·
ஜுராசிக் பார்க் படம் பார்த்து மெகா சைஸ் விலங்குகளான டைனோசர்கள் பற்றி நீங்களும் தெரிந்து கொண்டிருக்கலாம்.
லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உலாவிய ராட்சத விலங்குகளாகிய
டைனோசர்களின் தோற்றமும் பிரம்மாண்டமும் வியப்பையும் ஆர்வத்தையும்
உண்டாக்கலாம்.
ஆனால் டைனோசர்களிலேயே பல ரகங்கள் இருந்த தெரியுமா?டைனோசர்களே பத்து
யானை அளவுக்கு பிரம்மாண்டமானவை,அவற்றிலேயே அளவில் பெரிய டைனோசர்களும்
இருந்திருக்கின்றன தெரியுமா?அதே போல நெருப்புக்கோழி டைனோசர் என்று ஒரு
ரகமும் இருப்பது தெரியுமா?இந்த டைனோசர்கள் கன்டாவில்
கண்டுபிடிக்கப்பட்டன.இவை ஈமு பறவையை ஒத்திருந்ததாக
கருதப்படுகின்றன.இவற்றுக்கு பற்கள்
கிடையாது.நீண்ட ஒல்லியான கால்களை கொண்டவை.
இது போன்ற டைனோசர் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள
வேண்டும் என்றால் கிட்ஸ்டைனோஸ் இணையதளம் அதற்காக என்றே
உருவாக்கப்பட்டுள்ளது.
கிட்ஸ்டைனோஸ் தளம் மூலமாக டைனோசர் பற்றி ஆ முதல் அக் வரை சகல விதமான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் ஒரு முறை உலா வந்தீர்கள் என்றால் டைனோசர்கள் தொடர்பாக
இத்தனை ஆச்சர்யமான விவரங்கள் இருக்கின்றனவா என்று வியந்து போவதோடு அவற்றை
எல்லாம் தெரிந்து வைத்து கொண்டு பள்ளி தோழர்களிடம் சொல்லி அசத்தலாம்.
ஆரம்ப கால டைனோசர்கள்,டைனோசர்களோடு இருந்த அந்த கால
விலங்குகள்,கொம்பு முளத்த டைனோசர்கள்,பறவை கால் டைனோசர்கள் என்று பல விதமான
டைனோசர்களை இந்த தளத்தின் மூலம் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வகையான டைனோசர் பற்றியும் புகைப்படத்தோடு சுருக்கமான அறிமுகம் இடம் பெற்றுள்ளன.
அதோடு டைனோசர் வரைபடமும் அவை வாழ்ந்த கால கட்டத்தை விளக்கும் வரைபடமும் கூட உள்ளன.
கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட டைனோசர்களின் பட்டியல்
இருக்கிறது.அவற்றை எல்லாம் படிப்பது சுவாரஸ்யம் என்றாலும் எல்லாவற்றையும்
நினைவில் வைத்திருப்பது கஷ்டம் அல்லவா?அந்த கவலையும் வேண்டாம்!காரணம்
டைனோசர் பற்றிய விவரங்களை மனப்பாடம் செய்து கொள்வதற்காக என்றே அழகிய
விளையாட்டு போன்ற பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமா டைனோசர் சார்ந்த விளையாட்டுகளும் இருக்கின்றன.அவற்றையும்
விளையாடி மகிழலாம்.விளயாட்டுக்கள் மட்டும் அல்லாமல் டைனோசர் சார்ந்த பல வித
அமசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இவற்றின் வாயிலாக மிகவும் சுவாரஸ்யமான
முறையில் டைனோசர்களை அறிந்து கொள்ளலாம்.
இவற்றை தவிர தினம் ஒரு டைனோசர்கள் முகப்பு பக்கத்தில் அறிமுகம் செய்யப்படுகின்றன.
டைனோசர்களை பார்த்து விட்டு உங்கள் அபிமான டைனோசருக்கு வாக்களிக்கவும் செய்யலாம்.
எல்லாம் சரி டைனோசர்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்
இருந்தன.அப்புறம் என்ன ஆயிற்று?அவை என்ன ஆயின?இந்த கேள்விகள் எல்லாம்
உங்கள் மனதில் தோன்றினால் அதற்கு விடை தருவதற்கும் தனிப்பகுதி
இருக்கிறது.டைனோசர் ஆய்வு பற்றிய பகுதி இந்த கேள்விகளுக்கான பதில்களை
தருகிறது.
ஆக கிட்ஸ்டைனோஸ் தளத்தில் உலாவுங்கள்,டைனோசர் நிபுணர்களாகுங்கள்.ஆல த பெஸ்ட்.
இணையதள முகவரி;http://www.kidsdinos. com/
–
நன்றி சுட்டி விகடன்
No comments:
Post a Comment