KILIYANUR ONLINE

Monday, 16 May 2011

நமது மூளை: சுவாரசியமான சில உண்மை!

“மனிதன் தனது மூளையால் ஓவியங்களை வரைகிறானே தவிர, கைகளால் அல்ல” என்றார் உலகப் புகழ்பெற்ற ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ
ஒருவர் சிறு தவறு செய்தாலும் அனிச்சையாக, `மூளையிருக்கா?’ என்று கேட்டு விடுகிறோம். மூளைதான் எல்லா செயல்பாட்டுகளுக்கும் காரணம் என்பது அப்படி நமது உணர்விலேயே ஊறிப் போயிருக்கிறது. பேசுவது, சாப்பிடுவது, சிந்திப்பது, தூங்குவது, மூச்சுவிடுவது, நினைவுகள், உணர்வுகள், இதயத் துடிப்பு, வளர்ச்சி, செக்ஸ்… ஏன், உயிரும் கூட மூளையைச் சார்ந்துதான் இருக்கிறது. ஒன்றரை கிலோ எடையுள்ள பழுப்பும், வெள்ளையுமான திசுக்களாலான இந்த `தளதள’ பொருள்தான் நமது மூளை. மூளையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளைப் பார்ப்போம்…
அதிர்ஷ்ட நடிகை
இங்கிலாந்து நாடக நடிகையான ரியான்னன் பிரைதெர்க் (வயது 28), ஒருநாள் தனது மூளையில் ஏதோ வெடிப்பதைப் போல உணர்ந்தார். தொடர்ந்து அவருக்குக் கடுமையான தலைவலியும், வாந்தி உணர்வும் ஏற்பட்டன. பரிசோதனையில் அவரது மூளையில் `சப்அராக்னாய்டு’ ரத்தக் குழாய் சேதம் அடைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அந்நிலை ஏற்பட்டவர், சில மணி நேரங்களில் இறந்துவிடுவார். தனது இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்த ரியான்னன், தனது நகைகளையும் உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். கடைசியில், `ரிஸ்க்’ எடுத்து ஓர் அறுவைச்சிகிச்சைக்கு உடன்பட்ட அவர், பின்னர் முழுமையாகக் குணமடைந்து இயல்பு நிலையை அடைந்தார்.
மூளைக்கு உணவு


மத்திய தரைக்கடல் பகுதி கடல் உணவுகள், மூளைக்கு நன்மையளிப்பவையாக உள்ளன என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பழங்கள், காய்கறிகள், ஆலிவ் எண்ணையை அதிகமாகச் சாப்பிடுவது, வயதால் ஏற்படும் மூளைப் பாதிப்பைக் குறைக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். மீனும், மூளைக்கு நல்லது.
மூளைச் சாவு


`எலக்ட்ரான் செப்பல்லோகிராமில்’ பார்க்கிறபோது மூளை செயல்பாடு இல்லாத நிலையே `மூளைச் சாவு’ எனப்படுகிறது. அப்போது அனைத்து தன்னிச்சையான, தன்னிச்சையற்ற செயல்பாடுகளும் நின்று போகின்றன. அதில் வலி உணர்வும் அடக்கம். மருத்துவரீதியான மரணத்தில், ரத்த ஓட்டம், சுவாசம், இதயத் துடிப்பு ஆகியவையும் நின்று விடுகின்றன. மூளைச் சாவு ஏற்படும்போதுதான் உறுப்பு தானம் செய்யப்படுகிறது.
மூளையும், அளவும்


வயது வந்த மனிதன் – 1.360 கிலோ கிராம்
யானை – 4.780 கி.கி
ஒட்டகச்சிவிங்கி – 680 கிராம்
ஆந்தை – 2.2 கிராம்
பாம்பு – 0.1 கிராம்
பல்லி – 0.08 கிராம்
புலி – 265 கிராம்
மேக்பீ பறவை – 5.8 கிராம்
திமிங்கலம் – 7,800 கிலோ கிராம்


***
பிறந்த குழந்தையின் மூளை எடை 400 கிராம்.
ஒரு மனிதனின் எடையில் மூளையின் பங்கு 2 சதவீதம்.
மூளையின் 25 சதவீதம், பார்வையுடன் தொடர்புடையது.
இதயத்தில் இருந்து 20 சதவீத ரத்தம் மூளைக்குப் பாய்கிறது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளில் 11 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் 4 பேருக்கு பணியின்போது அது நேர்ந்தது.
மூளைக்கு 10 நொடிகள் ரத்தம் பாயவில்லை என்றால் மயக்கம் வந்துவிடும்.
ஆறு வயதில் மூளை முழு எடையை எட்டுகிறது.


நன்றி;உங்களுக்காக

Mohammad Sultan
__._,_.___

No comments:

Followers