KILIYANUR ONLINE

Tuesday 6 September 2011

நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? பீஜே அன்றும்-இன்றும்!

நவூதுபில்லாஹ்



தங்களின் தலைவரை ரஸூல்(ஸல்)அவர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு தன் தலைவருக்கு வக்காலத்து வங்கும் இயக்கப்பற்று கொண்ட தொண்டர்கள். இருக்கும் வரை பீ.ஜே. சொல்லுக்கு யாரும் எந்த கருத்தும் சொல்ல முடியாது. என்ற நிலைமை உருவாகி விட்டது.



காரணம் நபிக்கு இணையாக மார்க்கத்தை விளக்க பீ.ஜே வைத்தவிர உலகில் எந்த மனிதனும் பிறக்கவில்லை என்றும் – நபியும் தவறு செய்துள்ளார்கள் சஹாபாக்களும் தவறு செய்துள்ளார்கள் ஆனால் தன் தலைவன் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் என்றும் அவரது இயக்க ஆர்வளர்கள் நம்புகிறார்கள்.



யார் தவறு செய்தாலும் - எந்த உண்மையையும் மறைக்க மாட்டார். எந்த பொய்யும் அவர் பேசியது கிடையாது. யார் மீதும் அவதூறு சொல்ல மாட்டார். அவர் எந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றாலும் சரி, அல்லது அவரது இயக்கத்திலிருந்து யார் பிரிந்து சென்றாலும் சரி >> உண்மை விளக்கத்தை சீ.டி யாக வெளியிட்டு – தன்னைப்போல் ஒரு உண்மையாளன் நேர்மையாளன் உலகில் இல்லை என்று நிரூபித்து விடுவார். அதை அப்படியே நம்பும் அவரது சஹாக்கள்தான். அவரது தொண்டர்கள்.



அண்ணன் சொன்னால் அதற்கு அப்பீலே இல்லை என்று எற்றுக்கொள்வதுதான் டீ.என்,டீ.ஜே (பீ.ஜே) வின் (பைலாவில் இல்லாத) பைஅத் ஆகும். மீறினால் அவர்களைபற்றிய உண்மைகளை வெளியிட்டு சீ.டி வெளிவந்து விடும் மானம் பறிக்கப்படும் அவதூறுகள் சுமத்தப்படும்.



அண்ணன் சொன்னால் அதற்கு அப்பீலே இல்லை எற்றுக்கொண்டு செயல்பட்டால். அடுத்தவன் பொண்டாட்டியுடன் விபச்சாரம் செய்து மாட்டிக்கொண்டால் கூட அண்ணனே முன்னிருந்து தீர்ப்பு வழங்கி – பழைய புருசனை தலாக் விட்டு விபச்சாரம் செய்த டீ.என்,டீ.ஜேவினருக்கு திருமணம் முடித்து வைப்பார். இத்தகையவர் டீ.என்,டீ.ஜே (பீ.ஜே) வின் இயக்க பிரச்சாரராகவும் இயக்கத்தின் முக்கிய பதவியிலும் இருக்காலாம்.



மீறினால் (முன்னால் டீ.என்,டீ.ஜே) தலைவர் பதவி வகித்தவரானாலும் சரி செயளாலர் பதவி வகித்தவரானாலும் மாநில+இயக்க பிரச்சாரராக இருந்தாலும் சரி அவர்கள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அவர்களைபற்றிய உண்மைகளை வெளியிட்டு சீ.டி வெளிவந்து விடும் மானம் பறிக்கப்படும் அவதூறுகள் சுமத்தப்படும்.



பல விஷயங்களில் தன்னுடைய நிலைபாட்டை மாற்றிக்கொள்ளும் பீ.ஜே வின் மாறுபட்ட கருத்தைகளை மன்றத்தில் வைக்கும் போது – அல்லாஹ் குரானிலே மாற்றிக்கூறவில்லையா ? ரஸூல் (ஸல்) அவர்கள் மற்றிக்கூறவில்லையா என்றும் சஹாபாக்கள் கருத்தை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிடும். டீ.என்,டீ.ஜே (பீ.ஜே) வின் இயக்க தொண்டர்களே! ஆர்வளர்களே!! – அல்லாஹ்வையும் மறுமையையும் பயந்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நீங்கள் வரம்பு மீறியதற்கு அல்லாஹ்விடத்தில் நீங்கள்தான் மட்டும் தனியாக பதில் சொல்ல வேண்டியிருக்கும். உங்களை அல்லாஹ் விசாரிக்கும் போது உங்கள் ஆசிரியரோ பெற்றோரோ உங்களின் தலைவரோ வந்து உங்களை காப்பாற்றமுடியாது. அவரவர் தப்பிக்கும் வழியைதான் பார்ப்பார்கள்.



உன்னுடைய அறிவைக்கொண்டு நீ எதை தெறிவு செய்தாய், எதை பின்பற்றினாய், யாரை பின்பற்றினாய், எப்படி முடிவு செய்தாய், எப்படி செயல்பட்டாய். என்ற விசாரணைக்கு பதில் சொல்லும் பொருட்டு மார்க்கத்தை பின்பற்ற வேண்டும்.



நான் என் தலைவர்களை பின் பற்றினேன் அதனால்.... என்று காரணம் கூறி தப்பவும் முடியாது.

அப்படியே யார் யாரை பின் பற்றினீர்களோ அனைவரும் சாட்சிக்கு விசாரணைக்கு வந்தாலும்., ஆமாம் உண்மைதான் அழைத்தேன் சொன்னேன் –>அவனுக்கு அறிவை-புத்தியை கொடுத்து இருந்தாய் அல்லவா என்று கூறுவார்கள். ஷைத்தான் முதல் நல்லவர் கெட்டவர் அனைவரும் இதை கூறுவார்கள். எனவே பெற்றோர் ஆசிரியர் தலைவர் என்று யார் சொல்லை ஏற்று நடந்தாலும் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லும் பொருப்பு தன்னுடையது,



தன் அறிவைக்கொண்டு தான் நம்பியது, தெறிவு செய்தது, பின்பற்றியது, செயல்பட்டது, அடிப்படையிலேயே – அல்லாஹ்வுடைய தீர்ப்பு இருக்கும் என்பதை குர்ஆனும் நபிமொழியும் தெளிவாக உணர்த்துவதால்.



தலைவருக்காக வக்காலத்து வாங்குகிறோம் என்று கருதி – மார்க்கத்தில் எல்லை கடந்து விடாதீர்கள்.



சிந்திப்போம் செயல்படுவோம்.



இஸ்லாமிய மார்க்க சகோதரன்.

S.N. அப்துல் அலீம்

Followers