ஒரு மனிதன் எதை பெறமுயலுகிறானோ அதை அடைகிறான்.
தேடுபவன், போராடுபவது தான் விரும்பியதை அடையவே செய்வான்.
அடையப் போராடுவது அடைய முடியாவற்றை அருகே கொணர்ந்துவிடும்.
ஒரு மனிதன் செயல் ஒன்றைச் செய்யத் தன் மனத்தில் தீர்மானித்து விட்டானானால் அதைச் செய்வது அதன்பின் எளிதேயாகும்.
ஒரு விஷயம் பற்றித் தெளிந்த சிந்தனை ஏற்பட்டதும் அதைத் தீர்மானித்து விடு. அதன்பின் தயங்காதே, நீ தீர்மானித்து விட்டாயானால் பின்னர் தயங்க வேண்டாம். துரிதமாய்ச் செயலாற்றுவாயாக..
எதனை நீ மனப்பூர்வமாய்த் தேடுகிறாயோ அதில் நம்பிக்கை இழந்து விடாது எச்சரிக்கையாய் இருப்பாயாக.
அறிவுள்ளவன் முயற்சியில் தளர்ந்து விடவே மாட்டான்; நம்பிக்கை இழந்து விடாது திருப்புவதும் அவ்வளவு எளிய செயல் அல்ல..
அகிலத்தில் மிகவும் வியப்புக்குரியவை எவையெனில் முட்டாளின் வெற்றியும், அறிவாளியின் தோல்வியும்தான்.
No comments:
Post a Comment