KILIYANUR ONLINE

Wednesday, 20 July 2011

நீங்கள் தினம் சாப்பிடவேண்டிய அளவை கணக்கிடும் சூப்பர் வெப்சைட்

நமக்கு தேவையான அளவு கலோரிகளில் கணக்கிட்டு சாப்பிடுவது எப்படி என்றும்,எந்தெந்த பொருளில் எவ்வளவு கலோரிகள் இருக்கிறதென்றும் ஒரு பதிவை தந்திருக்கிறேன்.ஆனால்,நமது உடல் எடை,உயரம்,தினசரி உடற்பயிற்சி செய்யும் அளவு போன்றவை கணக்கிட்டு ஒவ்வொருவரும் தயார் செய்வது ஒரு சவால்.


நேற்றைய எனது பதிவை படித்து விட்டு கோவையிலிருந்து வேளாண்மை இளம் அறிவியல் படிக்கும் மாணவர் லஷ்மிகாந்தன் இ-மெயில் மூலம் ஒரு லின்க்கை கொடுத்திருக்கிறார்.அவருக்கு நன்றி.அந்த வெப்சைட் உண்மையில் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது.

உணவு பிரமீடை ஒவ்வொரு நாட்டு வேளாந்துறையும் அவர்கள் பிரதேசத்திற்கேற்றவாறு வெளியிடுகின்றன என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.இந்தியாவிலும் இருக்கிறது.நான் முன்பு கூகுள் சர்ச்சில் எனக்கு கிடைக்கவில்லை.இந்திய அரசின் வேளாண் துறை வலைத்தளத்தில்தான் இந்த வசதியை வைத்திருக்கிறார்கள் .அநியாயம் ரொம்ப பேர் பார்க்கவில்லை.


Food pyaramid in india என்ற வலைத்தளத்தின் முகப்பிலேயே கலோரி கால்குலேட்டர் அண்ட் கைடு இருக்கிறது.இதில் உங்கள் வயது ,பாலினம்,உயரம்,எடை ,நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்யும் அளவு போன்ற விவரங்களை கொடுத்தால் ஒருநாளைக்கு உங்களுக்கு எவ்வளவு கலோரி தேவை என்பதையும்,மேலும் என்னென்ன பொருள்களில் இருந்து இவற்றை பெறலாம் என்பதையும் கணக்கிட்டு சொல்கிறது.

குறிப்பிடும் உணவில் மொத்த கலோரியில் கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு ஆகியன எவ்வளவு இருக்கிறது என்பதையும் தெரிவிக்கிறது.ஆனால் இது கர்ப்பிணிப்பெண்,தாய்ப்பாலூட்டும் பெண்கள் ,குழந்தைகள் ஆகியோருக்கு பொருந்தாது.

நோயாளிகளுக்கும் இது பொருந்தாது.நாட்பட்ட நோயுள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே உணவு எடுத்துக்கொள்ளவேண்டும்.தொடர் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் வலைத்தளமான இது நம்ம ஊர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்திருக்கிறார்.

உணவு ,உடல் நலம்,உடற்பயிற்சி உள்ளிட்ட மேலும் சில தகவல்களை கொண்டிருக்கிறது.கீழே க்ளிக் செய்து செல்லுங்கள்.

www.foodpyramidindia.org

No comments:

Followers