KILIYANUR ONLINE

Friday 3 December 2010

ஞானக் கேள்வி

குதுபுகள் திலகம் யாஸீன் மெளலானா (ரலி) அவர்கள் வாழ்வில்........

ஒருவிடுத்தம் தங்களின் ஆசிரியராக (உஸ்தாதாக) இருந்தவரான பெரியார் ஒருவரிடத்துத் தங்களுக்கேற்பட்ட சில சந்தேகங்களை நீக்கிக் கொள்வான் வேண்டி ஆங்குள்ள அவர்களின் (மதுரஸா) பள்ளிக்கூடத்துக்குச் சென்று கீழ் வருமாறு வினவினார்கள்.

(அர்வாஹ்) ஆத்தும உலகில் நாம் சஞ்சாரஞ் செய்து கொண்டிருக்கும்போது எந்த வகையான விதிவிலக்குகளும் சட்ட திட்டங்களும் பாபம் புண்ணியங்களும் தண்டனைகளும் இருக்கவில்லையே ஏன்?

இறைவன் இவ்வாறு ஆலமுன் நாஸூத்தாகிய ஜட உலகினுக்கு எம்மையனுப்பிச் சட்ட திட்டங்களை யயல்லாம் வகுத்துப் பாபம் புண்ணியங்களை யயல்லாம் உண்டு பண்ணினான்?

நரகம் சுவர்க்கம் ஆகியவைகளை நன்மை தீமைகளைச் செய்பவர்களுக்குக் கெனப் படைத்துத் தண்டனைகளையும் உண்டு பண்ணியுள்ளான். ஏன்?

எம்மை அர்வாஹுடைய (ஆத்தும) உலகிலேயே விட்டிருந்தால் இந்தத் துன்பமில்லையே? என்று கேட்டார்கள். (இதற்கு வெளிப்படையான விளக்கம் வேறுண்டு. இக்கருத்து ஆத்தும தாகங்கொண்டவர்களின் தாகத்தைத் தணிப்பதல்ல. (ஆதலால்) மெளலானா நாயகம் அவர்கள் தாற்பரியத்தோடு கூடிய அந்தரங்க விளக்கத்தையே பெரிதும் விழைந்தார்கள். தங்களாசிரியரவர்கள், வலீமார்களுடன் தொடர்பு கொண்டு ஆத்துமார்த்த ஞானம் பெற்றிருந்த போதும் இத்தகைய உட்கருத்துப் பொதிந்த ஆத்ம ஞான விளக்கங்களுக்குத் தங்களால் விடைபகரவியலவில்லையயன்றும் இச்சந்தேகத்தினை நீக்க வல்லவர் ஒருவரிருக்கிறார். அவர்களிடமே போய் விளங்கிக் கொள்ளுமாறும் அவர்களைக் காட்டித்தருவார் என்றும் கூறினார்கள்.

இன்னொரு பொழுது, மெளலானா நாயகம் அவர்கள் தங்கள் (உஸ்தாது) ஆசிரியர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் மதரஸா (கலைக்கூடம்) உள்ளே நுழைந்தார். அவர் நுழைந்த அக்கணமே. மிக்க மரியாதையுடனும் பணிவுடனும் அவர் பாற்சென்று நின்றார்கள். அப்போது மெளலானா நாயகம் அவர்களைச் சுட்டிக்காட்டி உஸ்தாது அவர்களிடம் வந்தபோது மெளலானா நாயகம் அவர்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். சில நிமிடங்களில் அவர்களும் சென்று விட்டார்கள். உஸ்தாது (ஆசிரியர்) அவர்கள் திரும்பி மெளலானா நாயகம் அவர்களிடம் வந்தபோது “நீங்கள் மரியாதையாக நின்று பேசிக் கொண்டிருந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். அப்போது, “அவர்கள் தாம் உங்கள் இத்தகைய சந்தேகங்களைக் களைய வல்லவர்” என்று விடை பகர்ந்தார்கள். அப்போது அங்கே திடீரென வந்தவர்கள் கெளபீனம் போன்ற தொன்றை அணிந்திருந்தார்கள். அதனாலே மெளலானா நாயகம் அவர்கள் “யாது பகர்கின்றீர்கள்?” அவர் சரீஅத் (சரியை) முறைக்கு முரணாக (ஹராமாக)க் கொப்பூழும் முழங்காலும் மறைய ஆடைய அணியாது கெளபீனமல்லவா அணிந்திருந்தார். அவர் இதில் என்ன விளக்கம் கொடுக்கப் போகின்றார்? என்று கேட்டார்கள். அதற்கு உஸ்தாது அவர்கள் “அவர்கள் தாம் இக்காலத்தின் குதுபு (மகான்) நீங்கள் அவர்களிடமே தான் உங்கள் இந்தச் சந்தேகங்களைக் கேட்டுக் களைந்து கொள்ளல் வேண்டும்” என்று திடமாகக் கூறி விட்டார்கள். ஹக்கை அறியும் அறிவான ஆத்மீக தாகம் தங்களிலிருந்தமையால் சற்று மெளலானா நாயகம் அவர்களின் திருவுள்ளம் தெளிவு பெற்றது. எனவே, இதனால் ஹக்கின்பால் செல்லத்தடுக்கும் ஒரு பெரும் அணை இடித்துத் துகளாக்கப்பட்டது எனக்கூறலாம்...............................................................


ஆதியாம் இக்கருத்துக்களின் படியும், ஆத்துமார்த்த ஞான (செய்கு) ஒருவரிடத்துச் செல்வோர் தாம் கற்ற கலைகளனைத்தும் மறந்தவராய் தாமெதுவுமே அறியாது முதன் முதல் கல்வி கற்கச் செல்லும் குழந்தை போன்று செல்ல வேண்டுமென்ற நியதியைத் தாமறிந்த ஞாபகத்தினாலும், தம் (உஸ்தாது) ஆசிரியர் கூறிய கூற்றை மனதிற் கொண்டு தாம் யாரிடம் இச்சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் கூறினாரோ அவரைச் சந்திக்க விருப்பங்கொண்டார்கள். பின்னர் அம்மகானை எங்கு, எப்படிச் சந்திக்க வியலும் என்று கேட்டார்கள். அப்போது, அம்மகான் மஃரிப் (சூரியாத்தமனத்துக்குப்பின்) வேளையில் இன்ன இடத்தில் (இடத்தை விளக்கிக்காட்டி மையவாடியில்) மஃரிபுத் தொழுகை (சூரியாத்தமனத்தின்பின் வணங்கும் வணக்கம்) தொழுது கொண்டிருப்பார்கள். முடிந்ததும் குறிப்பிட்ட ஓரிடத்துக்கு நடந்து செல்வார்கள். போய் ஆங்குள்ள ஒரு மரத்தின்கீழ் முஷாஹதா (இறைதரிசனை)வுக்காக அமர்வார்கள். அப்போது நீங்கள் அவர்களை மரியாதையுடன் அமைதியாக அணுகிச் சந்தேகங்களைக் கேட்டு விளங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அவ்வாறே மெளலானா நாயகம் அவர்கள் பேராவல் மீக்கூர மஃரிபு வேளையில் ஆங்கண் சென்று பார்க்கையில் அம்மகான் வேறுடை தரித்துத் தொழுது முடித்துக் குறிப்பிட்டவாறு சென்று அம்மரத்தின்கீழ் இறை தரிசனை (முஷாஹதாவு)க்காக அமர்ந்தார்கள். அம்மகானைத் தொடர்ந்து சென்ற மெளலானா நாயகம் அமைதியுடனும், மரியாதையுடனும் அவரெதிரேயமர்ந்து மேற்கூறிய சந்தேகத்தைக் கேட்டார்கள். அம்மகான் திடீரெனத் திருவாய் மலர்ந்தருளிய சிறு விளக்கம் மெளலானா நாயகம் அவர்களுக்குத் திறம்பட விளங்கிற்று. சந்தேகம் நீங்கிற்று; உணர்வில் நிறைஞானம் பிறங்கிற்று. இவ்வாறு இத்தகைய மகான்மார் பலருடன் தொடர்புகொண்டார்கள்.


-குத்புகள் திலகம் யாஸீன் மெளலானா (ரலி) நூலிலிருந்து...

No comments:

Followers