குடும்ப உறவுகள், நேர்மறை எதிர்மறைச் சிந்தனைகள், தாழ்வு மனப்பான்மை,
மனச்சோர்வு, அச்சவுணர்வு, குற்ற உணர்வு, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல்,
பணியிட உராய்வு, இளமை முதுமைப் பருவப் பிரச்சனைகளுக்கு பதில் தருகிறார்
பிரபல மனநல ஆலோசர் திரு. நாச்சியப்பன் தமிழ்வாணன்.
எனது மூத்த மகன் கல்லூரியில் படிக்கிறான். இளையவள் பள்ளி இறுதியாண்டு… இருவரோடும் போராட வேண்டியிருக்கிறது. இப்பொழுது நான் என்ன செய்வது?
- எஸ். கவிதா, மேச்சேரி
உங்கள் போராட்டம் நியாயமானதேÐ அதற்காக அளவுக்கு மிஞ்சிய அச்ச உணர்வும், மன அழுத்தம், மன உளைச்சலும் வேண்டாமேÐ தேர்வுப்பற்றி, அவர்கள் எதிர்காலம் பற்றி கவலை வேண்டும். ஆனால் அந்தக் கவலையிலேயே மூழ்கிவிடக் கூடாது. அதற்கு அனுமதியும் தரக்கூடாது. தேர்வின் முக்கியத்துவம், அதோடு பின்னியுள்ள அவர்களுடைய எதிர்காலம், நாட்டு நடப்பு, வீட்டு நிலைமை, எதார்த்தமான கல்வி, வேலைவாய்ப்பு நிலைமைகளைப் பற்றி அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டியது உங்களது கடமை. இதை உங்களது குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதைப்படி, அதைப்படி என்று எந்நேரமும் அவர்களை ‘நச்சரிக்காமல்’, அவர்களுடைய மனநிலையைப் புரிந்து கொண்டு பக்குவமாய்ச் சொல்லுங்கள். ‘நன்றாகச் செய்தாய், கவலைப்படாதே, உன்னால் நன்றாக செய்ய முடியும்’ என்கிற’நம்பிக்கையை’ ஊட்டுங்கள். நேசமான, அன்பான, இனிமையான குரலில், முகபாவத்தில், தட்டிக்கொடுங்கள்; தோளைத் தொடுங்கள்; அப்புறம் பாருங்கள் அது நிகழ்த்திக் காட்டும் அற்புதத்தை.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு; பலம் உண்டு; பலவீனம் உண்டு. பலத்தைப் பாராட்டுங்கள்; பலவீனத்தை எப்படிப் பலமாக்குவது என்று பாதை காட்டுங்கள். எந்த நிலையிலும் தயவு செய்து மற்றவரோடு ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிர்த்துப் பாருங்கள். பலன் கைமேல் கிடைக்கும்.
உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஊக்கப்படுத்துங்கள்; அரவணைத்து முதுகில் தட்டிக்கொடுங்கள்; வாய்ப்பு இருப்பின் பரிசுப்பொருட்களை வாங்கித் தாருங்கள். “உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பரிசு, உற்சாகமும், ஊக்கமும் தான்” என்கிறார் புரூஸ்பர்டன் (உளவியல் வல்லுநர்). அறிவியல் ஆராய்ச்சியொன்றில், தட்டிக்கொடுத்த எலி, நீண்ட நாள் நலமாக வாழ்கிறது. சூடுபெற்றஎலி முரட்டுத்தனமாக மாறுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அன்பிற்காகவும், அங்கீகாரத்திற்காகவும் ஏக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டுமா, என்ன?
‘Adolescent Age’ – இளமைப்பருவம் இது ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழற்சியிலும் ஒரு முக்கியமான வளர்ச்சிக்கட்டம். மன அழுத்தம், உளைச்சல் மிகுந்தது; ஆர்வங்கள் மாறக்கூடியது; கல்வி, வேலை பற்றிய பார்வை வேறுபடும்; பால் ஈர்ப்பு ஏற்படும்; அரசியல் பற்றி பர்ôவை, நண்பர்கள் (Peer group) பற்றிய உணர்வு. தாக்கம் ஏற்படக்கூடிய பருவம். எனவே சற்று உற்று கவனியுங்கள்; பக்குவமாய் எடுத்துச் சொல்லுங்கள். Group study சேர்ந்து படித்தலில் ஆர்வம் இருந்தால், ஒத்த மனநிலை உடையவரா எனப்பார்த்து ஊக்கப்படுத்துங்கள். கண்காணிப்புத்தேவை. ஆனால் அது மிகுந்து விடக்கூடாது.
சரியான நேரத்திற்கு, சரியான உணவு கொடுப்பதன் அவசியத்தை தெரிந்து கொள்ளுங்கள். அதை அப்படியே பின்பற்றுங்கள்.
படிக்கும்பொழுது அவர்களுக்குத் தேவையானவை அவ்வப்போது சிறிய உடற்பயிற்சிகள், ஓய்வு, மன அமைதி, கேளிக்கை என்பதை உணருங்கள். எந்த நேரத்திலும் படிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? அது எதிர்விளைவையே ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
வாழ்க்கையே ஒரு போராட்டம் தானேÐ உங்கள் போராட்டம் உங்கள் குழந்தைகளின் நல்லதோர் எதிர்காலத்திற்காகவே. எனவே தேவையற்றஅச்சத்திற்கும், மனஉளைச்சலுக்கும் இடம் கொடுக்கவும் வேண்டுமா என்ன? நடப்பவை யாவும் நல்லபடியாகவே நடக்கும்.
No comments:
Post a Comment