபர்கள் வசிக்கும் வீட்டில் உள்ள கழிவுத் தொட்டிக்கு 100 கிராம் அளவு கொண்ட பேக்டிசெம் போதும். இதன் விலை 120 ரூபாய். ஒரு முறை பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் வரை கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பேக்டிசெம் என்ற கலவையில் இருக்கும் நுண்ணுயிர்களின் உணவே… தீமை செய்யக் கூடிய பாக்டீரியாக்கள்தான். எனவே, தீமை செய்யும் நுண்ணுயிர்களை இந்த பேக்டிசெம் சிதைத்துவிடும். இதனால் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசாது. இதன் அடிப்படைத் தத்துவம்… கிராமங்களில் வாந்தி எடுத்த இடத்திலும், கழிவுகள் உள்ள இடத்திலும் மண்ணை அள்ளிப் போடுவார்கள். இப்படிச் செய்வதால் அந்த மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் உடனடியாக வேலை செய்யத் தொடங்கிவிடும். அதனால்தான் மண்ணை அள்ளிப் போட்டவுடன் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசாது. இதே தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த பேக்டிசெம் கலவையும் வேலை செய்கிறது.
துர்நாற்றம் வீசாது என்பதோடு, அந்தத் தொட்டியிலிருக்கும் கழிவை, தெளிந்த நீராக மாற்றிவிடும். அது கழிவுத் தொட்டியின் நீர் என்று யாராலும் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. அந்தளவுக்கு அதன் தன்மையை மாறிவிடும். அந்த நீரை செடிகளுக்கும், மரங்களுக்கும் பயன்படுத்தலாம். இந்தச் செய்தியை சொல்லும் போதே சிலருக்கு அருவெறுப்பு ஏற்படும். ஆனால், உண்மை அதுதான். எனவே மன ரீதியாக நாம் பக்குவப்பட்டால், அந்தத் தண்ணீரையும் பயனுள்ள வகையில் பாசனத்துக்குப் பயன்படுத்தலாம்.
கழிவுத் தொட்டிக்கு பேக்டிசெம் பயன்படுத்துபவர்கள், கழிவறையை ரசாயனப் பொருட்கள் கொண்டு சுத்தப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் தொட்டியில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் மடிந்துவிடும். ஆகவே, வினிகர், எலுமிச்சைப் பழம் போன்றவற்றைப் பயன்படுத்தி கழிவறையைத் தூய்மை செய்யலாம்.”
தொடர்புக்கு: அலைபேசி-98401-81908
http://chittarkottai.com/

Tuesday, 7 February 2012

தொழில் தரும் தன்னம்பிக்கை

டாக்டர். C.V. அருணா சுபாசினி

நமது நாட்டில் பெரும்பாலான குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் தக்க கல்வியறிவுபெற்று வருவது பெருமைக்குரியதே. அவர்கள் தம் பெரும்பாலான நேரத்தைப் படிப்பு, விளையாட்டு, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது என்றே செலவிடுகின்றனர்.

மிகச் சிலரைத் தவிர, பிறர் தங்களது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறு வேலைகளைக்கூட (உதாரணமாக அவர்களது துணிகளை அவர்களே சலவை செய்வது, இஸ்திரி போடுவது, காலணிகளைத் தூய்மையாய்த் துடைத்து பாலிஸ் போடுவது, உடைந்த பட்டன்களை மாற்றுவது தங்களது வாகனங்களைத் தூய்மையாய்த் துடைத்துப் பராமரிப்பது போன்றவைகளை செய்ய முன்வருவதும் இல்லை. செய்வதும் இல்லை.

படிப்பைத்தவிர, நேர்மையான ஏதாவது ஒரு தொழிலை, படிக்கும் காலத்திலேயே, கற்றுத் தன்னம்பிக்கையை வளர்த்துப் பயன்பெறுவோம் என்ற ஆர்வத்தில், பெற்றோர் செய்யும் நல்ல புதிய தொழிலையோ அல்லது நேர்மையான பரம்பரைத்தொழிலிலேயோ தங்களை ஈடுபடுத்திக் கொள்வபர்கள் எத்தனைபேர்? மிகச் சிலர்தான் என்பதில் ஐயமில்லை.
காரணம், உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் எந்த நல்ல பரம்பரைத்தொழிலாயினும், பெருவாரியானவர்கள் அதனை மதிப்பதில்லை. நன்கு வேளாண்மை செய்யும் விவசாயிகூட, தனக்குப் பின்னர், தன் வாரிசுகள் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வதை விரும்புதில்லை. எப்பாடுபட்டேனும் தனது மக்கள் படித்துப் பட்டம் பெற்று, மின் விசிறிக்கடியில் குறைந்த உழைப்பில் அதிகம் சம்பாதிப்பதையே விரும்பிச் செயல்படுகின்றனர்.

படிக்கக் குழந்தைகளை அனுப்புவதன் நோக்கமே, கல்வியறிவோடு ஒழுக்கம், நேர்மை, உழைப்பு, தேசப்பற்று போன்ற உயரிய குணங்களையும் கற்று, மனிதனாய் முழுமை பெறத்தான்.
நல்ல தொழிலுக்காக மட்டுமே கல்விகற்பதில் பயனில்லை. கற்ற கல்வியால் நல்ல தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது தெரிந்த தொழிலை கற்ற கல்வியால் மேம்படுத்தி வெற்றி காணலாம். கற்றவர் அனைவருக்கும் அரசாங்கம் வேலை தருவது என்பது இயலாத காரியம்.

நேர்மையான முறையில் செய்யும், எந்த் தொழில் ஒரு குடும்பத்தைக் காக்ககிறதோ. அத்தொழிலைப் பெற்றோர்கள் தம் வாரிசுகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே பயிற்றுவித்து ஓரளவு அதில் பண்டிதனாக்குவதும் அவசியம்.

இதனைக் கற்றுக்கொண்ட இளைய தலைமுறைக்கு எதிர்காலத்தில் படிப்பு முடித்தவுடன் ஏற்ற வேலை கிடைக்காவிடினும்கூட, தன்னம்பிக்கையோடு இவ்வுலகில் வாழ்ந்துகாட்ட தொழில் இருக்கிறது என்ற மனோபாவம் வரும்.

ஆதலால், ஒரு விவசாயி வேளாண்மை பற்றியும், முடிவெட்டும் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, செருப்புத் தைக்கும் தொழிலாளி எல்லாம் தம் வாரிசுகளுக்கு தொழிலைக் கற்றுக்கொடுப்பது எள்ளளவும் கேவலமில்லை. இதனைக் கேவலாமாய் நினைப்பவர்கள் அறிவிலிகள்.
இத்தொழிலைக் கற்றால் இதையே செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. அவன் திறமைக்கும் கல்விக்கும் வேறு தொழில் கிடைத்தால் நிச்சயம் செய்யட்டும். ஆனால் இதுவும் ஒரு தகுதியாய் இருப்பது அவனுக்கு மேலும் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

நேர்மையான எந்தத் தொழிலிலும் கேவலமில்லை என்ற மனப்பக்குவம், தளராத முயற்சி, சலைக்காத உழைப்பு இவையெல்லாம் முன்னேற்றப்படியின் முக்கியப் படிக்கட்டுக்கள்.

ஆக, பெற்றோர்களே! ஒவ்வொரு வாரிசுக்கும் பள்ளிப் படிப்பு முடியும் முன்னரே தக்கதொரு தொழிலைக் கற்றுக்கொடுங்கள்.
மாணவ மாணவியரே! நீங்களும் சிரமம் பாராது, விருப்பத்தோடு கற்றுக்கொள்ளுங்கள்.

பெற்றோரின் தொழில் கற்க (உதாரணமாக தூர அலுவலகங்களில் பணி புரிவோர்) வாய்ப்பில்லையெனில், அருகிலுள்ள அச்சகம், கணிப்பொறி மையம், வாகனப் பட்டறை, தையற்கூடம், இயந்திரத் தொழிற்கூடம், பலபொருள் விற்பனையங்காடி, எலக்ட்ரானிக் சாதனங்களைப் பழுதுபார்க்கும் கூடங்கள் போன்ற ஏதாவதொரு தொழிலகத்திற்குச் சென்று கற்றுத்தேறலாம்.

கற்றுத்தெளிவோம் என்ற ஏக்கத்தோடு கண்ணைத் திறவுங்கள்! ஏரளமான, தொழிலுக்கான வாய்ப்புகள், சற்றே மறைந்திருப்பதைக் காணலாம்.
அட ஒன்றம் இல்லையென்றால்கூட, நமது வீட்டிலேயே துவைத்தல், இஸ்திரிபோடுதல், சமைத்தல், குழந்தைகளுக்கு முடிவெட்டிப் பார்த்தல், வீட்டைப் பெருக்கித் தூய்மையாய் வைத்திருத்தல் போன்ற வேலைகளை திறம்படத் தெரிந்து வைத்திருந்தால்கூட இதனை அடிப்படையாக்க் கொண்டு, தொழில் தொடங்க அல்லது வேலையில் சேர நிறைய வாய்ப்புண்டு.

ஒவ்வொரு வேளை உணவை உண்ணுவதற்கு முன்னர் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு வேலையைச் செய்துவிட்டுத்தான் உண்பேன், என்ற கோட்பாட்டைக் கடைப் பிடித்தால் நாட்டில் சோம்பேறிகளும் இருக்கமாட்டார்கள். நாடும் வேகமாய் முன்னேறிவிடும்.
தொழிலுக்கும், உழைப்புக்கும் தக்கவாறுதான் ஊதியம் ஒவ்வொருவருக்கும் கிட்டும் எல்லோரும் இந்நாட்டின் முதல்வராவதோ முதலாளியாவதோ, மருத்துவ பொறியாளர் என்றாவதோ இயலாத காரியம். எல்லாத்துறைகளிலும் தக்கவாறு உழைக்க, உழைப்பாளி இருந்தால் தான் நாடு முன்னேறும்.

படிப்புக்குத் தக்க வேலை கிடைக்கவில்லையே என்று தாடி வளர்த்து வருந்திப்பயனில்லை.

பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்திற்கு முயற்சிப்பதில் தப்பில்லை. ஆனால் அதுவரை வெட்டியாய் பொழுதைப் போக்கி காலங் கழிக்காமல் நூறு ரூபாய் தின வேலைக்குப் போவதிலும் தப்பில்லை.


கிராமத்தில் பிறந்து வேளாண் தொழிலையும்,, பள்ளிப் பருவத்திலேயே செய்து வந்தமையால் இன்றும் கூட மருத்துவத் தொழில் விட்டு என்னால் திறம்பட விவசாய வேலைகளையும் செய்து முன்னேற முடியும்.

வாழ்வில் எந்த நிலையிலும், இடிந்து போய் தளர்ந்து விடாமல் எப்படியும் உழைத்து வாழ்ந்து காட்டும் மனோதைரியமும், தன்னம்பிக்கையும் எனக்குத் தந்ததே இளமையில் வறுமையும், அதிலிருந்து மீளக் கற்றுக்கொண்ட கடுமையான தொழில்களும்தான் என்றால் அது மிகையாகாது.

துடிப்புமிக்க இளைஞர்களை உருவாக்கி இந்தியாவை முன்னேற்ற இளஞ்செடிக்கு உரமிடுவோம்! இளையதலைமுறையைத் தொழில் கற்கச் செய்வோம்!

Monday, 6 February 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

*மெக்டொனால்ட் நிறுவனம், மாதத்திற்கு சராசரியாக 110,000 ஐஸ்கிரீம் கோன்களை விற்பனை செய்கிறது.

*திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருமானம் 530 கோடி ரூபாய்கள். இதுவே இந்தியாவில் அதிக வருமானம் கொண்ட டிரஸ்ட் ஆகும்.

*இரண்டு நாளைக்கு ஒருமுறை மீன் இறைச்சியை சாப்பிட்டால் மாரடைப்பு வருவது 30சதவீதம் குறையும் என ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


*காற்று வீசும் திசைக்கு எதிராகத் தனது மூக்கு இருக்கும்படியாகவே நாய் எப்போதும் படுக்கும். எதிரி வருவதை மோப்பத்தால் சுலபமாக உணரவே இவ்வாறு செய்கிறது.

*ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வகை சிலந்திகள், மீன் பிடித்து உண்ணுகின்றன. நீர் நிலைகளின் அருகே இரண்டு கால்களில் நின்றபடி மற்ற ஆறு கால்களையும் மீனைப் பிடிக்கத் தயாராக வைத்திருக்கும். சிறு மீன்கள் கரை ஓரமாக வரும் போது பாய்ந்து பிடித்துக் கொள்ளும்.

*விமானத்தில் பயணம் செய்யும் போது, சாக்லேட் கொடுக்கின்றனர். ஏன் தெரியுமா? சில பயணிகளுக்குத் தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை விமானப் பயணத்தின் போது ஏற்படும். சாக்லேட்டில் உள்ள குளுகோஸ் இவை வராமல் தடுக்கிறது. அது மட்டுமல்ல... சாக்லேட்டின் வாசனையும், சுவையும் பயணிகளுக்கு வாந்தி வராமல் தடுக்கும். மஞ்சள் காமாலை வந்தவர்கள் உணவு விஷயத்தில் ஆர்வமின்றி இருப்பர். இவர்களின் சுவையையும், சக்தியையும் அதிகரிக்க இவர்கள் சாக்லேட் அல்லது புளித்த சுவை கொண்ட மிட்டாய் போன்றவற்றை சாப்பிடலாம். தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு சாக்லேட்டைமென்றால், சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக எழுத முடியும்.

*மனிதனது மூளையில் ஏராளமான நுண்மடிப்புகள் உள்ளன. கட்டளை அல்லது செய்திகளைக் கிரகிக்கும் பகுதி மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. சிலரது மூளை மடிப்புகள் மிகவும் அபாரமானவை. இவை கம்ப்யூட்டர்களைப் போல பணிபுரிவதுடன் அதி அற்புதமான கிரகிக்கும் ஆற்றலையும், நினைவாற்றலையும் கொண்டது. சிலர் இளமையிலேயே அதிபுத்திசாலிகளாக விளங்குவது இதனால்தான். சீரான ஒரு மூளையில் பல ஆயிரம் நுண்மடிப்புகள் உள்ளன என்கின்றனர் நரம்பியல் அறிஞர்கள்.

*நமது நாட்டில் 5 வயது சிறுவனாக இருந்தபோதே "ரவிகிரண்' என்பவன் 60க்கும் மேற்பட்ட ராகங்களைப் பிரித்து அறியவும், பின்னர் பாட்டு இசைக்கவும் அறிந்திருந்தான். அதிகமாகப் பாடங்களை கிரகித்து அறிந்து, பின் தேர்வில் மிகச் சிறப்பாக எழுதிவிடும் அற்புத மூளை படைத்த சிறுவர்களும் இருக்கின்றனர். இவர்களது மேதா விலாசத்தைக் கட்டிப்போட முடியாது.

இந்நிலையில்தான் பிரிட்டனில் உள்ள "கிளாஸ்கோ' பல்கலைக் கழகத்தில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த "வில்லியம் தாம்ஸன்' என்ற சிறுவன் பேராச்சரியப் படத்தக்க அறிவாற்றலுடன் விளங்கி, தேர்வுகளில் முதல் தர மதிப் பெண்களைப் பெற்றமையால் அவனுக்கு 10 வயதிலேயே பல்கலைக் கழக பட்டம் வழங்கப்பட்டது. இச்சிறப்பினை வேறு எவரும் பெற்றதே இல்லை. இவனே பிற்காலத்தில் "லார்ட் கெல்வின்' என்று அழைக்கப்பட்டு பிரிட்டனின் சிறந்த பேரறிஞனாக விளங்கி வந்தான். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது எத்தனை உண்மை பாருங்கள்!

*தேள் முட்டையிடுவதில்லை. குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகள் தாங்களாகவே நடமாடும் பருவமடையும் வரை, தாய்த்தேள் தன் மார்பிலேயே அவைகளை வைத்துக் கொண்டிருக்கும்.

*சிங்கத்தின் வாலிலே இருக்கும் மயிர்க் கற்றையை விலக்கிப் பார்த்தால், முனையில் ஆணி போல் கடினமான ஒரு நகம் இருக்கும்.

*சுண்டெலிகள் பாடுகின்றன! மிகவும் உச்சஸ்தாயியில் பாடுவதாலேயே நாம் அதைக் கேட்க முடிவதில்லை. சில சமயங்களில் பாட்டின் ஒரு பகுதி கீழ்ஸ்தாயிக்கு இறங்கும் போது கேட்க முடிகிறது. ஆராய்ச்சியில் கண்ட உண்மை இது.

*ஆமைக்கு பல் கிடையாது. கனத்த ஈறு போன்ற அமைப்பாலேயே அது உணவுகளைச் சுவைத்து விழுங்குகிறது.

*முதலைக்கு மூக்கிலும் பல் உண்டு. முட்டைக்குள் உள்ள முதலைக்குட்டி மூக்கில் உள்ள பல்லால் உடைத்துக் கொண்டுதான் வெளியே வரும்.

*பிறக்கும்போது 1 பவுண்டு எடையுள்ள கரடிக்குட்டி ஒரு வயதை அடையும் போது அதன் எடை 100 பவுண்டாகி விடுகிறது.

*உணவு, நீர் எதுவும் இன்றி 15 நாட்கள் தாக்குப்பிடிக்கும் சக்தி குதிரைக்கு உண்டு.ஒரு வருடத்தில் தன் எடையைப் போல் பத்து மடங்கு உணவை குதிரை உட்கொள்கிறது.

*பெருங்குடல் புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் 2003ல் 57,000பேர் இறந்தனர். இதே காலத்தில் இந்த நோயினால் 150,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்த இடத்தை இந்த நோய் பெறுகிறது.

*முன்னைய பிரிட்டீஷ் பிரதமர் சர்ச்சில் வளர்த்த கிளி ஒன்று இன்றும் உயிரோடு உள்ளது. சார்லி என்ற பெயருடைய அதற்கு 104 வயதாகிறது.

*பிரிட்டனைச் சேர்ந்த சோதனைச்சாலை தொழில்நுட்ப நிபுணரான ஜூலிவார்ட் என்ற 40வயது பெண்மணிக்கு முதல் பிரசவத்தில் ஒரு குழந்தையும் இரண்டாவது பிரசவத்தில் இரண்டு குழந்தைகளும் மூன்றாவது பிரசவத்தில் மூன்று குழந்தைகளும் பிறந்தன.

*மனோரஞ்சிதப் பூவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் வழங்கப்படும் பெயர் "யாங்- யாலாங்". அதாவது 'பூக்களில் இதுவே பூ' என்று பெயர்.

*குவைத் என்றால் அரபி மொழியில் "சின்னக் கோட்டை".

*நமது நகம் சராசரியாக நாளொன்றுக்கு 1/250அங்குலம் வளர்கிறது.

*பிரான்ஸ் நாட்டில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்றில் எடை பார்க்கும் எந்திரம் ஒன்று இருக்கிறது. ரொம்பவும் குண்டான பெண்கள் ஏறிநின்றால், "மன்னிக்கவும், தங்கள் எடை......" என்ற சீட்டு வருகிறது.

*அமெரிக்காவில் வெஸ்ட் ரஞ்சு நகரில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு நினைவுக்கூடம் ஒன்று இருக்கிறது. அங்கே அவர் விஞ்ஞானக் குறிப்புகள் எழுதிய நோட்டுப் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். மொத்தம் 25,000 நோட்டுப் புத்தகங்கள்.

*மேற்கிந்தியத் தீவுகளில் முன்பெல்லாம் கீரிப்பிள்ளை கிடையாது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வளர்த்தார்கள். எதற்குத் தெரியுமா? பாம்புகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் அவற்றை ஒழிக்க
*தொடரும்...

Sunday, 5 February 2012

கருவிகளும் பயன்களும்

1. ஏரோமீட்டர் (Aerometer)- காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

2. அம்மீட்டர் (Ammeter)- மின்சாரத்தின் அளவீட்டை கணக்கிடுவது.

3. ஆடியோமீட்டர் (Audiometer)- மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

4. போலோமீட்டர் (Bolometer)- வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

5. கிரையோமீட்டர் (Cryometer)- குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

6. எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)- மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

7. மேனோமீட்டர் (Manometer)- வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

8. டோனோமீட்டர் (Tonometer)- ஒலியின் அளவை அளவிடும் கருவி.

9. வெர்னியர் (Vernier)- சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

10. பைரோமீட்டர் (Pyrometer) - அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

11. பாத்தோமீட்டர் (Fathometer)- ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

12. டைனமோ (Dynamo)- எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

13. வேவ்மீட்டர் (Wavemeter)- ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.

14. பிளானிமீட்டர் (Planimeter)- பரப்பை அளவிடும் கருவி.

15. ரெக்டிஃபையர் (Rectifier)- ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

16. டென்சிமீட்டர் (Tensimeter)- ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

எதைப்பற்றியது?

1. பேடாலஜி (Pedology)- மண் அறிவியல் குறித்த படிப்பு.

2. பெட்ராலஜி (Petrology)- பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

3. சூஜியோகிராபி (Zoogerogrphy)- பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

4. சிஸ்மோலஜி (Seismology)- பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

5. ஹைட்ராலஜி (Hydrology)- பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

6. கிளைமட்டாலஜி (Climatology)- சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

7. பயோ ஜியோகிராபி (Biogeography)- பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

எங்கேஅதிக உற்பத்தி?

1. ஆப்பிள் - இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர்.

2. வாழைப்பழம் - குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளம்.

3. இஞ்சி - கேரளம், மேகாலயா.

4. கோகோ - கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு.

5. திராட்சை - மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம்.

6. மாம்பழம் - உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு.

7. ஆரஞ்சு - மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, மேகலாயா.

8. மிளகு - கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு

9. அன்னாசி பழம் - அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், திரிபுரா.

10 .ஏலக்காய் - கர்நாடகம், சிக்கிம்,கேரளம், தமிழ்நாடு.

11. முந்திரி - கேரளம், ஆந்திரம்.

எந்தத் தொழிற்சாலை எங்கே?

1. ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் - ருப்னாராய்பூர் (மேற்கு வங்கம்).

2. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் – பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ.

3. பாரத் அலுமினியம் நிறுவனம் - சட்டீஸ்கர், மேற்கு வங்கம்.

4. ஹிந்துஸ்தான் அலுமினியம் – ரேனுகோட் (உத்தரப் பிரதேசம்).

5. இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ் – பெங்களூரு.

6. எச்.எம்.டி. வாட்ச் – பெங்களூரு.

7. நேஷனல் நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர் மில்ஸ் – நேபாநகர்.

8. நேஷனல் பெர்ட்டிலைசர் லிமிட்டெட் – நங்கால், பட்டின்டா, பானிப்பட், விஜய்பூர்.

9. ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிட்டெட் - மகாராஷ்டிரம் மற்றும் கொச்சி.

10. ஃபெர்ட்டிலைசர் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா - சிந்திரி, கோரக்பூர், ராமகுண்டம்.

அணைகளும் மாநிலங்களும்

1. நாகர்ஜூன சாகர் நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம் ) -
கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.

2. கக்கார்பாரா நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம்)-
தபதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது.

3. கோஷி நீர்த்தேக்கம் (பீகார் மாநிலம்)-
கோஷி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும், நீர்மின்சக்தித் திட்டத்துக்கும் இந்த நீர்த்தேக்கம் பயன்படுகிறது.

4. சபரிகிரி நீர்த்தேக்கம் (கேரள மாநிலம்)-
பம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.

5. சாராவதி நீர்த்தேக்கம் (கர்நாடக மாநிலம்)-
ஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி உற்பத்திக்காக இத்திட்டம் பயன்படுகிறது.

6. மகாநதி டெல்டா நீர்த்தேக்கம் (ஒரிசா மாநிலம்)-
மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக படுகிறது

7. பக்ராநங்கல் நீர்த்தேக்கம் (ஹிமாச்சலப் பிரதேசம்)-
சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில் கட்டப்பட்டுள்ளது, விவசாயம், நீர்மின்சக்தி உற்பத்திக்காக இது பயன்படுகிறது.

8. தாமோதர் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் –
தாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், இந்த அணையின் நீரை மேற்கு வங்களாமும் பகிர்ந்துகொள்கிறது. வெள்ள நீரை தடுப்பதற்காகவும்,விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது.

9. சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் –
நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெறுகின்றன. விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இது பயன்படுகிறது.

10. மேட்டூர் (தமிழ்நாடு)-
காவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி மற்றும் விவசாயத்திற்காக பயன்படுகிறது.

Saturday, 4 February 2012

விளங்காத படிப்பும், விளங்கவைக்கும் அரசியலும்

கடந்த வாரம் வெள்ளியன்று +2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. பத்திரிக்கைகளில் மாநில வாரியாக, மாவட்ட வாரியாக முதலிடம் வென்ற மாணவ மாணவிகளின் புகைப்படங்கள் மின்னுகின்றன. மாநில தகுதி பெற்ற நபர்களின் செவ்விகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டன. “நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன், இஞ்சினியராகுவேன், ஐஏஎஸ் ஆவது தான் லட்சியம்”

அதிக மதிப்பெண் பெற்றோரை வாழ்த்த நான் என்னளவில் தயராயில்லை, காரணம் ஏன்பலர் குறைவான மதிப்பெண் வாங்கினார்கள் எனும் போது, அதிக மதிப்பெண்களைக்காணும் போது என்னையறியாமல் அதன் மீது வெறுப்புதான் வருகிறது. பக்கத்து வீட்டிலோ அல்லது தெரிந்தவர்கள் வீட்டிலோ உள்ள பிள்ளைகள் தன் மகன்/மகளை விட அதிக மதிப்பெண் வாங்கும் போது நடக்கின்ற விசயம் எல்லோரும் அறிந்ததே.

காரணம் தவறு செய்து விட்டான் / ள். அது மன்னிக்க முடியாத தவறு. ஆம் அப்படி ஒரு தவறு. சரியாக மனப்பாடம் செய்யத் தெரியாததால் நேர்ந்த தவறு அது. உருத்தட்ட தெரியாததால் நேர்ந்த தவறு அது. இங்கே தவறு செய்ய நேர்ந்ததால் இனி அவ்வளவுதான் வாழ்க்கை.

தகுதியற்றவர்களெல்லாம் அறிவுரைக்கு வரிசையாய் நிற்பார்கள். தேர்வுகளில் தோல்வியுற்றவர்களை விட மதிப்பெண் குறைவாக வாங்குவோரின் மன நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.

தோல்வியடைந்து விட்டால் வேறு வழியில்லை மறு தேர்வுதான் வழியில்லை. இப்போதுதான் உடனே நடக்கிறது மறுதேர்வு, முன்பெல்லாம் ஒரு வருடத்தை தொலைக்க வேண்டியதுதான். இம்ப்ரூவ்மெண்ட் என்பது கூட 12 வகுப்பில்தான். பத்தாம் வகுப்பின் தேர்வு முடிவுகள் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்று சொல்லுகிறார்கள். ஆம் மதிப்பெண் குறைவெனில் முதல் பிரிவு கிடைக்காது, பள்ளியே பார்த்து ஏதாவதென்று பிச்சை போடும்.

தேர்வில் தோல்வியடைந்தவர்கள் நாளிதழ்களைப்பார்த்தவுடன் தெரிந்துவிடும் என்பதால் வெளியே வரமாட்டார்கள். மதிப்பெண் குறைவானவர்களோ அவர்கள் தகுதி பள்ளியில் ஒட்டியிருக்கும் மார்க் லிஸ்டை பார்த்தவுடந்தான் தெரியும். மதிப்பெண் குறைவு என்றவுடன் தெரிந்த முகங்கள் யாராவது தெரிந்தால் ஓடி ஒளியும். யாராவது மார்க் கேட்டால் என்ன சொல்வது தெரியாது? மனம் இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்துகிடக்கும்.

அதிக மார்க் வாங்கிய ஜீவிகள் பள்ளிக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். தெரிந்தவனையெல்லாம் பார்த்து மதிப்பெண் விசாரித்து கொண்டிருப்பார்கள். மதிப்பெண்ணை கூட்டி சொன்னால் இதுதானே உன் மதிப்பெண் என்று எழுதி வைத்திருப்ப்பதை சொல்லுவார்கள். இப்படி தலை கவிழ்ந்த எத்தையோ பேரை நான் பார்த்திருக்கிறேன்.

வீட்டிலோ நிலைமை நிலை பூடாகரமாகிக்கொண்டிருக்கும். தந்தை சொல்லுவார்”ஏன் நாயாட்டம் தின்னத்தெரியுதுல்ல என்னடா மார்க் வாங்கியிருக்க, அய்யோ என் பேரை கெடுத்துட்டு வந்து நிக்குதே, தாய் தல்யில் அடித்துக்கொண்டு அழுவார் பக்கத்து வீட்டு முருகேசன் உன்னமாதிரிதாண்டா ஸ்கூலுக்கு போறான், அவன் என்னடா மார்க்கு? அவன் எப்புடிடா மார்க் வாங்குனான்? அவன் மூத்திரத்தை வாங்கிகுடி”.

அவன் மூத்திரத்தை வாங்கிக்குடி இது புகழ்பெற்ற வாசகம், ஊர் கடந்து, மாவட்டம் கடந்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவிக்கிடக்கின்ற வார்த்தை. அவ்வார்த்தையை பத்து பேர் முன் சொல்லும் போது வருகின்ற அவமானம் அதுதான் பலருக்கும் முதல் அவமானமாக இருக்கும். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வரும், , வெடிக்கும் அழுகையை கைகள் பொத்தி பொத்தி அடக்கும். ஏதும் செய்ய இயலாமையால் தலை குணிந்து கிடக்கும் முகம் .

ஆதரவாய் சொல்பவர்கள் கூட ஒன்றை அழுத்திச்சொல்லுவார்கள்”என்ன பண்றது தப்பு பண்ணிட்டே”. இப்போது நீ மேற் கொண்டு என்ன படிக்க வேண்டும் என்பது முடிவு செய்யும் அதிகாரம் உனக்கு இல்லை. சொந்தக்காரன் வந்து தன் மகனின் பெருமை பீற்றிக்கொள்ளுவான். வீட்டிலே காரியக்கமிட்டி கூட்டம் கூடும் இந்த தண்டத்தை என்ன மேற்கொண்டு படிக்க வைக்கலாம்? ஆலோசனைகள் வெளியார்களிடமிருந்தும் வரவேற்கபடும்.பின்னர் எடுத்த முடிவின் படி ஏதோ ஒன்றில் சேர்க்கவைக்கப்படுவான்/ள்.

பத்தாவது மற்றும் பணிரெண்டாவதில் அதிக மதிப்பெண் எடுத்ததாலேயே அவன் உயர்ந்தவனாகிவிட்டானா? குறைவான மதிப்பெண் வாங்கியதாலே தாழ்ந்தவனாகிவிடுவானா? மேற்கொண்டு படிக்கப்போகும் இடத்தில் முதல் நாள் ஆசிரியர் கேட்பார்.”யார் எவ்வளவு மார்க் சொல்லுங்க?” மறுபடியும் ஆரம்பித்துவிடும் வேதனை.

பத்தாவதிலேயே அதிக மதிப்பெண் எடுத்த அனைவராலேயும் +2 ல் அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை, +2-ல் அதிக மதிப்பெண் எடுத்த அனைருமே பட்டப்படிப்புகளில் / பட்டயப்படிப்புக்களில் அதிகம் சாதித்து விடுவதில்லை. அறிவிற்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. மனனம் செய்யும் திறமை தான் இதை தீர்மானிக்கிறது.

முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு அரிசி விலை கிலோ எவ்வளவென்றால் தெரிவதில்லை.கான்வெண்டில் கிழித்த மாணவனுக்கு கடைக்கு போய் மீன் வாங்கிவிட்டு வர தெரிவதில்லை. ஏன் அரிசி விலை ஏறியது, ஏன் விவசாயம் அழிந்து போனது என எதுவுமே தெரியாமல் / தெரியவைக்கப்படாமல் தான் அனைத்து மாணவர்களுமே வளர்க்கப்படுகிறார்கள். மக்களைப்பற்றி கவலைப்படாத சமூகம் அடிமைத்தனமான சமூகம் உருவாக்கப்படுகின்றது.
இதில் அதிக மார்க் எடுத்தவன் உயர்ந்தவன் குறைந்த மார்க் எடுத்தவன்

தாழ்ந்தவன் என்பதுதான் வேடிக்கை. இந்தக் கல்விமூறையால் எதை மாற்ற முடியும் உன்னால்? ஏன் உன்னுடைய வாழ்வுக்கான செலவை உன் கல்விமூறையால் மாற்ற முடியுமா? அழிந்து போன விவசாயத்தை மாற்ற முடியுமா ? எதையுமே மாற்ற முடியாத இந்தப்படிப்பு முறை உயர்ந்ததா என்ன? இப்படி மனிதனின் வாழ்வுக்கு தம்புடி அளவுக்குக்கூட பயன் படாத இந்தப்படிப்பு முறையில் அதிக மதிப்பெண் எடுத்தால் என்ன?

குறைவான மதிப்பெண் எடுத்ததற்காக இக்கல்விமுறை மீது வராத கோபம் தனிப்பட்ட மாணவர் மீது வருகிறது. லட்சக்கணக்கானோரில் சிலர்தான் அதிக மதிப்பெண் எடுக்க முடிகிறதெனில் அது யாருடைய தவறு கல்விமுறாஇயின் மீதா? அல்லது அதை படித்த மாணவர்கள் மீதா ? சிஅல்ர் கேட்பார்கள் அவன் எப்படி படித்தான். அந்த அவனோ அல்லது அவளோ நூற்றிலே எத்தனை பேர். ஆக நூற்றுக்கு அல்லது ஐம்பதிற்கு ஒரு மாணவன்தான் அதிக மதிப்பெண் பெற முடியுமெனில் அக்கல்வி முறை வகுப்பில் நூற்றுக்கு 10 பேருக்கா அல்லது 90 பேருக்கா?

பத்தாவதெனில் 375 மதிப்பெண்தான் பார்டர் பணிரெண்டாவதில் 950 தான் பார்டர் அதற்கு கீழ் மதிப்பெண் எடுத்ததெல்லாம் வேஸ்ட் இதுதான் சமூகத்தின் பார்வை. என்னுடன் படித்த மாணவன் பத்தாவதில் மதிப்பெண் குறைவு ஆனால் டிப்மோவில் 92 % மதிப்பெண் வாங்கினான். பின்னர் பி.இ. முடித்தும் விட்டான். அதனால் அவன் உயர்ந்தவனல்ல காரணம் அவன் இன்னமும் அடிமையில் சுகம் காணுபவன். அவன் இன்னமும் மக்களைப்பற்றி கவலைப்படாதவன். ஆக படிப்பிற்கும் வாழ்வுக்கும் சுயமரியாதைக்கும் துளியும் சம்பந்தமிருப்பதாய் தெரியவில்லை.

எது தகுதிக்குறைவு?

இந்த முறை தேர்வு முடிவுகள் வந்ததுமே சிலர் ஆங்காங்கு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்கொலை எனபது “அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது ,இனிமேல் ஒன்றும் இல்லை என்ற சிந்தனை” மதிப்பெண் குறைவையும் தோல்வியடைவதையும் மாபெரும் குறையாக காட்டும் சமூகம் தான் முதல் குற்றவாளி. மதிப்பெண் குறைவு/ தோல்வி எனில் வெளியில் தலை காட்ட முடியாது என்ற நிலைமைக்கு என்ன காரணம்? மாணவர்களுக்கு சமூகத்தைப்பற்றிய அறிவு புகட்டப்படாமலிருப்பதே இதன் காரணம். சின்ன மருது புலியை அடக்கியதான் மூன்றாம் வகுப்பு பாடங்களில் வந்தது. அவரின் திருச்சிபிரகடனம் வாத்தியாருக்கே தெரிவதில்லை. இங்கு ஆசிரியரை இழுக்கக் காரணம் அந்த 3-ம் வகுப்பு படித்த மாணவன் தானே பிற்காலத்தில் ஆசிரியராகிறான்.

மாபெரும் துரோகி காந்தி இந்த நாட்டின் தேசத்தந்தையாக மாணவர்களின் மனதில் பதியவைக்கப்படுகிறது. புரட்சியாளன் பகத்சிங் புறக்கணிக்கப்படுகிறார்.அண்ணா, கருணா நிதி, கூத்தாடி எம்ஜிஆர் செயா பாடங்கள் படிப்பாக வருகின்றன. ஆதிகால சங்க இலக்கியங்கள் என்ற பேரில் எது தேவை எது தேவையில்லை என்பதெல்லாம் தெரிவதில்லை. மனப்பாடம் செய், மனப்பாடம் செய் இதுதான் தேர்வில் வெற்றி பெற உத்தி.

பத்தாவதில் பீட்டர் கையை வைத்து சுவற்றில் வழியும் நீரை அடைப்பான். அது ஒரு கதை. அந்தக்கதையை கதையாக எப்படி எழுதுவதென்று யாரும் சொல்லித்தரவில்லை. மனப்பாடம் செய்,மனப்பாடம் செய் இதை த்தா சொன்னார்கள். மனிதனின் மூளையை சிந்திக்கச் சொல்லவில்லை. மனப்பாடம் செய்ய மட்டுமே கற்றுக்கொடுத்தார்கள். போராட்டம் தவறென்றார்கள். அரசியல் தவறென்றார்கள்.

என் அன்பு மாணவனே,

போராடும் இவ்வுலகில் போராடாமல் இருப்பதல்லவா தகுதிக்குறைவு?, மக்களைப்பற்றிய அக்கறையின்றி எதைப்பற்றி படிக்கிறாய்? உன் வாழ்வுக்கு, என் வாழ்வுக்கும் மக்களின் வாழ்வுக்கும் துளியும் பயன் படாத இப்படிப்பை தகுதியாய் நிர்ணயித்திருக்கும் இச்சமூகத்தை எதிர்க்காமலிருப்பதல்லவா தகுதிக்குறைவு.

அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன, தனியார் பள்ளிகள் நன்கொடை போதவில்லை என்று பள்ளிகளை இழுத்து மூடுகின்றன.அரசுக்கல்லூரிகள் புதைகுழிக்கு தயராயிருக்கின்றன, பொறியியலெனில் லட்சங்கள், மருத்துவத்திற்கோ கோடிகள் எங்கும் பணம் தான் எதிலும் பணம்தான். பத்தாவதிலும் பனிரெண்டாவதிலும் முதல் பாடம் எடுத்தவன் தானா இன்று கல்விக்கட்டணங்களை குறைக்கக்கோரும் களத்தில் நிற்கிறான்?அது நிர்ணயிப்பதல்ல, சமுகத்தின் மீதான அக்கறை தான் போராடத் துண்டுகிறது

படிக்கும் மாணவனுக்கு எதற்கு அரசியல்? படிக்கும் மாணவனுக்கு அல்லாமல் வேறு யாருக்கு? உன் தாயின் தாலி கல்லூரி தாளாளரின் பற்களில் மின்னும் வேளையில் உன்னையன்றி யார் போராடுவார்கள்? இன்ஸ்டால்மெண்ட் கட்டணத்தை கட்ட முடியாமல் நீ வேதனையுறுவதை, வெளியில் நிற்க வைத்து அவமானப்படுவதை உன்னையன்றி யார் அறிவார்? உனக்கு உன்னைத்தவிர யார் போராட முடியும்?

பணமின்றி படிப்பதற்கு படிப்பொன்று இருக்கிறது. ஆம் மக்களைப்படி, அவர்களிடமிருந்து கல், அவர்களுக்கே கற்றுக்கொடு, அதற்காக உன்னை படிக்க வேண்டாமென்று சொல்லவில்லை. இந்த விளங்காத படிப்பை விளங்க வைக்க மக்களையும் சேர்த்துப்படி. மதிப்பெண் குறைவென்றும் தேர்வில் தோல்வியுற்றனென்றும் உன்னை கிண்டலடித்தவர்களை எதிர்த்து , போராத அடிமைகளே என்று நீ எள்ளி நகையாடு. இனி நீ தான் ஆசிரியன்.

(தாலி – இதைப்புனிதமாக கூறவில்லை, பலர் கடைசியாய் வேறு வழியின்று வைக்கும் ஒரு பொருள் என்ற அளவில் மட்டும்)

Followers