KILIYANUR ONLINE

Friday 27 May 2011

ஜலதோஷமும், சைனசும்

ஜலதோஷத்திற்கும் சைனசுக்கும் வித்தியாசம் உண்டு. ஆனால் பெரும்பாலானோர் இரண்டும் ஒன்றே என நினைக்கிறார்கள். மாத்திரை சாப்பிட்டால் 2 வாரத்துல குணமாகும்... இல்லாவிட்டால் 15 நாளில் சரியாகிவிடும் என்று ஜலதோஷத்தை பற்றி கிண்டலாக கூறுவதுண்டு.

ஜலதோஷம் என்பது ஒரு வகையான வைரஸ் தாக்குதல். இதை குணப்படுத்த நேரடியான மாத்திரைகள் எதுவும் கிடையாது.
நோய் எதிர்ப்பு மருந்துகளாலும் இதற்கு எந்த பயனும் இல்லை. நன்றாக ஓய்வெடுப்பது தான் சிறந்த வழி. தவிர காய்ச்சல், தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு போன்ற ஜலதோஷத்தால் ஏற்படும் பின் விளைவுகளை
கட்டுப்படுத்தினாலே ஜலதோஷம் கட்டுப்பட்டது போல் தெரியும்.

ஜலதோஷம் சராசரியாக ஒரு மனிதனுக்கு வருடத்திற்கு 2 அல்லது 3 முறை வருகிறது. குழந்தைகளுக்கு இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.

வெவ்வேரான வகையான வைரஸ்கள் ஜலதோஷத்திற்கு காரணமாக உள்ளன. காற்று மூலம் வருவதை விட கைக்கும் மூக்குக்குமான தொடர்பாலேயே அதிகம் வருகிறது. மூக்கை வைரஸ் தாக்கியதுமே அங்கே ஏதோ ஆபத்து என உணர்ந்து உடனடியாக மூக்குக்கு ரத்த சப்ளை அதிகமாகிறது. அதன் அடுத்த கட்டமாக டர்பிநேட்டுகள் என்ற ஜவ்வுகள்விரிவடைந்து அளவுக்கதிகமாக திரவத்தை சுரக்கிறது. அதுதான் சிந்தச்சிந்த குறையாத சளியாக நம்மை தொல்லைபடுத்துகிறது.

ஜலதோஷம் தானாகவே குணமடைந்து விடும் தன்மை கொண்டது. இருந்தாலும் அதற்கு ஒரு ஆபத்தான மறுபக்கம் உண்டு. அதுதான் சைனஸ். ஜலதோஷம் என்பது மூன்று முதல் 15 நாட்களுக்குள் சரியாகிவிடும். அப்படி சரியாகவில்லை என்றால் அது சைனசாக இருக்கலாம்.

ஜலதோஷத்தின் தொடர்ச்சியாகத்தான் சைனஸ் நிகழ்கிறது. ஜலதோஷ காலங்களில் சளி, சைனஸ் அறைகளில் சென்று தங்கிவிடுகிறது. அது சில நாட்களிலேயே வெளியே வந்து விட வேண்டும். ஜலதோஷம் குணமாகிவிட்டதன் அறிகுறி அதுதான். அப்படியில்லாமல், உள்ளே போன சளி, வெளியே வரமுடியாத அளவிற்கு அதன் கதவுகள் சில காரணங்களால் அடைத்துக் கொண்டால், அதுதான் சைனசின் ஆரம்பம். கிருமிகள் கலந்த சளி அந்த அறைக்குள் தொடர்ந்து இருக்கும். நாளடைவில் அது சீழாக உருமாறும். அதன் விளைவுகள் பேச்சு, சுவாசம் என பல வகைகளிலும் சிரமப்படுத்தும்.

மொத்தம் நான்கு கோடி சைனஸ் அறைகள் மூக்கில் உள்ளன. மூக்கின் அனைத்து செயல்களுக்கும் உறுதுணையாக இருக்கும். இந்த சைனஸ் அறைகள் நெற்றியில் புருவங்களுக்கு மேல், மத்தியில், மூக்கில், கண்களுக்குக்கீழ் உள்ள கன்னப்பகுதியில் இருக்கின்றன. இந்த அறைகளில் சளி போய் தங்கிய பிறகு தலை பாரமாக இருக்கும். குனிந்தாலும், நிமிர்ந்தாலும் விண் விண் என்று தெரிபப்து போல் தலைவலிக்கும். லேசாக இருமினாலும் தலைவலி உயிபோகும். மூக்கு அடைத்துக்கொண்டது போல் இருக்கும். வாசனையை அறிய முடியாது. வாசனை தெரியாததால் ருசியும் தெரியாது. பேசினால் மூக்கால் பேசுவது போன்று இருக்கும். சைனசை மட்டும் ஜலதோஷம் போல் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது. சைனசில் ஏற்படும் விபரீதங்கள் மிக மோசமானவை. அதனால் சைனஸ் பிரச்சினை என்று தெரிந்தால் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை செய்வதுதான் சிறந்த வழி.


--
Mohamed musthafa...
INDIA.

No comments:

Followers