KILIYANUR ONLINE

Thursday 9 December 2010

எண்ணமே வாழ்க்கை

•எண்ணங்களே உலகின் மிகச் சிறந்த சக்தியாகும்.
•எண்ணங்கள் அசைந்து செல்லும் தன்மை உடையவை.
•எண்ணங்கள் ஒன்று பலவாகப் பருகும் தன்மை உடையவை

•நல் எண்ணங்களின் சேமிப்பே ஆற்றலை சேமிக்கும் முறையாகும்
•எண்ணங்கள் – செயலாகி, செயல் – பழக்கமாகி, பழக்கம் – பண்பாகி, பண்பு – விதியாக மாறுகிறது.
•எண்ணம் தூண்ட மனம் செயல்படுகிறது. மனம் செயல்படும்போது உடலும் செயல்படுகின்றது.
•மகிழ்ச்சியான எண்ணங்கள் மன ஆற்றலை வளர்க்கின்றன. துன்பமான எண்ணங்கள் மன ஆற்றலை குறைக்கின்றன.
•பகைவனைக்கூட நல்ல எண்ணங்கள் மூலம் நண்பனாக்கலாம்.
•தீயவர்களைக்கூட நல்ல எண்ணங்கள் மூலம் நல்லவர்களாக மாற்றி விடலாம்.
•ஒத்த எண்ணங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்தவை.
•நல்லெண்ணம் படைத்தவர்களின் உள்ளொளி அந்த வட்டத்துக்குள் வந்தவர்களுக்கு எல்லாம் நன்மை செய்கிறது.
•நம்பிக்கை மிகுந்தவர்கிடமிருந்து வெளியாகும் எண்ணங்கள் பிறரிடமும் நம்பிக்கையை வளர்க்கின்றன.
•எங்கெங்கோ இருக்கும் பலருடைய நல்ல எண்ணங்கள் ஒன்று சேரும்போது மிகப்பெரிய நல்ல விளைவை உண்டாக்குகின்றது.
•நம் எண்ணங்களின் ஆற்றலுக்கு ஏற்பவே நமக்கு வெற்றி கிடைக்கிறது.
•எண்ணத்தின் மூலம் தூரத்திலுள்ள பொருள்களைப் பார்க்கலாம். ஒலிகளைக் கேட்கலாம்.
•உயர்வான எண்ணங்கள் உடலைப்பொலிவாக ஆக்குகிறது. எண்ணங்கள் நம் சூழ்நிலையை உருவாக்குகின்றன.
•மனதை ஒருமைப்படுத்துவதன் மூலம் எண்ண ஆற்றலைப் பெருக்கலாம். முறையான பழக்க வழக்கங்கள் மூலம் எண்ணங்களை ஒருமைப்படுத்தலாம்.
•ஒரு நேரத்தில் ஒன்றைப் பற்றித் திரும்ப திரும்பச் சிந்திப்பதால் மனதை ஒருமைப்படுத்தலாம்.
•எண்ணங்கள் உயிருள்ளவை. அவற்றை வளர்க்கும் முறையில் வளர்த்தால் பயன் பெறலாம்.
•ஒரு மனிதனின் தீர்மான எண்ணத்தின்படியே அவன் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது.
•இன்றைய வாழ்க்கை அவனது இதுநாள் வரையான எண்ணங்களின் விளைவே ஆகும்.
•இந்தப் பரந்த உலகில் ஒருவன் எண்ணும் அளவிற்கு அவனுக்கு சொந்தமாகிறது.
•முடியும் என்ற எண்ணம் உடையவர்களால் மட்டுமே எதனையும் சாதிக்க முடியும்.
•யாரிடமிருந்து எதைப் பெற்றாலும் அது அவரவர் எண்ணத்தின் விளைவேயாகும்.
•தீவிரமாக எண்ணும் அனைத்தும் அடையக் கூடியவையே
•சரியான எண்ணங்களின் மூலம் சரியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
•நம்முன் தோன்றும் எண்ணங்கள் நாம் அடைய விரும்பும் நிலையை அடைய உதவும்.
•ஒரு மனிதனின் கட்டுப்பாடான வாழ்க்கை எண்ணத்தின் ஆற்றலைப் பெருக்குகிறது.
•எண்ணம் படகு போன்றது. நம்மைப் பயனுள்ள இடத்தற்கு அது அழைத்துச் செல்கிறது.
•நல்ல எண்ணங்களே உலகை ஆள்கின்றன.
•ஒழுக்கமுள்ள மனிதர்களின் எண்ணங்கள் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவை. அவை நல்ல விளைவுகளை உண்டாக்கும்.
•உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைக்கும் போது எண்ணங்கள் ஆற்றல் பெறுகின்றன.
•எல்லோரும் வாழ வேண்டும் என்பதைவிடச் சிறந்த எண்ணம் ஒன்றில்லை.
•நல்ல எண்ணங்கள் மூலம் இவ்வுலகில் புதிய நாகரிகத்தையே தோற்றுவிக்கலாம்.

No comments:

Followers