KILIYANUR ONLINE

Tuesday 25 January 2011

வருது, வருது மக்கள் மதியங்கும் தேர்தல் வருது!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)

1951 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின்பு மக்களவைக்கும், மாநில சட்டசபைக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வாக்காளர்கள் கதவுகளை வந்து தட்டும.; சில அசாத்தியமான சமயங்களில் ஐந்தாண்டுகளுக்கு முன்பே தன் தலையினை வெளிக்காட்டு;ம.;
யுhனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொக்கிணங்க இந்திய குடி மக்கள் அதனை அறிந்து கொள்ளும் விதமாக பொது மற்றும் தனியார் சுவர்களில் போட்டி போட்டுக் கொண்டு வண்ண வண்ண எழுத்துக்களில் தங்கள் கட்சி சின்னங்களை பொறித்து விளம்பரம் செய்கின்றன. துண்டு நோட்டீஸிலிருந்து மெகா சுவரொட்டி வரை அச்சடிக்கப்பட்டு விநியோகித்தும் மற்றும் சுவர்களிலும் ஒட்டியும், தட்டிகளில் ஒட்டியும் ரோடு ஓரங்களில் வைக்கப்படும். ஃபிளக்ஸ் பேனர்கள், டிஜிட்டில் போர்டுகள் அலங்கரிக்கும். மின்சார திருட்டுகள் நடத்தி தலைவர்கள் படங்கள், கூட்ட நிகழ்ச்சி தகவல்கள் அலங்கார விளக்குகள் கண்ணைப் பறிக்கும். ஊர்வலம், பொதுக்கூட்டம், சைக்கிள் பேரணி, தெரு முனைக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கும். பாட்டுக் கச்சேரி, நடனம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற ஆட்டம் பாட்டம் பாடி மானை ஓட விட்டும் மயிலை கிறங்க வைத்தும் பல மனமகிழ் நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சமிராது. பணத்தினை தண்ணீராக வாரி இறைக்கும் ஒரு நடவடிக்கை தான் தேர்தல் என்றால் மிகையாகாது என்றளவிற்கு தேர்தல் பணிகள் முடிக்கி விடப்படும். இத்தனை ஆட்டம், பாட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் திரு. டி.என். சேஷன் தேர்தல் கமிஷனராக இருந்தவரை தன் வாலை சுருட்டிக் கொண்டு மூலையில் முடங்கிக் கிடந்தது. ஆனால் இன்று அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு தேர்தல் ஒரு திருவிழா நிகழ்ச்சி போல நடக்கின்றது. பேரளவிற்கு கட்சி நடத்துபவர்களும், சமூக அமைப்பினரும் முக்கிய அரசியல் கட்சிகளிடம் பேரம் நடத்தி நாலு காசு பண்ணும் பொன்னான நேரம் தான் தேர்தல் நேரம். வீதிகளில் உண்டியல் குலுக்குவதிலிருந்து வியாபாரிகள் கடையினை மூடி ஓடும் அளவிற்கு பயமுறுத்தி தேர்தல் நிதி வசூல் வேட்டை ஆடுகளம் தான் தேர்தல் களம். கட்சி தேர்தல் நிதியென்று தலைவர்களிடமுள்ள கறுப்புப்பணத்தினை சூட்கேசில் நல்ல நோட்டுக்களடியே வெற்றுப் பேப்பரை வைத்து பத்திரிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டி கோடிகள் தேர்தல் நிதி வசூல் என்று வரியில்லா நிதி சேர்ப்பது தான் தேர்தல் நேரம். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். அது என்ன? வேலையில்லாத அத்தனை ஆண்கள், பெண்களுக்கு தேர்தல் ஒரு வேலை வாய்ப்பு முகாமென்றால் மிகையாகுமா?

No comments:

Followers