KILIYANUR ONLINE

Friday, 3 June 2011

பெண் உரிமை

பெண் உரிமை என்றால் என்ன அரைகுறை உடை அணிவதும், நகங்களுக்கும், உதடுகளுக்கும், தலை முடிக்கும் சாயம் பூசுவதும், குட்டை பாவாடையுடன் குதி உயர்ந்த பாதணிகளை அணிந்து துள்ளி துள்ளி நடப்பதும், மாலையில் கிளப்களுக்கு செல்வதும், கண்டவருடன் கட்டுபாடற்ற பாலியல் உறவு கொள்ளவதும், இறுதியில் சீரழிந்து தான் உருவாக்கும் சந்ததிகளையும் சிரழிந்து போவதும்தான் சுதந்திரம் , உரிமை என்று மேற்கு போதிக்கின்றது. இஸ்லாம் ஆணும் பெண்ணும் மனித சமூகம் என்ற பறவையின் இரு இறக்கைகள் என்று போதிக்கின்றது
இஸ்லாம் 7 ஆம் நூற்றாண்டில், 1420 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுக்கும் சம உரிமைகளும், பொறுப்புகளும் உண்டு என சட்டமியற்றி பெண்ணுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கி பலமான சமூகம் ஒன்றையும் உருவாக்கி காட்டியது ஆனால் மேற்குலகில் 17 ஆம் நூற்றாண்டில்தான், 400 வருடங்களுக்கு முன்னர் தான் பெண்ணுக்கும் உயிர் உண்டா? என்ற விவாதம் நடத்தவே தொடங்கினார்கள் அதற்கு முன்னர் பெண்கள் மனித இனமே அல்ல அவர்கள் பிசாசுகளின் வாரிசுகள் என்றார்கள்
ஆனால் இஸ்லாம் 1420 ஆண்டுகளுக்கு முன்பே இயற்கைக்கு மாற்றம் இல்லாத வகையில் ஆணும் பெண்ணும் சம உரிமை உடையவர்கள் என்றது இஸ்லாமிய கோட்பாட்டில் எல்லா தினங்களும் பெண்கள் தினம்தான் , எல்லா தினங்களும் முதியவர் தினங்கள்தான்
இஸ்லாத்தை சமூக வழக்காறுகளையும், மூட நம்பிக்கைகளையும் புறம் தள்ளி தூய இஸ்லாத்தை மட்டும் பின்பற்றும் சமூகங்களில் முதியோர் இல்லங்களையும், பெண் அடிமைத்தனதையும் காணமுடியாது இங்கு இஸ்லாம் கொள்கைப்படுத்தும் கருத்துகள் அனைவரையும் உண்மையான மகிழ்ச்சியல் வைத்துகொள்ளும். உரிமைகள் தொடர்பான ஒரு அல் குர்ஆன் வசனம்
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (04:01)
மனித சமூகம் இஸ்லாத்தை சரியாக விளங்க முற்படுகின்றது முஸ்லிம் சமூகம் அதன் அடிப்படைகள் நோக்கி வேகமாக வந்து கொண்டிருகின்றது இஸ்லாம்தான் முழு மனித சமூகத்துக்குமான உண்மையான விடுதலையை, சுதந்திரத்தை, உரிமையை கொள்கைப்படுத்தியுள்ளது அது சரியாக அமுல்படுத்தப்படும் சமூகங்களில் அதை மனிதர்கள் அனுபவிப்பர்.
இனி கவிதையை கவனியுங்கள்:
மாற்றம் தேடும் உரிமைகள்
ஹாரூன் மூஸா -22-03-2011
தாயே!
முதியோர் இல்லத்தில்
வாழ்ந்து கொண்டே சாகிறாய்..
செத்துக் கொண்டே வாழ்கிறாய்.
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
தாயே!
கண்ணின் இமையும்
அன்பின் இமயமும் நீ தானே,
பிள்ளை மனம் கல்லென்பது
பார் போற்றும் மெய் தானோ?
தாய்மார் தினத்தில் மட்டுமே
வந்து போகிறார்கள்.
மகளிர் தினத்தில் மட்டுமே
வாழ்த்துச் சொல்கிறார்கள்.
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
மகளே!
வேலை வாய்ப் பென்றும்,
பட்டம் பதவியென்றும்,
தாயாகும் பாக்கியத்தைத்
தள்ளிப் போடுகிறார்கள்.
மகளே!
காலா காலமாக
மறைத்துப் பார்த்த அழகை,
அழகு ராணியாக
அம்பலப்படுத்துகிறார்கள்.
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
மகளே!
‘பெஷன்’ மோகமோ..
செல்வத்தோடு செழிப்பையும்;
உழைப்போடு ஊதியத்தையும்
கொள்ளை அடிக்கின்றது.
வரவில்லாத செலவையும்
உவப்பில்லாத பிழைப்பையும்
கொள்கை என்கின்றது.
மகளே!
அன்று..விளம்பரமின்றி
வியாபாரமில்லை என்றார்கள்.
இன்று..பெண்ணின்றி
விளம்பரமில்லை என்கிறார்கள்.
இது..விலை போகும் மாதருக்கு
ஊரார் வைத்த புதுப் பெயரா?
உலகத்தார் அமைத்த புதுத் தொழிலா?
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
மகளே!
கட்டில் காட்சியும்,
காமக் கதையும்,
மலிந்த சினிமாவில்
சிலிர்க்கிறார்கள்.
முத்தக் காட்சியும்
நீச்சல் உடையும்
நிறைந்த தெருவில்
சீவிக்கிறார்கள்.
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
செல்வம் செழித்தாலும்
சனமே குறைந்தாலும்
வாரிசு வராமல்
வரம்புகள் கட்டுகிறார்கள்.
திருமண உறவோ
பணத்தால் பாலாகிறது.
சிறு சிறு பிளவால்
விவாகரத்து நடக்கிறது.
மறுமணமின்றியே
மற்றக் குடி கெடுகிறது.
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
பாலுறவைப் பலரோடும் பகிரலாம்..
சிசுவைக் கருவிலே கலையலாம்..
தாய்மையைத் தள்ளிப் போடலாம்..
தாய்ப் பாலைத் தர மறுக்கலாம்..
தனித் தாயாக காலம் கடத்தலாம்..
தந்தையின்றியே பிள்ளை வளர்க்கலாம்..
இரு பெண்களே தம்பதியாய் வாழலாம்..
இவை போல் ஏராலம் காணலாம்..
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
தாயே!
உனது காலடியில்
சுவனம் இருக்குது,
நம்புகின்றேன்.
சகோதரியே! உனது உறவில்
உயர்வுகள் உண்டு,
நேசிக்கிறேன்.
மகளே! உன் வளர்ப்பில்
நபியின் நட்பு கிடைக்கிறது
யாசிக்கிறேன்.
மனைவியே!
உன் அரவணைப்பில்
‘ஆகிரா தெரிகிறது,
ஆசிக்கின்றேன்.
பெண்களே!
உங்கள் உரிமை காப்பதால்
உயர்த்தப்படுகிறேன்.
உங்களைக் கனிவாய்ப் பார்ப்பதால்
வார்க்கப்படுகிறேன்.
வல்ல அல்லாஹ்வின் அடிமையாய்ப்
பார்க்கப்படுகிறேன்.
பெண்ணே!
இறைவன் தந்த
வளமின்றி
உன்னால் வாழலாமா?
இறைவன் கூறும்
வாழ்வின்றி
உன்னால்
உயரலாமா?
பெண்ணே!
மனம் போன போக்கில்
போகாதே!
மனிதன் போற்றும் உரிமையில்
மாளாதே!
கானல் நீரின் பின்
ஓடாதே!
கடவுள் கீரிய கோட்டைத்
தாண்டாதே!
முற்றும்

No comments:

Followers