KILIYANUR ONLINE

Wednesday, 29 December 2010

டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள் -

தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்:

பல தரப்பு செய்திகளைக் கொண்ட உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை தொடர்ந்துப் படிக்க வேண்டும். உங்கள் ஆங்கில வார்த்தை வளத்தை அதிகரித்து கொள்ளவும். மேலும் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள் பார்ப்பதன் மூலமும், ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதன் மூலமும் புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.

இதைத்தவிர இணையத்தையும் பயன்படுத்தவும். விரிவுரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முக்கியமான குறிப்புகளை எடுக்க முயலவும். ஆங்கிலம் பேசும் பயிற்சிக்கு, அதை தாய்மொழியாக கொண்டவர்களிடமோ அல்லது முழுவதும் ஆங்கிலம் பேசும் உறுப்பினர்களை கொண்ட சங்கத்திலோ இணையவும். குறிப்பெடுத்துக்கொண்டு பேச பழகவும். எழுத்து பயிற்சிக்காக, சில குறிப்பிட்ட தலைப்புகளை தேர்வு செய்துகொண்டு, அதைப்பற்றி எழுதி பழகவும். வார்த்தை வளத்தை அதிகரித்து, நல்ல இலக்கண அறிவையும் பெற்றால், எழுதும்போது அவற்றை நீங்கள் இயல்பாக பயன்படுத்த முடியும்.

மேலும் நீங்கள் ஒரு வெளிநாட்டு கல்வி நிலையத்தில் விண்ணப்பித்து, விண்ணப்பத்தின் கடைசி நாளுக்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்பாக இந்த தேர்வை எழுதினால், உங்கள் மதிப்பெண் சரியான நேரத்தில் கல்வி நிலையத்தை சென்றடையும். இதைத்தவிர தேர்வுத்தேதிக்கு குறைந்தபட்சம் 8 வாரங்களுக்கு முன்பாக முறைப்படி தேர்வுக்கு தயாராக தொடங்க வேண்டும். ஆலோசனைகளை சரியாக கடைப்பிடித்து முயலும்பட்சத்தில், வெற்றி உங்கள் பக்கம் நிச்சயம் இருக்கும்.

கேள்வித்தாள் முறைகள்
படித்தல் தேர்வு
3-5 பத்திகள்(ஒவ்வொன்றும் 700௦௦ வார்த்தைகள்
வரை கொண்டிருக்கும்)
ஒவ்வொன்றிலும் 12-14 கேள்விகள்,
60௦-100௦௦ நிமிடங்கள்.

மதிப்பீட்டு அம்சங்கள்
பத்தியை புரிந்து படித்து பதில் அளிக்கும்
திறன், எண்ணங்களுக்கு இடையிலான ஒற்றுமையை
புரிந்துகொள்ளும் திறன், முக்கிய
தகவல்களையும், எண்ணங்களையும்
பிரிக்கும் திறன் அறிதல்.

கவனித்தல் தேர்வு
4-6 விரிவுரைகள்(ஒவ்வொன்றும் 3-5 நிமிடங்கள்)
ஒவ்வொன்றிலும் 6 கேள்விகள், 2-3
கலந்துரையாடல்கள்(3 நிமிடங்கள்),
கலந்துரையாடலுக்கு 5 கேள்விகள், 60-90 நிமிடங்கள்.

மதிப்பீட்டு அம்சங்கள்
பரந்த அளவில்
ஆங்கில பேச்சை புரிந்துகொள்ளும் திறன்,
முக்கிய குறிப்புகளை விரிவாக்கும் திறன்



10 நிமிட இடைவேளை
பேசுதல் தேர்வு
6 தலைப்புகள், 2 தனியானவை,
4 இணைக்கப்பட்டவை.



மதிப்பீட்டு அம்சங்கள்
சாதாரணமாக பள்ளி, கல்லூரிகளில்
பேசுவதைப்போல ஆங்கிலத்தில்
பேசும் திறன், உங்கள் கருத்துக்களை
ஆங்கிலத்தில் வெளிப்படுத்தும் திறன் அறிதல்



எழுதுதல் தேர்வு
1 இணைக்கப்பட்ட பகுதி, 20 நிமிடங்கள்,
1 தனியான பகுதி, 30 நிமிடங்கள்.



மதிப்பீட்டு அம்சங்கள்
கல்வி நடையில் ஆங்கிலத்தில் எழுதும் திறன் அறிதல்.
நிறுவனங்களில் ஏற்று கொள்ளப்படும்

http://kalvimalar.dinamalar.com/tamil/NewsDetails.asp?id=8807

No comments:

Followers