KILIYANUR ONLINE

Wednesday, 20 February 2013

கம்ப்யூட்டர் தகவல்கள்


குழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.

விடுமுறை தொடங்கியாச்சு நம் வீட்டு சுட்டிகளின் சேட்டைகளை குறைத்து அவர்களின் ஞாபகசத்தி மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

புத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.neok12.com/

இத்தளத்திற்கு சென்று குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்கலாம். Physical videos, Life Sciences , Human body , Earth & Space , Geography , Social Studies , English , Math , History , Games , Activities போன்ற பல்வேறு துறைகளில் எந்தத்துறை சார்ந்த வீடியோக்கள் பார்க்க வேண்டுமோ அதை சொடுக்கி அதிகப்படியான் வீடியோக்களை பார்க்கலாம்.ஓவ்வொரு வீடியோவும் குழந்தைகளுக்கு பயனுள்ள வீடியோவாகவே இருக்கிறது.ஓயாமல் படி படி என்று சொல்வதை விட இது போல் குழந்தைகளுக்கு வீடியோ மூலம் அறிவை புகட்டும் தளங்களை தெரியப்படுத்தினால் அவர்களின் அறிவு மேலும் பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இத்தளத்தைஅறிமுகப்படுத்துவதில் வின்மணி பெருமிதம் கொள்கிறது!



நன்றி:வின்மணி.காம்.

No comments:

Followers