KILIYANUR ONLINE

Monday, 25 March 2013

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 21


 

சிறுபீளை.


சிறுபீளை.


1) மூலிகையின் பெயர் -: சிறுபீளை.


2) வேறுபெயர்கள் -: சிறுகண்பீளை, கண் பீளை, கற்பேதி,பெரும் பீளை என்ற இனமும் உண்டு.


3) தாவரப்பெயர் -: AERVALANATA.


4) தாவரக்குடும்பம் -: AMARANTACEAE.


5) தாவர அமைப்பு -: இது சிறு செடிவகையைச் சார்ந்ததுஇந்தியாவில் ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக நீள் வட்டவடிவில் இருக்கும்,ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் இருக்கும்,பூக்கள் தண்டுடன் ஒட்டி அவல் போன்ற வடிவமாக இருக்கும்.


6) பயன் படும் பாகங்கள் -: சிறு பீளையின் எல்லா பாகமும் மருத்துவதற்குப் பயன்படுத்தப் படுகிறது.


7) செய்கை -: இது சிறு நீரைப் பெருக்கி, கற்களை கரைக்கும்செய்கை உடையது.


8) மருத்துவப் பயன்கள் -: சிறுபீளைச் செடிக்குத் தேகம் வெளிறல், அசிர்க்கா ரோகம், வாத மூத்திரக் கிரிச்சபம் முத்தோஷம், மூத்திரச் சிக்கல், அஸ்மரி, அந்திர பித்த வாதும் சோனித வாதங்கள் ஆகியன போம் என்க.


சிறு கண் பீளை இலையை இடித்து சாறு எடுத்து பதினைந்து மி.லி.வீதம் மூன்று வேளை அருந்தி வரநீர் எரிச்சல், நீரடைப்பு, பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் அதிகமான ரத்தப் போக்கு முதலியவை குணமாகும்.


கருத்தரித்த பெண்களுக்கு ஏற்படும் தளர்ச்சியை நீக்கி உடலுக்கு வன்மை கொடுக்க இதன் வேரைக் கொண்டு செய்யப்படும் கஞ்சி நல்லது.


சிறுகண் பீளை வேர்ப்பட்டையையும், பனைவெல்லத்தையும் சம அளவாக எடுத்து நன்கு அரைத்து இருநூறு மி.லி.பசும் பாலுடன் கலந்து தினந்தோறும் இரண்டு வேளை அருந்தி வந்தால் நீரடைப்பு, கல்லடைப்பு, முதலிய நோய்கள்குணமாகும்.


சிறுகண் பீளையின் எல்லா பாகங்களையும், பேராமுட்டிவேர், நாகலிங்க வேர், சிறுநெருஞ்சில், இவைகளையும்சம அளவாக எடுத்து, தேவையான அளவு நீர்விட்டுக்காய்ச்சி வடிகட்டி கல்லடைப்பு, நீரடைப்பு, மற்றும் சிறு நீரக நோய்களுக்குக் கொடுத்து வரலாம். இதனையே படிகாரம், வெடியுப்பு, நண்டுக்கல் இவைகளைக் கொண்டு செய்யப் படும் பற்பங்களுக்கு துணை மருந்தாகவும் கொடுத்து வரலாம்.


சிறு பீளை வேரில் அரைப்பலம் பஞ்சுபோல் தட்டி அரைப்படி நீரில் போட்டு வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சிவடிகட்டி உள்ளுக்கு இரண்டு வேளை கொடுக்க நீர்கட்டைஉடைக்கும். நாகத்தைச் சுத்தி செய்து கடாயிலிட்டுகண்ணான் உலையில் வைத்து ஊதிக் கடாயானது நெருப்பைப்போல் இருக்கும் போது சிறு பீளையை பொடியாக வெட்டிப்போட்டுக் கரண்டியினால் துழாவிக் கொடுக்கப் பூத்தபற்ப மாகும். ஆறவிட்டு வஸ்திரகாயம் செய்து 1 - 1.5குன்றி எடை நெய், வெண்ணெய் முதலியவற்றில் தினம்இரண்டு வேளை கொடுக்க நீர் கட்டை உடைக்கும்.வெள்ளை, வேட்டை குணமாகும்.


இதன் வேரைத்தட்டி அரைப் பலம் எடைக்கு ஒரு குடுவையில்போட்டு அரைப்படி  நீர் விட்டு வீசம் படியாகச் சுண்டகாய்ச்சி வடிகட்டி வேளைக்கு
1 - 1.5 அவுன்ஸ் அளவு தினம் 2 -3 வேளை உட்கொள்ள நீர்கட்டு, கல்லடைப்பு, சதையடைப்பு போம். இதன் கியாழம் பாஷாணங்களின் வீறை அடக்கும்.
நன்றி;மூலிகைவளம்
 

No comments:

Followers