பலரும், வெண்ணெய் சாப்பிட்டால் உடலுக்குத் தீங்கைஏற்படுத்தும் என்று எண்ணி, தங்களது உணவில் வெண்ணெயை தவிர்த்து விடுவார்கள்.
ஆனால் வெண்ணையிலும் சத்துக்கள் அடங்கியுள்ளன. சிலர் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டால், வெண்ணையை சாப்பிட்டு வரலாம்.
மேலும், வெண்ணையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் ரத்த நாளங்களைப் பலப்படுத்துகின்றன. கால்சியத்தை அதிகளவில் கொண்டுள்ள வெண்ணை, பற்சிதைவைத் தடுக்கிறது.
வெண்ணையில் உள்ள பூரிதக் கொழுப்பு, புற்றுநோயைத் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அத்தியாவசியமான தாது உப்புக்களை நம் உடல் கிரகித்துக் கொள்ள வெண்ணை உதவி செய்கிறது. வெண்ணையில் உள்ள கொழுப்புத் தன்மை கூட, மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மையையே செய்கிறது.
இதில் உள்ள வைட்டமின் ஏ கண்கள், தோலின் ஆரோக்கியத்தையும் காக்க உதவுகிறது.
No comments:
Post a Comment