KILIYANUR ONLINE

Sunday 19 December 2010

ஒருவரது மானம் எந்த அளவிற்கு முக்கியம்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொறாமை கொள்ளாதீர்கள்.

(பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள்.

கோபம் கொள்ளாதீர்கள்.

பிணங்கிக்கொள்ளாதீர்கள்.
ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம்.

(மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
ஒரு முஸ்ரி­ம் மற்றொரு முஸ்­ரிமுக்குச் சகோதரர் ஆவார்.

அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம்.

இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள்.
ஒருவர் தம் சகோதர முஸ்ரிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லி­முக்கும் மற்ற உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.
அபூஹுரைரா (ர­ரி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்­லிம் (5010)

No comments:

Followers