KILIYANUR ONLINE

Saturday 21 May 2011

எறும்புகளை பற்றிய தகவல்

1. அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும், வேலையாட்களும் காவலாளிகளும் 3 வருடம் வரையும், ஆண் எறும்பு சில மாதமும் உயிர் வாழ்கின்றன. (பூச்சி இனங்களில் மிகவும் அதிக காலம் உயிர்வாழக்கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது)

2. ஒரு எறும்பு கூட்டத்தில் (கூட்டில் அல்லது புற்றில்) சில நூறு முதல் பல லட்சம் வரையிலான எறும்புகள் உயிர் வாழ்கின்றன.

3. ஒரு கூட்டத்திற்கு ஒன்றிக்கு மேற்பட்ட ராணிகளும் இருக்கும். அதே வேளையில் ராணி இல்லாது எறும்பு இருப்பது இல்லை.

4. எறும்பு இனமானது மிகசிறியது முதல் 5 சென்டிமீட்டர் (2 அங்குலம்) வரை உள்ளன. 10000 மேலான வகைகளில் உள்ள எறும்புகளின் உணவானது தானியம், பங்கஸ், தேன் என பல வகைகளில் அடங்கும்.

5. மிகவும் சிறந்த மோப்ப சக்தி (வாசனை நுகரும் சக்தி), கண் பார்வை உடைய எறும்புகளுக்கு சுவாசப்பைகள் இல்லை.

6. எறும்புகள் தமது உடல் எடையை விடவும் 50 மடங்கு சுமையினை சுமக்க வல்லன.

7. எறும்பு பற்றிய கற்றல் (ஆராய்ச்சி) MYRMECOLOGY என அழைக்கபடுகிறது.

8. எறும்பின் மூளையில் 250000 கலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

9. உலகில் மூன்றில் ஒரு பங்கு எறும்பு கூட்டம் அமேசான் காட்டில் இருப்பதாக ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

10. மிகவும் திடகாத்திரமான சமூக அமைப்பினையும் பிராந்திய எல்லைகளையும் கொண்டுள்ள எறும்பு இனமானது வெப்பமானதும் ஈரப்பதம் உள்ள பகுதிகளில் பெருமளவில் கூட்டங்களை கொண்டுள்ளது.

11. குடியிருப்பு இடங்களான நிலம், மரம், நிலத்தின் கீழ் என பல சிக்கல் நிறைந்த இயற்கையுடன் கூடிய வாழ்வியலை கொண்டுள்ள எறும்பு இனமானது மிகசிறந்த உயிர் தப்பி வாழும் ( SURVIVAL ) உயிரினங்களில் முக்கியமானதாகவும் உள்ளது.

12. எறும்புகளின் மிகவும் ஒழுங்கான கட்டமைப்புகள் சமூக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைதாமே பாதுகாத்துக்கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கு காரணங்களாக உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
- Afsal Abu

No comments:

Followers