KILIYANUR ONLINE

Friday 10 June 2011

வர்மமும் இந்திய மருத்துவமும்...

வர்மத்தின் மர்மங்கள்

வர்ம மருத்துவம் எந்த காலகட்டத்திலும் எத்தகைய நிலையிலும் மாறாத தன்மை கொண்ட மருத்துவமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவம்தான் மக்களுக்கு ஏற்படும் புரியாத நோய்களை குணப்படுத்தும் மருத்துவமாகும்.

இந்திய முறை மருத்துவங்களில் சித்தா, ஆயுர்வேதா என இருபிரிவுகள் உள்ளன. இதில் ஆயுர்வேத மருத்துவம் வடமொழியான சமஸ்கிருதத்திலும், சித்த மருத்துவம் தென் மொழியான தமிழிலும் தொகுக்கப்பட்டுள்ளது. இதுபோல் அரேபிய மொழியில் தொடுக்கப்பட்ட மருத்துவம்தான் யுனானி. மேலும் ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் உள்ள ஒற்றை மூலிகை மருத்துவ முறையில் சாறு எடுத்து அதை மாற்றி மருந்தாகக் கொடுக்கும் முறைதான் ஹோமி யோபதி மருத்துவம் என ஜெர்மானியர்களால் அறிமுகப்படுத்தப் பட்டது.

மேற்கண்ட மருத்துவ முறை தான் இந்திய முறை மருத்துவங்களாக உள்ளன. இதனை ஆயுஷ் என்று சுருக்கமாக அழைக்கின்றனர்.

தற்போது இந்திய முறை மருத்துவங்களில் நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட அதாவது நரம்பியல், எலும்பியல் பற்றி குறைவாக கூறப்பட்டுள்ளது. அதுபோல் நன்கு தெளிவாக எழுதப் பட்டிருக்கும் சாஸ்திர நூலின் விளக்கங்களும் குறைவாகவே கூறப்பட்டுள்ளது.

ஆனால் பழங்காலத்தில் இந்திய முறை மருத்துவத்தில் நரம்பு களுக்கும், எலும்புகளுக்கும் தனித்தனி பிரிவாகக் கொண்ட வர்ம மருத்துவம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த வர்ம முறை மருத்துவத்தில் உடற்கூறுகளை தெள்ளத் தெளிவாக மருத்துவ முறைகளோடு எல்லா விதமான நோய்களுக்கும் மருந்து கொடுக்கப்பட்டது.

தற்போது வர்ம மருத்துவம் அரசு மற்றும் தனியார் சித்த, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் குறைவாகவே உள்ளது. இதனால் மிகச் சிறப்பு வாய்ந்த வர்ம கண்ணாடி, வர்ம பீரங்கி, லாட சூத்திரம், வர்ம அளவு நூல், வாதகாவிய திறவுகோல், வர்ம ஓடி முறிவு, போன்ற வர்ம மருத்துவ சிறப்புகள் கொண்ட நூல்கள் இதுவரை எந்த கல்லூரிகளிலும் பாடமாக கற்றுக்கொடுக்கப்படாதது துரதிஷ்ட வசமானது.

இதனால் சித்த, ஆயுர்வேத மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகள் மேற்கண்ட பாடங்களை கற்றுக் கொடுக்கப்படாத காரணங்களினால் அவர்கள் முழுமை பெற்ற மருத்துவராக திகழும் நிலையில்லாமல் போய்விட்டது. மேலும் இவர்கள் நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட வர்ம முறை மருத்துவங்களை தெரிந்து கொள்ளாத காரணத்தினால் கழுத்து வலி, முதுகு வலி, முதுகுத் தண்டுவலி, தோள்பட்டை வலி போன்ற பாதிப்புகளுக்கு பெரும்பாலும் சிகிச்சையளிப்பது குறைந்துவிட்ட காரணத்தினால், நோயாளிகள் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டானது.


முன்பு சித்தா, ஆயுர்வேத மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின்றி பல நோய்களை நீக்கி மக்களை பூரண குணமடையச் செய்தனர். காரணம் அவர்கள் படித்த காலங்களில் சித்த ஆயுர்வேதத்துடன், வர்ம மருத்துவ முறை களையும் கற்று முழுமைபெற்ற மருத்துவர்களாக திகழ்ந்தார்கள்.

அன்றைய காலகட்டங்களில் மருத்துவம் பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் அவர்களின் ஆரோக்கியத்தை முழுமையாக பெறச் செய்யும் மருத்துவமாக இருந்து வந்தது. மருத்துவர்கள் மக்களோடு ஒன்றாக இணைந்து மக்களின் மனநிலைக்கும், உடற்கூறுகளுக்கும் ஏற்றவாறு மருத்துவம் செய்து வந்தனர்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, வர்ம முறை மருத்துவம் இல்லாத சித்த, ஆயுர்வேத முறை மருத்துவங்கள் முழுமை பெறாத மருத்துவமாக பொதுமக்கள் மத்தியில் நிலவி வருவதைக் காணலாம்.

ஆனால் இன்றைய காலகட்டத்திலும் வர்ம முறை சார்ந்த மருத்துவம் படித்த மருத்துவ வல்லுநர்கள் பலர் தமிழகத்தில் ஆங்காங்கே இருந்துகொண்டு மக்களுக்கு ஏற்படும் எல்லாவிதமான நோய்களுக்கும் சிறப்பானதோர் சிகிச்சையளித்து வருகிறார்கள்.

தற்போது உள்ள இந்திய முறை மருத்துவத்தில் மனிதனுடைய அன்றாட பாதிப்புகளுக்கு ஏற்பவும், நோய்களுக்குத் தகுந்தவாறும் சிகிச்சை யளிக்கும் திறமை குறைந்து வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. இதனால் நாளடைவில் இந்திய முறை மருத்துவர்களின் முக்கிய சாராம்சம் குறைந்துபோகும் நிலையில் உள்ளது.

இந்திய முறை மருத்துவத்தில் உடற்கூறு அறுவை சிகிச்சை முறை, வர்ம மருத்துவ முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கற்றுக்கொடுக்கப் பட்டால் தான் இந்திய முறை மருத்துவம் முழுமை பெற்ற மருத்துவமாக மாறும்.

No comments:

Followers