ஒருத்தர் ஓவரா கொட்டாவி விட்டு கொண்டே இருந்தால் என்ன நினைப்பீர்கள்?
அவர் நாம் சொல்வதை கவனிக்கவில்லை, அல்லது அவர் தூக்கக்கலக்கத்திலோ, சோர்விலோ இருக்கிறார் என்று தானே நினைப்பீர்கள்!!?
உங்கள் நினைபெல்லாம் தவறாக இருக்கலாம், என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி ஒன்று.
கொட்டாவியை தூக்கக்கலக்கம் மற்றும் சோர்வுடன் மட்டும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய மூளை ரொம்ப சூடாக இருக்கிறது’ என்பதன் அறிகுறி அது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பேராசிரியர் Andrew தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் நடந்த விரிவான ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கபட்டது . ப்ராண்டியர்ஸ் எனும் மருத்துவ நூல் இந்த ஆராய்ச்சி குறித்து விரிவாக பேசுகிறது.
நமது மூளை சூடாகும் போது அதை குளிரச் செய்ய என்ன செய்யலாம் என உடல் யோசிக்கிறது. எனவே அது கொட்டாவி மூலம் நிறைய காற்றை உள்ளே செலுத்தி மூளையை குளிர வைக்க முயல்கிறது என்பது தான் இவர்களுடைய கண்டு பிடிப்பின் சாராம்சம் .
குளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி விடுவதன் காரணம் இது தானாம். அதெப்படி குளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி? வெயில் காலத்தில் தானே மூளை அதிகம் சூடாகும்? அப்போது தானே அதிகம் கொட்டாவி தேவைப்படும்? என்று தானே நினைகிறீர்கள்?
ஆராய்ச்சி என்ன சொல்கிறதென்றால், நமது உடலுக்கு வெளியே உள்ள கற்று குளிரை இருக்கும் போது தான் அது மூளையை குளிர செய்ய முடியும். எனவே தான் குளிர் காலத்தில் அத்திட கொட்டாவி மூலம் அதிக குளிர்காற்றி உடல் உள்வாங்குகிறது. வெயில் காலத்தில் கொட்டாவி விட்டால் மூளை மேலும் அதிகள் வெப்பமடையும் ஆகையால் உடல் அதை அனுமதிக்க மறுத்து விடுகிறது.
உடலின் தன்மைக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் கொட்டாவி வருகிறது எனும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் ஒரு புதிய விஷயமாக கருதப்படுகிறது. நோய்களுக்கான மருத்துவ விளக்கத்துக்கும் இந்த ஆராச்சி பயன்படுமென கூறப்படுகிறது.
குறிப்பாக M.N.T எனப்படும் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் கொட்டாவியை வர வைக்கும். அந்த நோயாளிகளின் மூளை அதிக வெப்பமாக இருப்பது கூட இதன் காரணாமாக இருக்கலாம் எனும் கோணத்தில் ஆராய்ச்சிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு வாசல் திறந்து வைத்திருக்கிறது.
எது எப்படியோ, அடித்தவாட்டி யாராச்சும் கொட்டாவி விட்டா! டென்ஷன் ஆகதிங்க! அவருக்கு மூளை சூடா இருக்கின்னு பரிதாபபடுங்க!!
Thanks - Kalvikalanjiyam
No comments:
Post a Comment