KILIYANUR ONLINE

Monday 20 June 2011

முடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்

நம்மால் முடியாத காரியம் இந்த உலகத்தில் ஏதாவது உண்டா? எதுவும் இல்லை. விண்ணிலும், மண்ணிலும் ஆய்வுகள் செய்து எண்ணற்ற உண்மைகளைக் கண்டறிந்த நாம், எதைத்தான் செய்ய முடியாது? தன்னம்பிக்கை மிகுந்த ஒருவன் எந்தச் செயலைச் செய்ய நினைத்தாலும் அதில் குறிக்கோளாக இருந்து இடைவிடாத முயற்சிகள் செய்து அந்தக் குறிக்கோளில் கருமமே கண்ணாக இருந்து இறுதியில் அந்தச் செயலில் வெற்றியைப் பெறுவான். முடியாது என்கிற சொல் அவனுக்குப் பிடிக்காத சொல்லாகும். “என்னால் முடியும். என்னால் முடியும்Д என்றே வீர முழக்கமிடுவான். அவனிடம் அளவு கடந்த தன்னம்பிக்கை இருப்பதால்தான், முழு முயற்சியெடுத்து அவனால் பல அற்புதமான காரியங்களைச் செய்ய முடிகிறது.
“தன்னம்பிக்கையுடன் என் இலட்சியத்தை அடைவேன்Д என்று மன உறுதி கொண்டு, தன்னை அவன் முழுமையாக நம்பினான். அந்த நம்பிக்கையில் அவன் செயல்பட்டதால் தான் அவனுக்கு அந்த வெற்றி கிடைத்தது.
நீங்கள் எப்போதும் குறிக்கோளில் குறியாக இருக்க, நீங்கள் ஏறும் முதல் படிக்கட்டு உங்களின் தனித்தன்மை தான்Ð ஒரு காரியத்தை நீங்கள் மிகுந்த தைரியத்துடன் தொடங்க வேண்டும். இடையில் உங்களுக்குச் சோர்வு ஏற்பட்டால் அதற்காகக் கொஞ்சமும் கலங்காமல் மனோதிடத்துடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால் மாமலையும் உங்களுடைய பார்வையில் சிறிய கடுகாகத்தான் தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால் அலைகளை எழுப்பி ஆர்ப்பரிக்கும் கடல்கூட உங்களுக்கு இரண்டு (வயல்) வரப்புகளுக்கு இடையே ஓடும் மிகச் சிறிய வாய்க்கால் போலத்தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால் சுட்டெரிக்கும் சூரியன் கூட சிவப்பு நிறக் கால்பந்து போலத் தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால், உலகினர் அனைவரையும் இரவு நேரத்தில் கிறங்கடித்து மயங்க வைக்கும் வெண்ணிலா கூட உங்களுக்குச் சிறிய வெள்ளிப்பந்தாகத் தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால், வானத்தில் தோன்றும் நட்சத்திரக் கூட்டங்கள் ஓடையிலே காணப்படுகின்ற வெண்ணிறக் கூழாங்கற்களைப் போலத் தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால், இந்த உலகமே உங்கள் காலடியில் பணிந்து நிற்கும். நீங்கள் நினைக்கின்ற எதையும் சாதித்துக் காட்டலாம். நீங்கள் முழுமையாக உங்களை நம்புகின்றபோது குறிக்கோளில் கவனமும், நீங்கள் செய்கின்ற முயற்சிகளில் கடுமையான தீவிரமும் இருக்கும்.
ஒரு செயலில் நீங்கள் இறங்கிவிட்டால் “முடியாது” என்ற வார்த்தையே உங்களுடைய வாழ்க்கை அகராதியில் இருக்கக் கூடாது.
சர்.சி.வி. இராமன், தன்னம்பிக்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டு மிகவும் கடுமையாக உழைத்தார். ‘ஒளி விலகல்’ என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்தார். அதற்காக நோபல் பரிசு பெற்றார். “என்னால் ‘ஒளி விலகல்’ என்ற தத்துவத்தைக் கண்டுபிடிக்க முடியும்” என்ற மன உறுதியோடு இருந்தார். உலகினர் அனைவரையும் வியப்படைய வைத்த இந்த மன உறுதி அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.
“வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவுவதே என் லட்சியம்Д என்று கூறி “அன்பின் தூதுவர்கள்” என்ற அமைப்பை அன்னை தெரஸா தொடங்கினார். இந்தியாவிற்கு வந்து ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று மிகவும் விரும்பினார். அப்போது அவர் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை. அன்னை தெரஸாவின் நண்பர்களும், உறவினர்களும் “எவராலும் செய்ய முடியாத காரியத்தை நீ ஏன் செய்கிறாய்?” என்று கேட்டார்கள். “முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்Д என்று கூறினார், அன்னை தெரஸா. தான் கொண்ட கொள்கையில் தீவிரம் காட்டினார். கையில் பணமே இல்லாமலிருந்த அவருக்குப் பல பேருடைய ஆதரவும், பணமும் கிடைத்தது. இந்தியாவிற்கு வந்து ஏழைகளுக்குச் சேவை புரிந்தார். முடியாது என்ற சொல்லை தன்னுடைய வாழ்க்கை அகராதியிலிருந்தே நீக்கிவிட்டார்.
குத்துச்சண்டை போட்டியில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்ற முகம்மது அலியின் மகள் லைலா, தானும் தன் தந்தையைப் போல குத்துச் சண்டை வீராங்கனை ஆக வேண்டும் என்று நினைத்தார். உறவினர்களும், நண்பர்களும் சிரித்தார்கள். கேலி பேசினார்கள். கிண்டல் செய்தார்கள். “உன்னால் குத்துச் சண்டை வீராங்கனை ஆக முடியாது. ஆண்களுக்கே உரித்தான குத்துச் சண்டைப் போட்டியில் பெண்கள் பங்கேற்பதா? இது நடக்க இயலாத காரியம்” என்றார்கள். ஆனால் லைலாவிற்குக் குத்துச் சண்டையின் மேல் உள்ள மோகம் அவரை ஊக்கத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. “லைலா உன்னுடைய கனவை நீ பின் தொடர்ந்து செல் சும்மா இருக்காதே” என்று சொன்னார் முகம்மது அலி. தந்தையின் அறிவுரைப்படி சென்ற லைலா, பெண்களில் உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் குத்துச்சண்டை வீராங்கனையாகத் திகழ்ந்தார். இப்பட்டத்தைப் பெற்ற முதல் பெண்மணி அவரே,
முடியாது என்ற சொல்லுக்கு லைலா முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்
“நான் நினைத்த லட்சியத்தை அடைந்தே தீருவேன்Д என்ற நம்பிக்கையுடன் நீங்கள் முழு முயற்சி எடுத்து உழைத்தால் முடியாது என்ற சொல் அகராதியிலிருந்து எடுக்கப்பட்டுவிடும். எப்பொழுதும் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உலகத்தில் நீங்கள் பலபேரை நம்பாமலிருக்கலாம். ஆனால் உங்களை நம்பாமல் இருக்கலாமா? உங்களை முழுக்க முழுக்க நம்புங்கள்Ð தன்னையே நம்பாதவன் இந்த உலகில் எதையும் சாதிப்பதற்கு லாயக்கற்றவன் ஆவான்.
எனவே முதலில் உங்களை நம்புங்கள். உங்களுடைய லட்சியத்தில் குறியாக இருங்கள். நீங்கள் ஒரு காரியத்தைத் தொடங்கும்போது தொய்வு ஏற்பட்டாலோ, தடங்கலோ, சோர்வோ ஏற்பட்டாலோ நீங்கள் மன உறுதியுடன் செயல்பட வேண்டும்.
நம்முடைய வாழ்வு நலமாக அமைய தன்னம்பிக்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டு, கடுமையாக உழைக்க வேண்டும். நேர்மையான முறையில் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும், கண்ணியமான நெறியையும் மனதில் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் அமைதியுடன் வாழ முடியும். கோடிக்கணக்கில் ஊழல் செய்பவர்கள் மனநிறைவுடன் என்றைக்கும் வாழவே முடியாது. எனவே நேர்மையுடன் கூடிய உழைப்பு நம்மை உயர்ந்த மனிதனாக்குவது மட்டுமின்றி, மனநிறைவையும் வாழ்நாள் முழுவதும் தந்து கொண்டே இருக்கும்.
நாம் தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும். இயன்றவரைக் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு காரியம் வெற்றி பெற முழு முயற்சி செய்ய வேண்டும். எந்தச் செயலிலும் ஆர்வத்தோடு செயலாற்ற வேண்டும். உயர்ந்த லட்சியத்தைப் பின்பற்றி மன உறுதியோடு வாழ வேண்டும். “என்னால் முடியாது” என்று எப்பொழுதும் சொல்லவே கூடாது. எனவே முடியாது என்ற சொல்லை, அகராதியிலிருந்தே நீக்கி விடுவோம்Ð
நாம் தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும். இயன்றவரைக் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு காரியம் வெற்றி பெற முழு முயற்சி செய்ய வேண்டும். எந்தச் செயலிலும் ஆர்வத்தோடு செயலாற்ற வேண்டும். உயர்ந்த லட்சியத்தைப் பின்பற்றி மன உறுதியோடு வாழ வேண்டும். “என்னால் முடியாது” என்று எப்பொழுதும் சொல்லவே கூடாது. எனவே முடியாது என்ற சொல்லை, அகராதியிலிருந்தே நீக்கி விடுவோம்.
thanks - thannambikkai

No comments:

Followers