பள்ளிகள் கல்லூரிகளில் உள்ள வேதியல் ஆய்வுக்கூடங்கள் பார்த்திருப்பீர்களே அது போலத்தான் இன்றைய நவீன சமையலறைகள் மாறி விட்டன. இயற்கை உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டோம். சூப்பர் மார்கெட் ஷெல்ஃப்களில் குவிந்து கிடக்கும் உணவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் சுவைக்காவும், நிறத்திற்காகவும் , கெடாமல் வைத்திருக்கவும் பலவித ஆபத்தான இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விளம்பரங்கள் சொல்லும் பச்சைப் பொய்களின் கவர்ச்சியில் மயங்கி வாய்க்குள் அள்ளித் திணித்து கொள்கிறோம். உணவுப்பொருட்களில் உண்டான வியாபாரப் போட்டியின் விளைவு இன்றைக்கு 100% தரமான இயற்கையான உணவு உண்பது என்பது குதிரைக்கொம்பு தான்.உணவில் சுவை கூட்டும் ரசாயனப்பொருட்களில் எந்த விதமான ஊட்டசத்தும் இல்லை . இவைதேவையற்றது, ஊட்ட சத்து சேர்க்கப்பட்டவை என கூறப்படும் உணவும் உண்மையில் பல இயற்கையான ஊட்ட ச்த்துகள் நீக்கப்பட்டு சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டது தான். பல உணவுப்பொருட்களில் இயற்கையான பொருட்களுக்கு பதில் அது போன்ற சுவை தரும் செயற்கையான சுவையூட்டிகள் மட்டுமே உள்ளன.
வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் பேன்களைக் கொல்ல பயன் படுத்தப்படும் பைப்பர் ஹோல் என்ற இராசயனப் பொருள் சேர்க்கப்படுகிறது.டின்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழங்களில் துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும் பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இது உடலுக்கு அதிகம் கேடானது.கடைகளில் கிடைக்கும் பலவகை ஆப்பிள் பழங்களின் தோலை நகத்தால் சிறிது நெருடிப்பார்த்தால் அதிலிருந்து மெழுகு உதிர்ந்து வரும். ஆப்பிள் கெடாமல் இருக்க தோலில் மெழுகு தடவி பேக் செய்கிறார்கள். நாம் அதை அப்படியே உண்கிறோம்.கேக்குகளில் எண்ணெய் உறையவைக்க சோடியம் அலுமினியம் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் உண்பதற்கு ஏற்றது அல்ல.
M2மாவை வெண்மையாகவும் உப்ப வைக்கவும் பிளீச்சிங் பவுடரும், பிற பவுடர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் உடல் நலத்திற்குத் தீமையே!வெண்ணெய் நீக்கப்பட்ட பால் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பால் நிறுவனங்கள் கலக்கும் ரசாயனப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க பல வித ஆபத்தான ரசாயன பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கிறார்கள். இதன் விளைவாக நாம் உண்ணும் அரிசி, பருப்பு, காய்கறிகளிலும் கான்சர், மலட்டுத்தன்மை உருவாக்கும் பூச்சிமருந்து எச்சங்கள் இருக்கின்றன. பழங்களை பழுக்கவைக்க கூட ரசாயனங்கள் உபயோகிக்கிறார்கள். இயற்கையான பூச்சி ஒழிப்பு முறையில் இயற்கையான உரம் இட்டு வளர்ந்த உணவுப்பொருளே சிறந்தது. இதற்கான திட்டங்களையும் ஊக்குவித்தலகளையும் பயிற்சியையும் அரசு விவசாயிகளுக்கு வழங்கி இயற்கையான உணவு எங்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.ஜெனெடிக் என்ஜினீயரிங்க் மூலம் பெறப்படும் புது விதமான உணவுப்பொருட்கள் மனித உடலில் உண்டாக்கும் பாதிப்புகளை அறிய பல காலமாகலாம். சரியான ஆராய்ச்சிமுடிவுகளை அறியாமலேயே அவற்றை சந்தைப்படுத்துவது காசு கொடுத்து வாங்கி உண்ணும் மக்கள உடலிலேயே உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சோதனைகளை நிகழ்த்துவதாகிறது.பொதுவாக உணவுப்பொருளில் சேர்க்கப்படும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சில பொருட்கள்:330 and E330 Citric Acid: இயற்கையான சிட்ரிக் ஆசிட் கெடுதல் இல்லை. ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் சிட்ரிக் ஆசிடில் அதன் தயாரிப்பு முறையின் போது அதிலிருந்து Sulfur மற்றும் Sulfites முழுமையாக நீக்கப்படா விட்டால் ஆஸ்த்மா, அலர்ஜி உண்டாக வாய்ப்புள்ளது. சிட்ரிக் ஆசிட் கலந்த பானம் அதிகம் அருந்துவது பற்களுக்கு கேடு. 924 & E924 Potassium Bromate (Agent used in Bleaching Flour): நரம்பு மண்டலம், சிறுநீரகம், அஜீரணம், மற்றும் புற்றுநோய்க் காரணி.
407 & E407 Carrageenan (Thickening & Stabilizing Agent) : இவை ஆஸ்த்மா, அல்சர், கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.Sucralose (Splenda): 40% thymus gland ஐ சுருங்கச்செய்வதாக சோதனை முடிவுகள் சொல்கின்றன. சிறுநீரகம் மற்றும் ஈரல் வீக்கம், மற்றும் ஈரலில் சுண்ணாம்பு சத்தை படியச்செய்கிறது. உண்ணத்தகுந்ததல்ல. கேசரிப் பவுடர் உடல் நலத்திற்கு நல்லதல்ல. வீட்டில் செய்யும் எந்த உணவிலும் நிறத்திற்காக கேசரிப்பவுடர் அல்லது புஷ் பவுடர் சேர்க்காதீர்கள்.குளிர் பானங்கள் மிட்டாய்களில் சேர்க்கப்படும் பல வித கவர்ச்சியான வண்ணங்கள் புற்று நோய், மூளைக்கட்டி, தைராய்ட், அட்ரீனல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.சாயங்கள்: Quinoline Yellow, Yellow , Sunset Yellow, Azorubine, Carmoisine, Amaranth, Ponceau, Brilliant Scarlet, Erythrosine, Allura Red, Patent Blue, Indigotine, இண்டிகோ கார்மினே ப்ரில்லியன்ட் ப்ளூ , Activated Vegetable Carbons, Brilliant Black154 Food Brown, Kipper Brown, Brown FK, Chocolate Brown HT, Brown HTபோன்ற சாயப் பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா, புற்று நோய் உருவாக்ககூடும்.120 & E120 Carmines, Cochineal, 142 & E142 Acid Brilliant Green, Green S,, 160b & E160b Bixin, Norbixin, Annatto Extracts 143 Fast Green போன்ற சாயப் பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா போன்றவற்றை உருவாக்ககூடும்.
150 & E150 Caramelஇது ஹைப்பர் ஆக்டிவிட்டி. (ã¨Ä ÅÇ÷ ÌýȢ ÌÆ󨾸û) ¯ÕÅ¡ìÌõ பென்சோயேட்ஸ் (Benzoates) : பதனீட்டுப் பொருள். ஆஸ்துமா நோய் உள்ளவர்களிடையே நெஞ்சில் இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும். தொண்டையில் அரிப்பு அல்லது புண் ஏற்படலாம்.
Butylated Hydroxyanisole (BHA), Butylated Hydroxytoluene (BHT) : காற்றுபுகாமலிருக்க பயன்படுத்தப்படும் பொருள்-பொதுவாக குழந்தை உணவுகள் சுவிங்கம், தாவர எண்ணெய் ஆகியவற்றை கெடாமல் வைத்திருக்கிறது். இது கான்சர் காரணி மற்றும் சிலரிடையே தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம். எப்.டி. & சி (FD & C dyes) : வர்ணங்கள்-இது சிலரிடையே அரிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
நைட்ரேட் (Nitrates) : பதனீட்டுப் பொருள்- தலைவலி.
பாராபென் (Parabents) : பதனீட்டுப் பொருள்-கடுமையான தோல் நோய், வீக்கம் அரிப்பு. சல்பைட் (Sulfites) : பதனீட்டுப் பொருள்- வைட்டமின் B1 ஐ அழிக்கிறது. நெஞ்சில் இறுக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குறைந்த இரத்த அழுத்தம், பலஹீனம், சிறு அளவு கூட சிலரிடையே ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும், மோசமாக்கும்.Propyl Gallate: இது எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்கள் கெடாமல் வைத்திருக்க உதவும். தாவர எண்ணெய், பதப்படுத்தப்பட்டஇறைச்சி, உருளைக்கிழங்கு சிப்ஸ், சிக்கன் சூப்பேஸ் மற்றும் சுவிங்கம் ஆகியவற்றில் பயன் படுத்துகிறார்கள். இது புற்று நோய் உருவாக்ககூடும்.Potassium Bromate: ரொட்டிகளில் சேர்க்கப்படும் இந்தப்பொருள் புற்று நோய் ஏற்ப்படுத்தலாம்.Aspartame (Equal, Nutra Sweet): இது டயட் சோடா மற்றும் டயட் உணவுகளில் சர்க்கரைக்குப்பதில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பு. இது மூளையில் டியூமர் கட்டியை உருவாக்கும் என அறியப்பட்டது. மிக குறைந்த அள்வு உட்கொள்ளுவது கூட Lymphomas மற்றும் Leukemi நோயை உருவாக்ககூடும். சிலருக்கு தலைவலி, மந்தம், மனக்குழப்பம், மத்திய நரம்பு மண்டல பாதிப்பு, மாதவிடாய் பாதிப்பு, கருவில் மூளைப்பாதிப்பு உருவாக்கக்கூடும்.Neotame: இது Aspartame போன்றது ஆனால் அதை விட அதிக நச்சுடையது.Acesulfame-K: சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பான இப்பொருள். கேக்குகள், சுவிங்கம், ஜெல்லி, மற்றும் குளிர் பானங்களில் சேர்க்கப்படுகிறது. இது கேன்சர், தைராய்ட் பாதிப்பு உண்டாக்கலாம்.Olestra: இது ஒரு செயற்க்கைக் கொழுப்பு. உடலால் உறிஞ்சப்படாதது, வயிற்றோட்டம் , வயிற்று வலி போன்ற பல பாதிப்புகளை உண்டாக்கும்.Sodium Nitrite (Sodium Nitrate): இறைச்சி பதப்படுத்தவதில் உபயோகப்படுகிறது. இது கான்சர் காரணியான Nitrosamine ஐ உருவாக்குகிறது.Hydrogenated Vegetable Oil: இவ்வாறு பதப்படுத்தப்பட்ட தாவர எண்ணெய்கள் Trans Fat ஐ உருவாக்குகிறது. இது இதய நோய் மற்றும் நீரிழிவுக்கு வழி வகுக்கும்.Brominated Vegetable Oil : பிறவிக்குறைபாடு, உடல் உறுப்பு வளர்ச்சியின்மைக்கு காரணமாகும்.Blue 1 and Blue 2: குளிர்பானங்கள் மற்ரும் மிட்டாய்களில் உபயோகப்படும் சாயப்பொருள். இது கான்சர் மற்றும் ட்யூமர் உருவாக்ககூடும்.Red 3: மிட்டாய் மற்றும் செர்ரியில் பயன்படும் வண்ணப்பொருள் இது தைராய்ட் மற்றும் ட்யூமர் உருவாக்கக்கூடும்.Yellow 6: கேக்குகள், மிட்டாய்கல், ஜெல்லிக்கள், சாசேஜ் ஆகியவற்றில் பயன் படுத்தப்படுகிறது. அட்ரீனல், சிறுநீரகக்கட்டி, மற்றும் கான்சர் உருவாக்கக் கூடியது.அப்பப்பா ...பயங்கரம் ..சில கம்பனிகளின் பொருளாசைக்கு பலியாகி எத்தனை விதமான வடிவத்தில் ரசாயனபொருட்களை நமது உணவில் கலந்து உள்ளே தள்ளுகிறோம். இனியாவது எந்தஉணவுப் பொருள் வாங்கினாலும் அதன் "INGREDIENTS"அல்லது "காங்டைன்ஸ்" என்று இட்டிருப்பதை ஒருமுறை வாசித்துப் பார்த்துவிட்டு புற்றுநோய் போன்ற பேராபத்துகளை விலைகொடுத்து வாங்க வேண்டுமா? பிள்ளைகளுக்கு தரலாமா? என்றெல்லாம் ஒன்றுக்கு இரண்டு யோசித்து வாங்குங்கள். பெரியவர்களைப்போல் குழந்தைகள் உடல் உணவில் கலந்துள்ள இந்த விஷ்ப் பொருட்களை விரைந்து வெளியேற்ற இயலாது. ஆனால் துரதிஸ்ட வசமாக அனேக குழந்தை உணவுகளே விஷம் மலிந்து கிடக்கிறது.சர்க்கரை, உப்பு , எண்ணெய் அதிக அளவு உட்கொள்வது உண்ணும் மூளையின் இயற்கையான ரசாயன சமநிலையை பாதித்து, உணவில் அதிக ஆர்வம் உண்டாக்கி அத்தகைய உணவுகளுக்கு அடிமையாக்கிவிடும்.ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்களில் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவும். முடிந்தவரை உணவுப்பொருட்களை அதன் அடிப்படை பொருளாகவே அவ்வப்போது வாங்கி ஃப்ரெஷ் ஆகவே உண்ணுங்கள். அதற்கேற்ப உணவுப் பழக்கத்திலும் மாற்றம் செய்து கொள்ளுங்கள். பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment