நாம் நன்றாக இல்லை - காரணம்
நாம் ஒன்றாக இல்லை!
ஒரே இறை - எத்தனை இயக்கங்கள்!
ஒரே மறை - எத்தனை குழப்பங்கள்!
ஒரே பிறை - எத்தனை பெருநாட்கள்!
மார்க்கம் வலியுறுத்தும் பிரியம்
தெரியவில்லை நமக்கு!
மார்க்கத்தை வைத்தே பிரியத் தெரிகிறது!
மூமீன்கள் கண்ணாடி போன்றவர்கள்!
துவேச கற்களை வீசினோம்!
ஒவ்வொரு திசையிலும் சிதறினோம்!
காலமெல்லாம் நாம் கதறினோம்!
கபருஸ்தானாய் மாறும் ஆப்கானிஸ்தான்!
உணவின்றி மடியும் சோமாலியா!
பற்றி எரியும் பாலஸ்தீனம்!
உயிர்களின் புதைக்குழி காஷ்மீரின் சோகம்!
பாங்கோசை ஒலிக்கின்ற பூமியெங்கும் இரத்தம்
இருந்தும் திருந்தவில்லை நம் சித்தம்!
இஸ்லாமிய இயக்கங்களே! - நீங்கள்
வேற்றுமையில் ஒற்றுமைக்காண வேண்டாம்!
ஒற்றுமையில் வேற்றுமை என்ன? கூறுங்கள்!
இஸ்லாம்தான் பேரியக்கம் என்று
ஓர்குடையின் கீழ்நின்று
இவ்வுலகுக்கு உரக்கச் சொல்லுங்கள்!.
2 comments:
Naam onRaaka illai enRa kavithai mikavum NanRaaka irunthathu.ak kavithaiyai eluthiyavar peyarai veLiyittirukkalaam.
anpudan,
kiliyanur Rahuman Basheer
(Solai Haleel)
Abu Dhabi.
உங்கள் கருத்துக்கு நன்றி ஹலீல்.
அந்த கவிதையை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. கவிதை நன்றாக இருந்ததினால் பதிவு செய்தோம்.
நன்றி.
Post a Comment