KILIYANUR ONLINE

Tuesday 30 November 2010

ஒளியின் ஒளியே!

திருமறைப் பக்கம்

ஒளியானது பல வகையிலும் மருட்சி கொள்கிறவனை மருட்டிக் கொண்டிருக்கும். ஹக்கு கூறுகிறது. மருட்டும் வஸ்து அல்லாஹ்வைக் கொண்டு உங்களை மருட்டாதிருக்கட்டும். (அல்லாஹ்வின் பாதையில் ஷைத்தானின் மருட்சி ஒரு புறமிருக்க அல்லாஹ்வின் திருவருட்களிற் சிலதுங் கூட மருட்டும் பொருட்களாக ஆகின்றன.)

ஒளியானது, எல்லாச் சிருஷ்டிகளும் அதனால் ஜீவன் கெண்டு நிற்கிற ஆத்ம அம்சமாகும். எந்த வஸ்தும் ஓர் உருவத்தைக் கொண்டேயயாழிய இல்லை. எந்த உருவமும் தைலம் சம்பந்தப்பட்ட நிறங்களிலிருந்து ஒரு நிறத்தைக் கொண்டல்லாது இல்லை. நிறமும் உருவமும் ஒன்றையயான்று பிரியாது. உருவம் நிறத்தைக் கொண்டல்லாது காணப்படாது. நிறமோ, தத்துவ, பூத, பெளதீக ஆதாரங்கள் விவரிக்கின்றன போன்று, ஆத்மார்த்த ஜீவ அம்சமாகிய ஒளியினின்று மாயிருக்கும் என்றாலும், இஃதை அறிவின் பட்டணமாகிய முஹம்மதிய சந்நிதானமானது. இந்த அறிவுப் புட்பங்களின் மொட்டுக்கள் திறக்கிறதற்கு முன்பே, பதிமூன்று நூற்றண்டுகளுக்கு முன்பு இதை விவரித்து அந்த விவரத்தை மிக அழகாகக் கூறி திருவாய் மலர்ந்தருளியது. நானோ அல்லாஹ்வின் ஒளியின்று மாயிருக்கிறேன். எல்லா வஸ்துக்களும் எனது ஒளியினின்று மாயிருக்கின்றன. இதனால் வஸ்துக்களுடைய உயிர்களின் அம்சம் அதுவென்றும், அது அல்லாஹ்வின் ஜீவ அம்சமான ஒளியினின்றும் என்றும் அந்த முஹம்மதிய சந்நிதானம் கூறுகிறது.

இந்த ஹதீது தொடர் வாக்கியத்தின் இரு பகுதிகளிலுமுள்ள ‘நின்றும்’ என்ற சொல்லானது அதிகமான என்று கூறுகிற சத்திய அறிஞர்களும் உளர். அப்படியானால் அந்தத் தொடர் வாக்கியம் நான் அல்லாஹ்வின் ஜோதி. வஸ்துக்களடங்கலும் எனது ஜோதி என்றாகும். அல்லாஹ்வானவன் வானங்களுடையவும் பூமியுடையவும் ஜோதியாயிருக்கிறான் என்று ஹக்கு கூறுகிறது. முடிவாகக் கூறுமிடத்து அல்லாஹ்வானவன் ஒளியாகும். சம்பூரண தோன்று துறையாகிய முஹம்மதிய சந்நிதானமும் ஒளியாகும். மற்ற வஸ்துக்களும் ஒளியாகும். எனவே அடங்கலும் ஹக்கு அதுகொண்டு பிரதிபிம்பிக்கும் ஒளியாகும். (எனவே ஒளியானது சர்வத்திலும் சம்பந்தப்படும் ஜீவ சக்தியாகும். பல நிறம், தரம் கொண்டும் அது பிரதிபிம்பிக்கும்.) ஆதலால் ஒளியைக் கொண்டு மாத்திரம் மருளாதே. ஒளி வஸ்துக்களில் ஒன்று. இன்னும் ஹக்கின் வழியில் நடக்கிறவன் அதில் மருட்சி கொண்டு தட்டழிகிற திரையுமாகும். ஆதலால் உனது ஆசையினாலும் இச்சையினாலும் ஒளித்திரைகளைக் கரித்துவிடு. அந்த ஒளியின் சமுத்திரங்களைத் தாண்டிவிடு. நீ அல்லாஹ்வில் முற்றுமழிந்து நான், நீ, அவன், இவன் என்றில்லாது அவனிலே நீ தரிபடுகிற அல்லாஹ்வைக் கொண்டொழிய நீ பொருந்தாதே. ஒன்றுக்கொன்று எதுகையாகும் பெயர்களைவிட்டு நீ பரிசுத்தமாகு. சம்பூரண நேர்மைக்காக அக்ஷரமும் சப்தமுமின்றி நீ ஞாபகப்படுத்தப்படுகிறதற்காக, மிகப்பெரிய வெற்றி கொண்டு நீ ஜயம் பெறுகிறதற்காக,

ஹக்குகூறுகிறது: அல்லாஹ்வானவன் வானங்களுடையவும், பூமியுடையவும் ஒளியாவான். அவனின் ஒளிக்கு ஒப்பு. ஒரு கண்ணாடித் தூக்கு விளக்கைப் போலாகும். அதிலே விளக்கு இருக்கிறது. அந்த விளக்கு ஒரு கண்ணாடிப் பாத்திரத்திலிருக்கிறது. அந்தக் கண்ணாடிப் பாத்திரமோ மேற்கத்தியது கிழக்கத்தியது என்றில்லாது ஆசீர்வதிக்கப்பட்ட ஸைத்தூன் (எண்ணைய்) மரத்திலிருந்து எரிக்கப்படுகிற முத்துப்போன்ற நட்சத்திரத்தைப் போலாயிருக்கும். அதன் எண்ணெய் பிரகாசிக்கிறது. அதை நெருப்புத் தொடாதுபோயினும் ஒளியின்மீது ஒளியாக இருக்கிறது.

ஹக்கானது ஆத்மார்த்த விளக்கை, ஒளிக்குரிய முத்துப்போன்ற நட்சத்திரத்திற்கு ஒப்பாயிருக்கிறது.
எனவே, அறிந்துகொள். முத்துப்போன்ற பிரகாசிக்கும் நமது சத்திய சுந்தரியானது பிரபஞ்ச ரகசியங்களடங்களையும் தனக்குள்ளடக்கியுள்ள இந்தத் திருவசனத்திலிருந்து துருவி ஆராய்ந்து தெரிந்தெடுக்கப்பட்டதாகும். ஆகவே, இவன் அவன் அல்லது அவள் என்றெல்லாம் கூறப்படுகிற அந்த இரகசியம் ஸர்வ சுந்தரங்களும், லட்சணங்களுங்கொண்டு வெளியாகி என்றுமிருந்து நடந்து கொண்டிருக்கிற பரம இரகசியமாகும். மேலும் அது அகப்பார்வையுடையவர்களின் அகக்கண்களுக்கு சர்வ பொருட்களையும் தெளிவு படுத்துகிற ஒரு சூரியனாகும். (சத்திய சுந்தரியயன்று கூறும் இந்த மறைந்த ஜீவ சக்தியாகிய ஹக்கின் திருவருட் சுந்தரமே, ஹக்கின் திருவருள் பெற்ற காமிலான இன்ஸானை உயிர்ப்பித்து, ஆத்மார்த்தமான சர்வ அருட்பேறுகளையும், ஹக்கின் அன்புப் பொக்கி­த்திலிருந்து வாரி இறைத்து, நித்திய ஜீவனையும், எண்ணற்ற, ஒப்பற்ற அருட்கொடைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கும் இரகசிய அம்சமாகும். அதையே வாலை, சுந்தரி, சுந்தரம், நித்திய ஜீவன் என்றெல்லாம் பரிபாஷைகளில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. அவன் வழியாக எமக்கான சிலதைக் கீழே தருகிறோம்.

(குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸயித் யாஸீன் மெளலானா நாயகம் (ரலி) அவர்களின்
கலிமா விருட்சக் கனிந்த கனி நூலிலிருந்து.....)

No comments:

Followers