KILIYANUR ONLINE

Friday 22 February 2013

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.
2013/2/12 Mohammed Rafiஅன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு>அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.).அல்ஹம்துலில்லாஹ். நலமே விழைகிறேன்.தங்களின் கட்டுரை நம் நாட்டில் நடந்துவரும் எதார்த்தமான உண்மைகளை தெளிவாக எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்வதாக அமைந்துள்ளது. தங்களின் அறிவுறுத்தலின்படியே.. இனியாவது நம் சமுதாயம் விவேகத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்படவேண்டும் என்பதே நம்மனைவரின் விருப்பமும் வேண்டுதலும்.வஸ்ஸலாம்.அன்புடனும் ஸலாமுடனும்>முஹம்மத் ரஃபி கே.எம்.துபாய்- ஐக்கிய அமீரகம்From: Mohamed Sharaf [mailto:afshinsharaf@gmail.com]

இறையின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக.

2001 டிசம்பரில் இந்திய ஜனநாயகத்தின் முதல் தூணாகிய பாராளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்க படுவதற்கான முயற்சி நடை பெற்றது .அந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் சுட்டு கொல்லபட்டனர். அதில் பாராளுமன்றத்தை காப்பாற்றுவதற்காக ஐந்து ராணுவ வீரர்கள் உட்பட பன்னிரண்டு பேர் உயிர் நீத்தனர் . பதினெட்டு பேர் படுகாயமடைந்தனர் என்பதை அனைவரும் அறிவார்கள்.

அன்றைக்கு நம்முடைய நாட்டின் ராணுவம் இதில் வெற்றியடைந்திருக்க வில்லையென்றால் நாம் இழப்பது நம்முடைய நாட்டின் மேன்மைக்குரிய பாராளுமன்றத்தை மட்டுமல்ல . இந்தியாவின் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் நிம்மதியையும் சேர்த்து தான் . பொதுவாக இந்திய இஸ்லாமியர்களின் நிம்மதியை குலைப்பதில் இரண்டு வர்க்கங்கள் முன்னணியில் இருக்கின்றது .ஓன்று காவி பயங்கர வாதிகள் , இரண்டாவது பாகிஸ்தான் பயங்கர வாதிகள். இரண்டின் நோக்கம் வெவ்வேறாக இருந்தாலும் விளைவு ஒன்றாகவே இருக்கும் .

சுதந்திர இந்தியாவில் இஸ்லாமியர்களை கருவறுப்பதற்காக காவி பயங்கரவாதிகள் செய்த முதல் சதி மகாத்மாகாந்தி படுகொலை தான். மகாத்மா காந்தி என்ற ஒரு மகத்தான மனிதனை

படுகொலை செய்யும் அளவுக்கு அவர் ஒன்றும் தங்கள் பரம விரோதி அல்ல என்பது காவிகளுக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் வெறுக்கும் எத்தனையோ இஸ்லாமிய தலைவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் ஏன் அவர்கள் காந்தியை குறிவைக்க வேண்டும் . ஒருவேளை அவர்கள் இஸ்லாமிய தலைவர்களில் யாரையாவது அன்று கொலை செய்திருந்தால் அந்த பழி நேரடியாகவே அவர்கள் மேல் திரும்புவது மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் வளர்ச்சிக்கும் , விழிப்புணர்வுக்கும் ஒரு ஊன்று கோலாக அன்று அது அமைந்திருக்கும் . இயற்கையிலே யூதர்களின் நரி மூளையை கொண்ட அவர்கள் ஒருபோதும் அப்படி பட்ட தவறை செய்ய மாட்டார்கள் . அதனால் தான் அவர்களுடைய நோக்கம் அன்றைக்கு இந்தியர்களால் பெரிதும் நேசிக்க பட்டு தேச பிதா என்று அழைக்க பட்ட இந்து மதத்தை சேர்ந்த காந்தியை கொலை செய்வதாக இருந்தது. அந்த பழியை

இஸ்லாமியர்களின் மீது திசை திருப்பி விட்டு , அதன் மூலம் நாடு முழுவதும் வாழும் அனைத்து அப்பாவி இஸ்லாமிய சொந்தங்களையும் கருவறுப்பது தான் அவர்களுடைய திட்டத்தின் மூலம் அவர்கள் எதிர்பார்த்த பிரதி பலன். அந்த திட்டத்திற்கு காந்தியின் உயிரை ஒரு கருவியாக பயன்படுத்தினார்கள்.அதனால் தான் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே கூட அந்த வேலையை செய்வதற்கு முன்னால் தன்னுடைய கையில் இஸ்மாயில் என்ற இஸ்லாமிய பெயரை பச்சை குத்தி கொண்டு முன்னெச்சரிக்கையாக அந்த கொலையை செய்தான் . ஆனால் நல்ல வேளையாக அன்றைக்கு அந்த சூழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டு அன்றைக்கே காவிகளின் முகங்கள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது . அனைத்து இஸ்லாமியர்களும் அதன் மூலம் அன்று காப்பாற்றப்பட்டனர் . அதனால் தான் இன்றைக்கும் காவிகள் கோட்சேயை தியாகியாக கொண்டாடுகின்றனர். தன்னுயிரை நீத்து தங்களின் கொள்கையை நிறைவேற்ற துணிந்த நாதுராம் கோட்சே காவிகளை பொறுத்தவரை நிச்சயம் ஒரு தியாகிதான்.

ஆனால் அந்த கொலைக்கு பின்னரும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் விழிப்புணர்வு பெற வில்லை. காந்தியை கொன்ற தேசத்துரோகிகள் என்று மட்டும் தான் அவர்களை பற்றி இஸ்லாமியர்கள் புரிந்து கொண்டார்களே ஒழிய அவர்கள் காந்தியை கொல்லும் அளவுக்கு அந்த மகத்தான மனிதனின் மேல் அவர்களுக்கு என்ன கோபம் என்பதையும் ,அந்த கொலைக்கான பின்னணி என்ன என்பதையும், அதன் மூலம் அவர்கள அடைய நினைத்த இலாபம் என்ன என்பதையும் இன்றுவரை சிந்தித்ததாக தெரியவில்லை.

அதன் விளைவு தான் காவிகள் அன்று முதல் இன்று வரை ஏராளமான குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி அதை கச்சிதமாக இஸ்லாமியர்களின் மேல் திசை திருப்பி அதில் பல முறை வெற்றியும் கண்டனர். அதன் உச்ச கட்டமாக தான் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை இஸ்லாமியர்களின் மேல் திசை திருப்பி குஜராத்தை சுடு காடாக மாற்றினார்கள்.

காவிகள் ஒருபுறம் இஸ்லாமியர்களை அழிப்பதற்காக இப்படி பட்ட திசை திருப்பல் வேலைகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் இஸ்லாமியர்கள் அவர்களின் எதிர்ப்பார்ப்புக்கு இனியும் முட்டாள்தனமாக பலியாகிவிடக்கூடாது.

காவிகளின் ஒரு பெரிய சுமையை குறைக்கும் வேலையை தான் பாகிஸ்தான் பயங்கர வாதிகள் 2001 டிசம்பரில் பாராளுமன்ற தாக்குதல் மூலம் செயல் படுத்தியுள்ளனர் . இருவரின் நோக்கம் வேறாக இருந்தாலும் அதன் விளைவு ஒன்றாகவே இருக்கும் . இந்த தாக்குதல் வெற்றியடைந்திருந்தால் இங்குள்ள காவிகள் எந்த கனவை நிறைவேற்ற துடித்து கொண்டிருக்கிறார்களோ அந்த கனவு மிக எளிதாக நிறைவேறியிருக்கும் . நல்ல வேளை இறைவன் நம்மை அந்த சூழலில் இருந்து காப்பாற்றினான்.

பாகிஸ்தான் ஒவ்வொரு குண்டு வெடிப்பை இந்தியாவில் நிகழ்த்தும் போதும் அதிகம் அதிகம் மகிழ்ச்சி அடைவது காவிகளாக தான் இருக்க முடியும் . காரணம் அதன் மூலம் தான் அவர்களுடைய இஸ்லாமியர்களுக்கு எதிரான சதி வேலை எளிதாகிறது. அதன் மூலம் மிக எளிதாக இந்தியாவின் அப்பாவி இஸ்லாமியர்களை கருவறுக்க முடியும் .

ஒவ்வொரு குண்டு வெடிப்பு நடக்கும் போதும் இஸ்லாமியர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் .ஒவ்வொரு அப்பாவி இஸ்லாமியனுக்கும் தீவிரவாத முத்திரை குத்தபடும். உரிமைக்காக குரல் கொடுக்கும் பல இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் இளைஞர்களின் குரல் வளைகள் நெறிக்கப்படும் .

நாம் தேச பக்தர்களாக இருப்பதை காவி பக்தர்கள் ஒரு போதும் விரும்புவதில்லை. எண்ணூறு ஆண்டுகள் இந்த தேசத்தை ஆண்டு ஒரு அகண்ட பாரதத்தை உருவாக்கிய ஒரு சமுதாயம் இன்றைக்கு தாங்கள் உருவாக்கிய நாடுதான் இந்தியா என்ற உண்மையை கூட தெரியாதவர்களாக காவிகள் எதை விரும்புகிறார்களோ அதையே மிக சில வேளைகளில் செய்து அவர்களின் வேலைகளை எளிதாக்குகின்றனர் என்பது தான் மிக பெரிய வேதனை. இந்துக்கள் பெரும்பானமையாக வாழும் இந்திய திரு நாட்டில் பெரும்பான்மையான ஹிந்துக்கள் இஸ்லாமியர்களை போல தேசத்தை நேசிப்பவர்கள் தான் இருக்கிறார்கள் என்பதையும் இஸ்லாமியர்கள் உணர்ந்து காவிகளுக்கும் , இந்துக்களுக்குமான வேறுபாட்டை பிரித்தறிய வேண்டும். இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஹிந்துகளின் சதவிகிதத்தில் ஒரு விழுக்காடு கூட இந்த காவிகளுக்கு பங்கு இல்லை என்பதையும் , மாறாக இந்தியாவை காட்டி கொடுத்தவர்களில் தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் பேரும் காவிகளாகவே இருந்தார்கள் என்பதையும் இஸ்லாமியர்கள் உணர வேண்டும்.

காவிகளின் கனவை சிதைக்க வேண்டுமென்றால் நாம் அதிகம் அதிகம் நம் தேசத்தை நேசிக்க வேண்டும். நாம் உருவாக்கிய தேசத்தில் எந்த அந்நியனையும் நாம் அனுமதிக்க கூடாது. அதற்க்கு எதிராக நாம் போராட வேண்டும் . நமக்கு தான் அதற்க்கு அதிக உரிமை இருக்கிறது என்பதை உணர வேண்டும் .

இந்த உலகில் கடல் இருக்கும் பரப்பளவிற்கு நிலம் இருந்திருந்தால் திப்புவை வெல்ல இந்த உலகில் எவராலும் இயலாது என்று அவனோடு போரிட்ட ஆங்கிலேய தளபதியால் பாராட்டபட்ட திப்பு சுல்தான் போன்ற மாபெரும் வீரர்களின் இரத்தத்தால் உருவாக்க பட்டது தான் நம்முடைய பாரதத்தின் சுதந்திரம் என்பதை நம் மக்கள் உணர வேண்டும் .

நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட அன்றைய காங்கிரஸ் கட்சியில் எட்டு இஸ்லாமியர்கள் சுதந்திரத்திற்கு முன்னால் தலைவராக பணியாற்றியுள்ளனர் . அவர்கள் பதருதீன் தய்யிபி(சென்னை) , ரஹ்மத்துல்லாஹ் சயானி (கல்கத்தா ), நவாப் செய்யத் முகமது பகதூர்(கராச்சி),செய்யத் ஹசன் இமாம் (பாம்பே), ஹக்கீம் அஜ்மல் (அகமதாபாத்) , மௌலானா முஹம்மத் அலி (காக்கி நாடா ), டாக்டர் முக்ஹ்டார் அஹமட் அன்சாரி(சென்னை) , மௌலானா அபுல் கலாம் ஆசாத் (டெல்லி) போன்றோர்.

சுதந்திரத்திற்கு முந்தைய இக்கட்டான காலகட்டங்களில் அன்றைய காங்கிரசில் தலைவராக இருந்தவர் கூட மௌலானா அபுல்கலாம் ஆசாத் என்ற இஸ்லாமியர் தான். அவர்தான் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் மிகப்பெரிய விடுதலை போராட்ட கட்சியாகிய இந்திய தேசிய காங்கிரசில் அதிக வருடம் தலைவராக பொறுப்பேற்றவர் . சுதந்திர இந்தியாவின் முதல கல்வி அமைச்சரும் அவரே , இந்தியாவின் உயர்ந்த முதல் தர கல்வி நிறுவனமான ஐ ஐ டி கூட அவருடைய கல்வி அமைச்சர் பொறுப்பின் போது தான் உருவாக்க பட்டது . ஒரு இஸ்லாமியரின் பொறுப்பின் போது உருவாக்க பட்ட உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமான் ஐ ஐ டியை நம்மால் இன்றைக்கு ஏணி வைத்தால் கூட எட்டி பிடிக்க முடியாது என்பது வேறு விசயம். அது போல சுதந்திர இந்தியாவில் ஒரு இஸ்லாமியருக்கு கூட காங்கிரசின் தலைமை பொறுப்பு வழங்கப்படவில்லை.

இன்றைக்கு காங்கிரசின் தலைவராக இருப்பது சுகமான சுமை.எத்தனை வருடம் வேண்டுமானாலும் நிம்மதியாக காங்கிரஸ் தலைவராக இருக்கலாம் . அதனால் தான் இன்றைக்கு காவிகள் கூட காங்கிரசில் ஊடுருவி விட்டனர். ஊடுருவி விட்டனர் என்பதை விட ஆக்கிரமித்து விட்டனர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஆனால் இம்மென்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற ஆங்கிலேயனின் அன்றைய ஆராஜக ஆட்சியில் அவனுக்கு எதிராக சிங்கமென கர்ஜித்து காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் என்ற இரண்டு விடுதலை போராட்ட இயக்கத்தையும் ஒருசேர தலைமை தாங்கி நடத்தியவர்கள் தான் நம் இஸ்லாமிய சகோதரர்கள். ஆனால் மறைக்கப்பட்ட வரலாறு ஒரு புறம் இருக்க இருக்கின்ற வரலாறுகளை கூட நம் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் தெரிந்தவர்களாக இல்லையென்பது தான் வேதனையிலும் வேதனை. அதனால் தான் நம்முடைய தியாக வரலாறுகளை மாற்று மத சகோதரகளுக்கு எடுத்து வைக்க கூட நம்மால் இயலவில்லை .

காவிகள் நம்மை இரண்டு வழிகளில் வீழ்ச்சியடைய வைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். ஓன்று நம்மை தீவிரவாத முத்திர குத்தி தேசத்தின் விரோதிகளாக காண்பித்து சக இந்து சகோதரர்களிடம் இருந்து நம்மை பிரிப்பது.

இரண்டாவது அந்த சதியை நிறைவேற்ற அரசாங்கம் மற்றும் அதிகார வட்டத்த்தில் அனைத்து இடங்களையும்

காவிகளை கொண்டு நிரப்புவது.

முதல் விசயத்தில் இவர்கள் முழுமையாக இதுவரை வெற்றியடைய வில்லை என்றாலும் இரண்டாவது விசயத்தில் கணிசமான அளவு வெற்றியடைந்து விட்டனர். நீதி துறை , காவல் துறை, ராணுவம் உட்பட அனைத்து துறைகளிலும் காவிகளை ஊடுருவ செய்து விட்டனர்.

இவர்களின் இந்த இரண்டு சதிகளையும் முறியடிக்க நாம் செய்ய வேண்டிய காரியம் அரசியல் , மற்றும் அதிகார வட்டங்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை பெறுவதற்கு பாடுபடுவது.

அடுத்து நாம் உருவாக்கிய நம்முடைய நாட்டின் மீது நாம் கொண்டுள்ள தேசபற்றை பல வழிகளிலும் நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல் நம்மை போன்ற தேசபக்தர்களாகிய ஹிந்து சகோதரர்களை இந்த காவிகளிடம் இருந்து பிரிப்பது .மேலும் அவர்களை நம்மோடு இணைப்பது.

இந்த இரண்டு குறிக்கோளையும் நாம் அடைய வேண்டுமென்றால் நாம் உலக விசயங்களில் ஓன்று பட வேண்டும். தூய மார்க்கத்தை எடுத்து வைக்கும் அரிய பணியில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் நமக்குள் இருந்தாலும் நம்முடைய சமுதாய சுதந்திரத்தை காப்பாற்றும் பணியில் நாம் ஓன்று படுவதற்கு குரானும் , ஹதீசும் ஒரு போதும் தடை விதிக்க வில்லை என்பதையும் உணரவேண்டும்.

காலம் தாழ்ந்து விட்டாலும் இந்த இரண்டு பணிகளையும் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள் செய்வதன் மூலம் தான் நாம் கண்ணீரும் , செந்நீரும் சிந்தி பெற்ற நம் சுதந்திரத்தை இனியேனும் காப்பாற்ற முடியும் .

சகோதரத்துவத்துடன்,
முகமது ஷரஃப்No comments:

Followers