KILIYANUR ONLINE

Wednesday 2 November 2011

தமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்

இன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது.

மணல் கொள்ளை – முல்லைப் பெரியாறு :

முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் தொடர்ந்து நமக்குதொல்லை கள் கொடுத்து வரும் மலையாளிகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பினையும் மதிக்கா மல் புதிய அணைகட்டதீர்மானித் துள்ளனர்.

புதிய அணை கட்டப்படுமானால் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்குள்ள 1999 ஆண்டு ஒப்பந்தம்செல்லாததாகிவிடும். இந்த உண்மை கேரள அரசுக்கும், தமிழகஅரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும்,மன்மோகன் சிங் – சோனியாவிற்கும் நன்றாகத் தெரியும்.

ஆனால் பாதிப்பைக் கண்டு பதை பதைக்க வேண்டிய முதல்வர்கருணா நிதி கடிதம் எழுதிக் காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்.புதிய அணை கட்ட தமிழக ஆறுகளிலிருந்து நாற்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் யூனிட் அளவு மணல்கொள்ளையடிக்கப்பட்டு கேரள வனப்பகுதியில் குவிக்கப்பட்டுவரு கின்றது. (ஒரு லாரியில் ஒன்றரை யூனிட் மணல்நிரப்பலாம்).

நிலம் கைப்பற்றுதல்

தமிழக – கேரள எல்லை மாவட் டங்களான நீலகிரி, கோவை,திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி என ஏழுமாவட்டங்களின் எல்லைப் பகுதியிலிருந்து தமிழகத்தினுள்நூறு கி.மீ. அளவிற்கு உள்ளே நுழைந்து நிலங்களைவாங்கியுள்ளனர் மலையாளி கள். வளைகுடா நாடுகளில்பெரும்பணம் சம்பாதிக்கும் மலையாளிகள் முதலீடு என்றபெயரில் தமிழ்நாட்டில் நிலங் களை வளைத்துப்போட்டுவருகிறார்கள். தமிழ்நாடடுத் தமிழர்களைவிட அதிகவிலைகொடுத்து மலையாளிகள் நிலங்களை வாங்குவதால்தமிழர்கள் மலையாளிகளிடம் நிலத்தை விற்றுவிட்டுவெளியேறுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பில் இன்று 8ல் 1 பகுதிமலையாளிகளின் கையில் உள்ளதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

எல்லையோர மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில்பல இடங்களிலும் இடத்தை வளைத்துப் போடுவதில் குறியாகஇருக்கின்றனர். நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் உள்ளதமிழக வனத்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டிகப்பல் மூலம் ஜப்பான், கொரியா போன்ற நாடு களுக்குக்கடத்தும் தொழிலையும் பகிரங்கமாகச் செய்து வருகிறார்கள்.

நகை வணிகம் :

ஐம்பது, அறுபது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மார்வாடிகள் நகைவணிகம், வட்டிக் கடை நடத்தி வந்தா லும் ஒரே பெயரில்தமிழ்நாடு முழுவதும் கடைகள் திறந்து கிளை பரப்பவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நகைவணிகத் தில் நுழைந்த மலையாளிகள் இன்று ஜோஸ்ஆலுகாஸ், ஜெய் ஆலுகாஸ், மணப்புரம் கோல்டு ஹவுஸ் எனநூற்றுக்கணக்கான கிளைகளைப் பரப்பி விட்டார்கள்.. இந்தநகைக்கடைகளில் கண்ணாடிக் கதவைத் திறந்து விடுப வன்தொடங்கி கல்லாப்பெட்டியில் இருப்பவன் வரைமலையாளிகளே.

நகைக்கடை என்றால் 10 ஷ் 15 அளவில் கடைகள் என்றுநினைத்து விட வேண்டாம். ஐந்தடுக்கு மாடிகள்,நூற்றுக்கணக்கான மலையாள ஊழியர் கள், குளிரூட்டப்பட்டஅறைகள் என விரிந்து கிடக்கின்றன.

மார்வாடிகளால் தமிழர்களின் நகைத்தொழில் நசிந்துநூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சயனைட் அருந்திதற்கொலை செய்து கொண்ட சோக வரலாற்று நிகழ்வின் வலிஆறும் முன்பே மலையாளிகளின் ஆதிக்கத்தால் தமிழக நகைவணிகர் களும் தொழிலாளர்களும் நடுத்தெரு விற்குவரவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதில் வேதனை யும் வேடிக்கையும் என்னவென்றால்அண்மையில் ஜோஸ் ஆலுக்காசின் கிளைத் திறப்புவிழாகடலூரில் நடந்தது. கடையைத் திறந்து வைத்தவர் யார்தெரியுமா? தமிழக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சரானஎம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். மலை யாளிகள் நம்மீது ஆதிக்கம்செலுத்தும் இரகசியம் தெரிகிறதா?

முத்தூட் பைனான்ஸ்:

மலையாளிகளால் சில ஆண்டு களுக்கு முன் சென்னை, மதுரைபோன்ற மாநகரங்களில் மட்டும் முத்தூட் பைனான்ஸ்தொடங்கப் பட்டது. பிறகு குறைவான வட்டி, நகைக் கிராமிற்குஅதிக பணம் நாள் கணக்கில் மட்டுமே கணக்கிடப்படும்வட்டித்தொகையென தமிழக மக்களி டம் கவர்ச்சி காட்டிநகராட்சி தகுதியுள்ள தமிழக நகரங்களில் தமதுவட்டிக்கடையை விரிவாக்கம் செய்த முத்தூட் பைனான்ஸ்நிறுவனத்தினர் இன்று ஐந்தாயிரம், பத்தாயிரம் மக்கள் தொகைகொண்ட சிற்றூர்ப் பகுதிகளில் கூட தனது கிளையைத்தொடங்கி வட் டிக்கடை என்ற பெயரில் தமிழர்களின்சொத்துக்களை ஏமாற்றி பறித்துக் கொள்கிறார்கள் என்பதுதான்உண்மை.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட முத்தூட் பைனான்ஸ் கிளைகள்தமிழகத்தில் வேர்ப்பிடித்து வளர்ந்து வரும் பேரா பத்துபுரியாமல் மலையாளிகளிடம் நகைகளை அடகு வைத்து மனைவாங்கும் தமிழர்கள் பின் வீட்டை விற்று வட்டி கட்டிநடுத்தெருவிற்கு வருகிறார்கள்.

கட்டுமானத் தொழிலிலும் கைவரிசை:

அரை கிரவுண்ட், ஒரு கிர வுண்ட் அளவில் வீடு கட்டிக் கொடுப்பதை நாம் பெருமையாக பீற்றிக் கொள்கிறோம்.

ஆனால் தமிழ்நாட்டில் இன்று பெருமளவில் மதிப்பிடக்கூடியகட்டிடங்களைக் கட்டும் தொழில் மலையாளிகளின் கையில்.தமிழகக் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ஏக்கர்கணக்கிலான பெரிய பெரிய பங்களாக்கள், மாளிகைகளைதமிழ்நாட்டில் எழுப்பிக் கொண்டிருக்கும் பென்னிகுரியகோஸ்என்ற மலையாளியின் கையில்தான் இன்று கட்டுமானத்துறைஉள்ளது.

தமிழகத்திலுள்ள பாரம்பரியமான செட்டி நாட்டு வீடுகளைஎல்லாம் வாஸ்து சரியல்ல என்று இடித்து, அதில் உள்ளபொருட்களை எல்லாம் கொள்ளையடித்து தமிழகக் கட்டிடக்கலைகளைச் சிதைத்து மலையாள கட்டிடக் கலைகளைப்புகுத்திக் கொண்டிருக்கிறார் பென்னி குரியகோஸ்.

இவரது ஆண்டு வருமானம் 500 கோடியைத் தாண்டும்என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதே போல ஆண்டுக்குபலநூறு கோடிகளை இலாபமாக ஈட்டும் எம்.ஆர்.எப். டயர்நிறுவனமும் மலையாளிகளுடையதுதான்.

பண்பாட்டுப் படையெடுப்பு :

தமிழகத்தில் மார்வாடிகளின் ஹோலிப் பண்டிகையைவிடஇன்று பிரபலமாகிக் கொண்டிருக்கின்றது மலையாளிகளின்பண்டிகையான ஓணம்.

தெலுங்கு வருடப் பிறப்பிற்கு விடுமுறை விட்டு அண்டைமாநிலத்துடன் நட்பை வளர்ப்பதுபோல் கேரளத்துடனும்நட்போடு இருக்க வேண்டாமா? இதற்காக தமிழக முதல்வர்கடந்த ஆண்டு தமிழகத்தில் ஓணம் திருவிழாவிற்காக மதுரை,நெல்லை, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி,நாகர்கோவில், குமரி என பதினைந்திற்கும் மேற்பட்டநகரங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்தார்.

இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மலையாளிகள் தமிழகபள்ளி – கல்லூரிகளில் மலை யாளப் பண்பாட்டின்பெருமைகளையும், உள்ளூர் தொலைக்காட்சிகளை ஒரு நாள்குத்தகைக்கு எடுத்து ஓணம் பண்டிகை யின் சிறப்பையும்பரப்புகிறார்கள். இதேபோல கதகளிக்கும் தமிழகத்தில்அண்மைக் காலமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகின்றது.

விளம்பரப் படங்களில்கூட கதகளி இடம் பெறும் அளவிற்குஇன்று நம்மிடையே மலை யாளப் பண்பாட்டுப் படையெடுப்புநிகழ்ந்து வருகின்றது.

செண்டா மேளம் :

மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து மாண்ட நாளில் மதுரையில்மு.க. அழகிரி தனது பிறந்த நாளை கிடாவும், கேக்கும் வெட்டிக்கொண்டாடினார் என்பது தெரிந்த கதைதான்.

மேலும் அன்றைய சிறப்பாக கேரளத்திலிருந்து செண்டா மேளக்குழுவினர் வரவழைக்கப்பட்டு ஆட்டம் பாட்டம் போட்டுஆனந்தத்தில் மூழ்கித் திளைத்தார்கள்.

கேரளத்தில் மட்டுமே பிரபலமடைந்திருந்த செண்டாமேளத்தை தமிழகத்திற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியதுமு.க. அழகிரி தான். இன்று மேல்தட்டு வர்க்கத்தினர் மற்றும்அரசியல் பிரமுகர்களின் இல்ல விழாக்களில் செண்டா மேளக்குழுவினர் தவறாமல் இடம் பெறுகிறார்கள் என்றால் அதற்குமு.க. அழகிரியே முழுமுதல் காரணமாவார்.

அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்கள் கன்னிபூசை நடத்தும்போதுகூட இன்று செண்டா மேளம் இடம் பிடித்துக் கொள்ளும்அளவிற்கு முக்கியத்துவம் பெற்று வருகின்றது. மாநில,மாவட்ட அளவில் நடைபெறும் அரசு விழாக்களில் கூடசெண்டா மேள இசை நிகழ்ச்சி நடைபெறுவதுதான் பெறும்வேதனை.

இதன் உச்சக் சட்டமாக அண்மை யில் கோவையில்கூடிக்கலைந்த செம்மொழி மாநாட்டிலும் செண்டா மேளக்கச்சேரி இடம் பெற்றது செம் மொழி மாநாட்டுப் பாடலைஇயக்கிய வரும் பாடியவர்களில் பெரும்பாலா னோரும்மலையாளிகளே.

வந்தேறி களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில்தமிழர்களுக்கு நிகர் எவருமில்லை என்பதைத் தெரிந்துகொண்ட கேரள அரசு செண்டா மேளத்திற்கென பள்ளி –கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் தொடங்கி இசைப்பயிற்சிமுடித்தவர் களுக்கு சான்றளித்து, அவர்களைத் தமிழகத்திற்குஅனுப்பி வைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது..

முன்பெல்லாம் கேரளத்திலிருந்து செண்டா மேளக் குழுவினர்வந்து போனார்கள். தற்போது தமிழ்நாட்டி லேயேதங்கிவிட்டார்கள். இதனால் நமது பாரம்பரிய இசைக்கலைஞர்களின் வாழ்வில் இருள் சூழும்நிலை தோன்றியுள்ளது.

சூழல் கேடுகள் :

தமிழ்நாட்டிலிருந்து மலையாளி களுக்கு அரிசி, பருப்பு, பால்,காய்கறி முதலான அத்தியாவசிய பொருட்களும், ஆடு, மாடு,கோழி போன்ற இறைச்சி வகைகளும் செல்கின்றன. இதில்கோழியின் கழிவுப் பொருட்களையும், பிளாஸ்டிக் போன்றதிடக் கழிவுகளையும் மருந்துக் கழிவுகளையும் தமிழகஎல்லையில் மலையாளிகள் கொட்டிச் செல்வதுவழக்கமாகிவிட்டது.

அவ்வப் போது உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரி விப்பதுபத்திரிகையில் செய்தியாக வெளிவந்தாலும் தடுக்க வேண்டியதமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க் கிறது.

கோவை மாவட்டத்தில் கடலூர், பொள்ளாச்சி, நடுப்புணி,கிணத்துக்கடவு, வளந்தாயமரம், கோபாலபுரம், செமணாம் பதி,மூணாறு போன்ற இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக கேரளக்கழிவுகள் கொட்டப்படுகின்றன.

தமிழக எல்லைகளில் சோதனைச் சாவடிகள் இருந்தும்,அதிகாரிகளின் மெத்தனத்தால் மலையாளிகள் தமிழகப்பகுதிகளில் கழிவுகளை கொட்டிச் செல்கிறார்கள்.

கடந்த 09-07-2010 அன்று பொள்ளாச்சியில் மருத்துவக் கழிவைக்கொட்டவந்த கேரள லாரியைத் தடுத்து நிறுத்திய பெரியார்திராவிடர் கழக பொள்ளாச்சி வட்டச் செயலாளர் சா.சு.நாகராசன் கைது செய்யப்பட்டார். கைது செய்தது கேரளகாவல்துறையோ என்று அவசரப்பட்டு விடாதீர்கள். நம் தமிழககாவல்துறைதான். பின்னே அண்டை மாநில

3 comments:

விழித்துக்கொள் said...

vanakkam ungaludaya karuththil naanum udanpadugiren adhumaththiramalla thamzhargalukku unarchchivasadum alavukku arivaligalaga illadhadhe kaaranam
nandri

sharfu said...

ur facts r right but u r not seeing the other side of the coin

go to kerala or some other states and check there whats happening there

and one more thing if Tamilnadu only belongs to tamilians and no other than tamilans should live here means then its against the national integrity and illogical then please think abt our brothers who live out side T N

Tiraikadal odiyum thraviam thedu,,,,,,,,,,,,,,????????????

Anand said...

தமிழர்கள் மோசமான சுயநலவாதிகள். இவை எல்லாம் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு தமிழரும் கேரளா கடைகளை ஒதுக்க வேண்டும்.

Followers