KILIYANUR ONLINE

Tuesday 30 November 2010

ஞானத்துளிகள்

தயிரும் வெண்ணையும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகளாய் இருக்கின்றன. அதே விதத்தில் ஆத்மாவாகிய ஜீவனும் அனாத்மாவாகிய ஜகத்தும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன.

* மனிதனுக்கு எட்டுவித பந்தங்கள் இருக்கின்றன. அவை வெட்கம், வெறுப்பு, அச்சம், ஜாதிச்செருக்கு, வம்சாவழிச் செருக்கு, சீலம், துயரம், உள்ளத்தில் ஒளித்து வைத்தல் என்பனவாம். குரு கடாட்சமின்றி இப்பந்தங்களிலிருந்து சாதகன் ஒருவன் விடுதலையடைவதில்லை.

* இவ்வுலகமென்னும் இக்கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டால் அதினின்று விலகி வெளியே வரமுடியாது.

* இவ்வுலகம் ஒரு முட்செடி போன்றது. இதில் மாட்டிக் கொண்டுள்ள துணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்குள் மற்றொரு பகுதி இதில் மாட்டிக் கொள்கிறது. உலகமென்னும் முட்செடியில் அகப்பட்டுக் கொள்கிறவர்களின் கதியும் இப்படியே.

* போகத்திலேயே மக்கள் கண்ணுங் கருத்துமாயிருக்கின்றனர். ஆனால் போகமோ துன்பம் மிக நிறைந்ததாக இருக்கிறது. நதிப்பிரவாகத்திலிருக்கும் சுழலுக்கு நிகரானது இவ்வுலகம். அச்சுழலுக்குள் படகு ஒன்று அகப்பட்டுக் கொண்டால் அது தப்பித்து வெளியே வரமுடியாது. இவ்வுலகில் அகப்பட்டுக் கொள்கிறவர்களின் கதியும் இப்படியே.

* பத்தாத்மாக்கள் பகவானைப் பற்றி நினைப்பதில்லை. அவர்களுக்கு ஓய்வு கிடைக்கிறபொழுது பயனற்ற பேச்சில் காலத்தை விரயம் பண்ணுகின்றனர். வீண் வம்பு அளக்கின்றனர்; மடத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். பொழுதே போவதில்லையயன்றால் அவர்கள் சீட்டாட ஆரம்பித்து விடுகின்றனர்.

* யான் எனது என்பன அக்ஞானத்தில் தோன்றியவை; என் வீடு, என் செல்வம், எனது கல்வி, எனது உடைமை என்பனவெல்லாம் அக்ஞானத்தில் தோன்றியவைகள். இதற்கு நேர்மாறாக இறைவா, யாவும் உன்னுடையவைகள்; வீடுவாசல் மனைவி மக்கள் ஆகிய எல்லாம் உன் உடைமைகளாம் என்று கருதுவது விவேகத்தின் விளைவு.

* சரீர சம்ரக்ஷணைக்காக ஏதாவது பொருளுதவியை ஏற்றுக் கொள்கிற சாது ஒருவனைப் பார்த்து உலகத்தவர் அவன் சரியான சாது அல்ல என்று முடிவு கட்டுகின்றனர். உடலைப் பேணுதல் நிகழ்ந்தாக வேண்டுமேயயன்று உலகத்தவர் எண்ணிப் பார்ப்பதில்லை.

* ஓர் இளைஞனைப் பார்த்துப் பரமஹம்ஸர் பகர்ந்தார். நீ உத்தியோகம் ஏற்றுக் கொண்ட நாள் முதல் உன் முகத்தில் இருந்த தேஜஸ் மங்கிப் போய் விட்டது. இருள் சூழ்ந்திருப்பதாக அது தென்படுகிறது. உன் தாயின் சம்ரக்ஷணைக்காக இந்த உத்தியோகத்தை நீ ஏற்றிருப்பதால் நான் அதை ஒருவாறு ஆமோதிக்கிறேன். வேறு எந்தக் காரணத்தை முன்னிட்டாவது அந்த உத்தியோகத்தை நீ ஏற்றிருப்பாயாகில் நான் உன் முகத்தில் விழித்திருக்க மாட்டேன்.

* தெய்வம் தனக்கு அன்னியமாக எங்கேயோ இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருப்பவன் அஞ்ஞானத்தில் உழல்கின்றான். தெய்வம் தன் உள்ளத்திலேயே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும்பொழுது அவன் ஞானியாகிறான்.

* சுத்த மனது படைத்திருக் கிறவர்கள் தாங்கள் உலகுக்கு இன்றியமையாதவர்கள் என்று உணருவதில்லை.

* மனிதன் ஒருவன் தன் பொருளைப் பற்றிய பொறுப்பையயல்லாம் மனைவியிடம் கொடுத்து வைக்கிறான். பொருளை தான் ஒரு பொழுதும் பொருள்படுத்துவதில்லை யயன்று தற்பெருமையுடன் சொல்லிக் கொள்கிறான். உண்மையில் அவன் காமத்துக்கும் காசுக்கும் அடிமை.

* யானை ஒன்றைப் பாருங்கள். உயிர் வகைகளுள் அது மிகப் பெரியது. ஆனால் ஈசனைப் பற்றி நினைக்க அதற்கு இயலாது. சிலர் ஆத்ம சாதன வகைகளுள் ஏதேனும் இரண்டொன்றைப் பெற்று அந்த அளவில் நின்றுவிடுகின்றனர்.

* பெண்கள் பக்திப் பாடல்கள் பயில்வதும் பாடுவதும் நன்று. ஆனால் நினைத்த இடத்திலெல்லாம் அவர்களைப் பாடவிடலாகாது. அப்படிப் பாடினால் பெண்களுக்கு இயல்பாக இருக்கவேண்டிய நாணத்தை அவர்கள் இழந்து விடுவார்கள்.

* குருவிற்குச் சொந்தமாயிருக் கிறவர்கள் குரு திட்டினாலும் அவரை விட்டுப் பிரியமாட்டார்கள். குரு மிகக் கண்டிப்பாக நடந்து கொண்டாலும் உண்மை சீடர் குருவிடம் வருவதை நிறுத்திவிடுவதில்லை.

* உடலுக்கு உற்றார் உறவினராய் இருந்தவர்கள் கால மாற்றத்தில் வேற்றார் ஆனார்கள். ஆனால் முன்பு வேற்றாராயிருந்த பக்தர்கள் பின்பு உற்றார் ஆனார்கள்.

* துறவியர்களுக்கிடையிலும் அபிப்பிராய வித்தியாசம் ஏராளமாக உண்டு. ஒரு தடவை ஓரிடத்தில் சாது மகாத்மாக்களுக்கு அமுது படைப்பதற்கு உணவு ஏராளமாகச் சமைக்கப்பட்டிருந்தது. வெவ்வேறு சம்பிரதாயக்காரர்கள் அங்குக் கூடினர். ஒவ்வொரு சம்பிரதாயக்காரரும் தங்களுக்கே முதலில் அமுது படைக்க வேண்டும் என்று வாதாடினர். அமுது படைத்தவரோ அவர்கள் பேச்சுக்குக் காது கொடுக்கவில்லை. எல்லார்க்கும் ஏககாலத்தில் படைப்பதாக அவர் சொன்னார். அதற்குச் சம்மதிக்காது துறவியர்கள் எல்லாரும் எழுந்து போய்விட்டனர். சமைத்த உணவு வகைகளை யயல்லாம் பிறகு வேறு யார் யாருக்கோ வழங்க வேண்டியதாயிற்று.

No comments:

Followers