KILIYANUR ONLINE

Wednesday, 15 June 2011

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

மெரைன் இன்ஜினியரிங்
இந்தியாவை ஒரு கடல் சார்ந்த நாடாக அறிந்திருப்பதும், நமது கடற்கரைகளின் நீளம் 7517 கிலோ மீட்டராக இருப்பதும், 95 சதவீதம் அதிகமான பொருட்கள் கடல் மூலம் கப்பல்கள் வாயிலாக கொண்டு செல்லபப்படுவதனால் இத்துறைமாணவர்களின் தேவைப்பாடுகளின் எண்ணிக்கைகளை அறியலாம்.
2010 ஆண்டின் கணிப்புகளின் படி, ஆண்டின் இறுதிக்குள் 27,000 மாணவர்கள் தங்களின் அறிவை நாட்டிக்கல் சயின்ஸ் மற்றும் மெரைன் பொறியியல் பெற்றிருக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக இந்திய அரசால் மத்திய மெரைன் பல்கலைக்கழகம் சென்னையை அடுத்த உத்தண்டியில் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மெரைன் பொறியியல் என்பது கப்பல் இயங்கும் முறையைப் பற்றிய தொழில்நுட்பமாகும். மெரைன் பொறியாளர்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அதிக அளவிலான வேலை வாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. நிலத்தில் 6 மாதங்களும், நீரில் 6 மாதங்களும் வாழும் முறையை ஏற்கும் மாணவர்கள் இத்துறையைத் தேர்ந்தெடுக்கும் முன் அடிப்படை தகுதிகளை நிறைவு செய்தல் வேண்டும்.
அவைகளில்,
அதிகபட்ச வயது வரம்பு 25 ஆண்டுகள்
திருமணமாகாத ஆண்களும் பெண்களும் தகுதியுடையவர்கள் (கடந்த ஆண்டுகளில் மட்டுமே பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது)
குறைந்தபட்ச உயரம் 157 செ.மீ.
குறைந்தபட்ச எடை 48 கிலோ
சராசரியான கண்பார்வை
பன்னிரண்டாம் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடப் பிரிவுகளில் தேர்வு பெற்றவர்கள் தமிழ்நாட்டில் அமையப்பெற்றகல்லூரிகளிலும், IIT-JEE நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மிகச்சிறந்த மத்திய பல்கலைக்கழகங்களிலும் சேர்க்கை பெறலாம். மாணவிகளுக்கு இந்திய அரசின் மூலம் முழுமையான இலவசக் கல்வியை பெறுவதன் மூலம் B.Sc. (Nautical Science) / B.Sc. (Maritime Science) / M.Tech. (Marine Engineering) போன்றஇளங்களை பட்டப்படிப்பை பெறலாம். மாணவிகள் தங்களுடைய இப்பிரிவு தேர்வுக்கு முன் கப்பல் மற்றும் கடல்வழி வேலை வாய்ப்புகளில் உள்ள சாதகமான அதேநேரம் பாதகமான நிலைகளை நன்கு அறிய வேண்டும்.
இளங்களை படிப்புகளும் அவற்றைஅளிக்கும் சிறந்த கல்லூரிகளும்
B.Sc. Nautical Science
மெரிடைப் அகாடமி, சென்னை
சாமஸ் பொறியியல் கல்லூரி, சென்னை
வேல்ஸ் பொறியியல் கல்லூரி, சென்னை
கோவை மெரைன் கல்லூரி, கோவை
டி.எஸ். சாணக்கியா கல்லூரி, மும்பை
B.Sc. Nautical Technology
ஆர்.எல். கல்லூரி, மதுரை
டோலனி மெரிடைம் கல்லூரி, புனே
இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வாயிலாகவும் (B.Sc. Nautical Science) பட்டப்படிப்பைப் பெறலாம். இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்களும், 187 சிறிய துறைமுகங்களும் இத்துறைமாணவர்களின் தேவைப்பாட்டை உணர்த்துகின்றது.
தமிழ்நாட்டில் மெரைன் பொறியியல் படிப்பிற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 5 கல்லூரிகளில் 200 இடங்கள் மட்டுமே உள்ளது. இதனைத் தவிர, ஒரு சில தனியார் பல்கலைக்கழகங்களிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கல்லூரிகளிலும் இதனை படிக்கலாம். தனியார் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணமாக ஓர் இலட்சத்திற்கும் அதிகமாக வசூலிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி சாமஸ் பொறியியல் கல்லூரி, சென்னை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, ஸ்ரீ பெரும்புதூர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
பெட்ரோலியம் இன்ஜினியரிங்
பெட்ரோலியத் துறையில் பொறியியல் படிப்பு என்பது என்னை வளத்தை கண்டுபிடிப்பது, பெட்ரோல் மற்றும் எரிவாயுவைப் பிரித்தெடுத்தலாகும்.
மாதந்தோறும் விலை உயர்வைக் கண்டுவரும் பெட்ரோலியம் மற்றும் அதன் சார்ந்த பொருட்களைக் கண்டறிவது, பிரித்தெடுப்பது மற்றும் விற்பனை செய்வதே இத்துறைமாணவர்களின் வேலைப்படும் தன்மையாகும்.
குறைவான கல்லூரிகளும், அதிகமான மனிதவள தேவைப்பாடுகளும் இத்துறைபொறியாளர்களின் பற்றாக்குறையை நமக்கு உணர்த்துகின்றன. உயர்கல்வி ஆலோசகராக இருப்பதனால் அத்துறையைச் சேர்ந்த சில நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இத்துறையின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களையும் பள்ளி மாணவர்களிடையே தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பெட்ரோலியத் துறையைப் பயில்வதற்கு ஒரு சில கல்லூரிகள் மட்டுமே உள்ளது. அவற்றில்,
அண்ணா பல்கலைக்கழகம், எ.சி.டி. கேம்பஸ், சென்னை
அண்ணா பல்கலைக்கழகம், பி.ஐ.டி. கேம்பஸ், திருச்சி
ராஜுவ்காந்தி பொறியியல் கல்லூரி, ஸ்ரீ பெரும்புதூர் இந்தியாவில் மிகச்சிறந்த பழமையான பல்கலைக்கழகங்கள் உள்ளன.
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், அலிகார்
மகாராஸ்டிரா பொறியியல் கல்லூரி, புனே
பண்டிட் தீனதயால் பெட்ரோலியம் பல்கலைக்கழகம், குஜராத்
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
இத்துறையில் Petroleum Engineering, Petro-chemical Technology Utßm Petro-refinary போன்றபடிப்புகளும் உள்ளன.
தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கை விபரங்களைத் தொடர்ந்து குறுகிய காலத்தில், குறைந்த செலவுகளில் தொழிற்கல்வியை முடித்து அதன் மூலம் அதிக வருவாயைப் பெறும் வகையிலான படிப்புகளின் விபரங்களை வரும் இதழ்களில் அறிய இருக்கின்றோம்

No comments:

Followers