KILIYANUR ONLINE

Sunday, 28 November 2010

ஒளியியல்

கண்ப்பார்வை ஒளி சம்பந்தமான ஆராய்ச்சியிலும் முஸ்லிம்கள் ஈடுப்பட்டுள்ளனர். ஈராக்கில் உள்ள பஸ்ரா நகரில் பிறந்த அபூ அலி முஹம்மது இப்னு அல்ஹசன் இப்னு அல்ஹைதம் (கி.பி 965 - 1039 ) என்பவர் இயற்பியலாளராக, வானவியல் அறிஞராக, கணித மேதையாக, தத்துவ ஞானியாக, பொறியாளலாரக, மருத்துவராக, இறையியல் அறிஞராகவும் விளங்கினார். இவர் மேற்குலகில் அல் ஹாசன் என்றே அலைக்கபடுகிறார்.

இவர் தன் வாழ்நாளில் பல்வேறு துறைகள் குறித்து மொத்தம் 200 நூல்கள் எழுதியுள்ளார். ஆயினும் ஒளியியல் சம்பந்தமாக இவர் எழுதிய கிதாபுல் மனாசிர் என்ற நூலே மிகவும் பிரபல்யமானது. இவரது இந்நூல் செயல்முறை ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பற்ற படைப்பாகும். இந்நூல் ஒளியின் இயல்பு, அதன் நிறம் மற்றும் கண்ணின் பகுப்பாய்வு, செயலியல், பார்வை, அதன் பிரதி பிம்பம், ஒளிவிலகல்(Refraction ) ஆகியவற்றின் நிகழ்வுகள் பற்றி விவரிகின்றது. நவீன ஒளியியல் (Modern Optics ) விஞ்ஞானமே இவரிடமிருந்து தான் ஆரம்பமாகிறது.

இப்னு அல் ஹைதம் எழுதிய "கிதாபுல் மனாசிர்" என்ற நூல் ஆறு நூற்றாண்டுகள் விஞ்ஞான சிந்தனையின் மீது இடைவிடாது செல்வாக்கு செலுத்திய உயர் தனி இலக்கியமாக் (Classic ) விளங்குகின்றது.

லத்தின் எழுத்தாளர்களான ரோஜர் பேகன், ஜான் பெக்காம் விட்டியோ, முஸ்லிம் எழுத்தாளர்களான அஹ்மத் இப்னு இத்ரிஸ் அல்கரபி, குத்புதீன் அல்ஸிராசி, ஹீப்ரு மொழி எழுத்தாளரான பென் கெர்சன் போன்றோர் இந்நூலையே தங்களது படைபிற்கு ஆதாரமாக கொண்டனர். இவர்களில் ரோஜர் பேகன் என்பவரோ தான் எழுதிய சீபஸ் மஜாஸ்(Cepus Majus ) என்ற நூலின் ஐந்தாம் பகுதியில் ஒளியியல் சம்பந்தமான கருத்துகளை கூறியுள்ளார். இந்த பகுதி முற்றிலும் இப்னு அல் ஹைதம் எழுதிய "கிதாபுல் மனாசிர்" நூலிலிருந்து அப்படியே எடுத்து பிரசுரிக்கப்பட்டதாகும். அதாவது காப்பியடிக்கப்பட்டதாகும் என்பதை வரலாற்று அறிஞர் ராபர்ட் பிரிபால்ட் தனது மனித இனத்தை உருவாக்குதல் என்ற நூலில் மிக்க வேதனையோடு எடுத்துரைக்கிறார்.

(ஆதாரம்: S.H.M முஹையதீன் எழுதிய உலகின் அறிவியல் முன்னோடிகள் எமும் நூலிலிருந்து...)

2 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இஸ்லாமிய அறிஞர் பற்றி நல்ல தகவல்
அளித்தீர்கள். நன்றி!

//அடிப்படையாகக் கொண்ட ஊர் //
-இதில் //ஊர்// என்பதை "ஓர்" என்று
திருத்துங்களேன்.

கிளியனூர் ஆன்லைன் said...

உங்கள் வருகைக்கும் சுட்டிக்காட்டலுக்கும் மிக்க நன்றி சகோதரரே

Followers