19.12.2010 அனைத்துப் பத்திரிக்கைகளிலும் பரபரப்பான செய்தியாக ராகுல் காந்தி அவர்களின் தனிப்பட்ட சம்பாசனையும், அதற்கு பதிலளித்தாற்போல பி.ஜே.பியும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் தெரிவித்த கருத்துக்களும் வெளியிட்டன. ராகுல் காந்தி, மத்தியில் அரசாளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர், மற்றும் வருங்கால பிரதமராவதிற்கு எல்லா தகுதியும் பெற்றவர் என்று இந்திய பிரதமரால் வர்ணிக்கப் பட்டவர் ஆவார்.
அப்படி யென்ன ராகுல் காந்தி சொன்னார்?
இந்திய பிரதமர் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ந்தேதி அளித்த விருந்தில் கலந்து கொண்ட அமெரிக்க தூதர் டிமேட்டி ரோமரிடம் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்த போது, ‘இந்தியாவில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு துணை போனதில்லை எனவும், அவர்கள் தேசியத்திலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள், ‘லஸ்கர் இ தொய்பா’ என்ற தீவிரவாதிகளை விட இந்து தீவிரவாதிகளால்தான் மிகவும் இந்திய தேசிய மக்களுக்கு அச்சுறுத்தல்’ இருப்பதாகவும் கூறினார் என்று அமெரிக்க தூதர் தனது நாட்டு அரசுக்கு செய்தி அனுப்பியதாக ‘விக்கிலீக்’ நிறுவனம் வெளியிட்ட செய்தியில் வெளியாகி உள்ளது.
அது மட்டுமா நண்பர்களே?
இதற்கு முன்னால் இருந்த அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டு அனுப்பிய செய்தியும் இப்போது வெளியாகி உள்ளது. என்ன செய்தி அது என கேட்க ஆவல் உண்டாவது இயற்கையே! அது, ‘பிரிவினைவாதமும், மதத்தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களுக்கு பரவலான ஆதரவைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும், சமூகத்தில் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம் விரும்புகிறார்கள் எனவும் டேவிட் முல்போர்டு கூறியிருக்கிறார் என்றும் விக்கிலீக் செய்தி வெளியிட்டுள்ளது.
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ,எஸ்(ஓ)
No comments:
Post a Comment