ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து யா ரசூலல்லாஹ்! ஓர் அமலை எனக்கு அறிவித்துத் தாருங்கள். நான் அதனைச் செய்தால் அல்லாஹ்வும் மக்களும் என்னை நேசிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு அண்ணலார், உலக வியத்தில் பற்றற்று இருப்பீராக..! அல்லாஹ் உம்மை நேசிப்பான். மக்களின் கரங்களில் உள்ள(பொருள்களின்) வியத்தில் பற்றற்று இருப்பீராக. மக்கள் உம்மை நேசிப்பர் என்று அறிவுரை கூறினார்கள்.
நூல் : இப்னு மாஜா-அறிவிப்பவர், ஸஹல் இப்னு ஸஃதிஸ் ஸாயிதீ (ரலி)
* நபி (ஸல்) நவின்றதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். நல் அமல்கள் புரிவது கொண்டு ஏழு வியங்களை முந்திக் கொள்ளுங்கள்.
1. மறக்கடிக்கக் கூடிய வறுமை.
2. அநியாயத்தைத் தூண்டக்கூடிய செல்வச் செழிப்பு.
3. உடலைக் கெடுக்கக்கூடிய நோய்.
4. பேச்சைக் குழறச் செய்யும் முதுமை.
5. திடீர் மரணம்.
6. தஜ்ஜாலின் வருகை. அவன்(வருகை) எதிர்பார்க்கப்படும் மறைவான வியங்களில் கெட்டதாகும்
7. மறுமை நாளின் வருகை . நிச்சயமாக அது திடுக்கிடச் செய்யக் கூடியதும் மிகக் கசப்பானதுமாகும்.
இவற்றைத் தவிர என்ன நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? (இவை வருவதற்கு முன்னர் நல் அமல்களை விரைவாகச் செய்து கொள்ளுங்கள்.) நூல் : திர்மிதி
* நபி (ஸல்) அவர்கள் பகர்ந்ததாக ஹுதைபா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
அறிவுச்சிந்தனை அற்றவராக ஆகாதீர்கள்; மக்கள் நமக்கு நன்மை செய்தால் நாம் நன்மை செய்வோம்,அவர்கள் அநியாயம் செய்தால் நாமும் அநியாயம் செய்வோம் என நீங்கள் சொல்கிறீர்கள்;(இது சரியல்ல) எனினும் மக்கள் நன்மை செய்தால் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். அவர்கள் தீங்கிழைத்தால் நீங்கள் அநியாயம் செய்யக்கூடாது என உங்கள் மனதில் (உறுதியாக) எண்ணுங்கள். (திர்மிதி)
* நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
உண்மையை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.நிச்சயமாக உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். நன்மை சுவனத்தின் பக்கம் வழிகாட்டும். உண்மை கூறும்; உண்மை கூறவே முயலும் மனிதர் அல்லாஹ்விடம் உண்மையாளர் என எழுதப்பட்டுக் கொண்டிருப்பார்.
பொய்யை உங்களுக்கு எச்சரிக்கிறேன்.நிச்சயமாக பொய் பாபத்தின் பக்கம் வழிகாட்டும்.பாபம் நரகத்தின் பக்கம் வழிகாட்டும்.பொய் கூறும்; பொய் கூற முயலும் மனிதர் அல்லாஹ்விடம் பொய்யராக எழுதப்பட்டுக் கொண்டிருப்பார்.
நூல் : புகாரீ, முஸ்லிம், அபூதாவூத்.
No comments:
Post a Comment