KILIYANUR ONLINE

Sunday 26 December 2010

இன்று சுனாமி நினைவு நாள்

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி உலகையே உலுக்கிய 'சுனாமி' யால் லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று உலகையே உலுக்கிய மறக்க முடியாத சுனாமி வந்து போன நாள். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் எழுந்த சுனாமி ஆழிப் பேரலைகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை என இந்தியக் கடலோர நாடுகளை சுழற்றிப் போட்டது.

குறிப்பாக நாகை மாவட்டத்தில் நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், பொறையாறு, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் பனைமர அளவுக்கு வந்த ராட்சத கடல் அலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் பலியானார்கள். தமிழக மக்களின் நெஞ்சை உலுக்கீய இந்த சம்பவத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

லட்சக்கணக்கானோர் இந்த சுனாமி கோர தாண்டவத்திற்கு உயிரிழந்தனர்.

இந்த ஆழிப் பேரலைத் தாக்குதலில் பேரிழப்பை சந்தித்தது. நாகப்பட்டனம், கடலூர், கன்னியாகுமரி, சென்னை என தமிழக கடலோர மாவட்டங்கள் கடும் பாதி்ப்பையும், உயிரிழப்பையும் சந்தித்தன. ஆனால் நாகையும், கடலூரும்தான் மிகப் பெரிய அளவில் உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்களாகும்.

இன்று (26-ந்தேதி) 6-ம் ஆண்டு நினைவு தினம்அனுசரிக்கப்படுகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோர கிராமங்களில் சுனாமி 6-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. சுனாமி பேரலை வந்த அதே ஞாயிற்றுக் கிழமை, இந்த ஆண்டு நினைவு நாள் வருவது குறிப்பிடத்தக்கது.

எத்தனையோ வசதிகள், உதவிகள், ஆதரவு கரம் நீட்டினாலும் கூட 6 ஆண்டுகள் ஆகியும் “சுனாமி” கோர தாண்டவத்தின் வடு இன்னும் நாகை மக்களுக்கு நீங்கவில்லை, என்னவோ உண்மைதான்!

No comments:

Followers