KILIYANUR ONLINE

Wednesday, 18 January 2012

'பால் காய்ச்ச தெரியுமா?'

உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன்:


பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம்.

காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும்.

கால்சியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம்.

ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண் தான்.

பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும்.

அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம்.

அது ஏற்கனவே, சுத்தம் செய் யப்பட்ட பின் தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்து விடலாம்.

ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம்.

பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும், உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும்.

கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.

பதப்படுத் தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.

பொதுவாக எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சு ட வைக்க வேண்டாம்.

ஒருமுறை பாலைக் காய்ச்சியபின், அதை பிரிஜில் வைக்கலாம்.

காபி, டீ என தயார் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்.

No comments:

Followers