KILIYANUR ONLINE

Thursday 28 July 2011

செல்போனால் விமான விபத்து

சர்வதேச விமான போக்குவரத்து கழகம் நடத்திய ஆய்வில், கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இதில் 75 விமான விபத்துக்கள் செல்போனால் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, யாரேனும் செல்போன் பேசினால், விமானத்தில் முக்கிய சாதனங்கள் அனைத்தும் மின்னணுவால் இயங்குபவை என்பதால் அவை பெரும் பாதிப்பு ஏற்படும், இதனால் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு முதலில் துண்டிக்கப்படும் எனவும் இதனால் தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் ஐபேடு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல்கள் போன்று சில உயர் ரக மொபைல்கள் பெரும் ஆபத்தை விளைவிக்ககூடியன.
இவை போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்களில் உள்ள விமான பைலட்டுகள் அமரும் கேபின் பகுதிகளில் ஜி.பி.எஸ்.கருவி உள்ளதால் முதலில் அவைகளைத்தான் ‌தாக்கும்.


இவை ஓடுதளத்திலிருந்து உயர பறப்பதற்கு முன்பே தனது சிக்கனல்களை துண்டித்துவிடும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Followers