KILIYANUR ONLINE

Thursday 8 September 2011

மூலிகைகளும் மருத்துவமும்

ஸ்டீவியோ சைட் நீரிழிவு நோயாளிகளும் இனிப்பாக சாப்பிடலாம்! தமிழில் சீனி துளசி என்றழைக்கப்படும் "ஸ்டீவியா ரியோடியானா' ஒரு மருத்துவ செடி. இச்செடி சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தது. இச்செடியில் இருந்து எடுக்கப்படும் "ஸ்டீவியோ சைட்' மற்றும் "ரிபோடிசைட்' சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுகிறது. ஸ்டீவியா கரும்பு சர்க்கரையை விட 30 மடங்கு அதிகமாக இனிப்புத்தன்மையை கொண்டிருந்தாலும் மிக குறைந்த சர்க்கரை மற்றும் மாவு சத்து கொண்ட இந்த பொருட்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்தாக பயன்படுகிறது. லத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயில் ஸ்டீவியா இச்செடி அதிகமாக உள்ளது. அங்கு இவ்விலைகளை பொடிசெய்து சீனிக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். இப்போது உலக நாடுகள் பலவற்றிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மருத்துவ பலன்கள்: நீரிழிவு நோய்க்கு பயன்படும் இயற்கை சர்க்கரை. மிக குறைந்த கொழுப்பு சத்து கொண்ட சர்க்கரை உணவு. உணவு பொருட்களில் சேர்க்கப்படும் இயற்கை சர்க்கரை சுவை. ரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை சீராக்கும். அழகு சாதன பொருட்களில் ஸ்டீவியா பயன் படுகிறது. சரும நோய்களை தீர்க்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. இருதய நோய் தொடர்புடைய மருந்துகளில் ஸ்டீவியா உள்ளது. குளிர்பானங்களில் பயன்படுகிறது. இத்தகைய சீனித்துளசியை தற்போது இந்தியாவில் பயிரிட மத்திய வேளாந்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக விவசாயிகள் சீனித்துளசியை விவசாய நிலங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் குறைந்த செலவில் வளர்க்கலாம். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண்ணில் நன்றாக வளரும் தன்மை கொண்டது. உவர்ப்பு தன்மை தாங்கி வளரும் தன்மை இல்லாததால், தண்ணீர் தேங்கியுள்ள விவசாய நிலங்களில், போதிய வடிகால் வசதி இல்லாத நிலங்களில் இச்செடியை சாகுபடி செய்ய முடியாது. சீனித்துளசியை அதிகமாக நோய் மற்றும் பூச்சிகள் தாக்குவது கிடையாது. சீனித்துளசியை நாட்டி செய்த 4,5 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். அடுத்தடுத்த அறுவடைகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை என்று 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்து லாபம் பெறலாம். அறுவடையின்போது அடிபாகத்திலிருந்து 10 செ.மீ. உயரம் வரை விட்டுவிட்டு மேல்பகுதியை வெட்டி எடுக்க வேண்டும். இதன் பிறகு வரும் இலைகள் 3 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். ஏக்கருக்கு ஒரு அறுவடையில் 1 முதல் 1.2 டன்கள் வரை உலர் இலைகளை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு 4.48 டன் வரை உலர் இலைகள் கிடைக்கும். விற்பனை வாய்ப்புகள்: சீனித்துளசி முதல் ஆண்டில் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், அடுத்த ஆண்டுகளில் குறைந்த செலவில் ரூ.2 லட்சம் வரையும் வருமானத்தை பெற்றுத்தரும். சீனித்துளசி இலைகளை உலர வைத்து பொடி செய்து இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், பழச்சாறுகள், ஊறுகாய்கள், ஜாம் ஆகிய பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு நுகர்வு சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. துளசி - Ocimum sanctum துளசி துளசி என்றால் தெரியாதவர் யார்? அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். என்ன செய்வது ? அருகில் எளிதில் கிடைப்பதால் அருமை தெரிவதில்லை துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, தொடர்பான பிரச்சினைகள் வரவே வராது.! துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்கவே அச்சப்படும் ! ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் நாற்றமா நாற்றமா உங்களிடமா ? போயே போச்சு ! சோப்பு கூட துளசியில் செய்கிறார்கள். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசியை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். இன்னும் சமீபத்திய அச்சுறுத்தலான பன்றிக் காய்ச்சலை துளசி பன்றிக் காய்ச்சலை துளசி குணப்படுத்தும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவதாக செய்திகள் கூறிகின்றன . மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டாம். இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டாக்டர் யு.கே. திவாரி கூறுகையில், துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு. எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. ஜாப்பனீஸ் என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு. நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு. பன்றிக் காய்ச்சல் வந்தவர்களுக்கு துளசியை உரிய முறையில் கொடுத்தால் அது விரைவில் குணப்படுத்தி விடும். உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையையும் அது பலப்படுத்தும் என்கிறார் திவாரி. டாக்டர் பூபேஷ் படேல் என்ற டாக்டர் கூறுகையில், துளசியால் பன்றிக் காய்ச்சலை வராமல் தவிர்க்க முடியும். 20 அல்லது 25 புத்தம் புதிய துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி அல்லது மை போல அரைத்தோ, வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பன்றிக் காய்ச்சல் குணமாகும். இப்படிச் செய்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பன்றிக் காய்ச்சல் நம்மை அண்டாது என்கிறார். நோயின் தன்மை மற்றும் தீவிரத்திற்கேற்ப துளசியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் படேல். துளசியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது என்பதும் முக்கியமான ஒன்று என்கிறார் படேல்.! சிறந்த மருத்துவ குணங் கள் கொண்டதுளசி செடி, தற்போது தாஜ் மகாலை சுற்றுப்புற மாசுகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. உ.பி.,யின் வனத்துறை மற்றும் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆர்கானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக, காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மகாலைச் சுற்றி 10 லட்சம் துளசி கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்கானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் பொது மேலாளர் கிருஷ் ணன் குப்தா கூறியதாவது: தற்போது வரை 20 ஆயிரம் துளசி கன்றுகள் நடப் பட்டுள்ளன. தாஜ் மகாலுக்கு அருகில் உள்ள இயற்கை பூங்கா மற்றும் ஆக்ரா முழுவதும் துளசி கன்றுகள் நடப்பட உள்ளன.சுற்றுப்புறத்தை தூய் மைப்படுத்துவதற்கான சிறந்த செடிகளுள் ஒன்று துளசி. அதிகளவில் ஆக்சிஜனை வெளியிடும் தன்மை துளசிக்கு உள்ளது. தொழிற்சாலை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசுகள் இதனால் குறையும்.இவ்வாறு கிருஷ்ணன் குப்தா கூறினார். தொல்லியல் துறை கண்காணிப்பாளர் தேவிகா நந்தன் திம்ரி கூறுகையில், "துளசி அதிகளவிலான ஆக்சிஜன் வெளியிடும், இது, காற்றில் காணப்படும் மாசுகளைக் குறைக்க நிச்சயம் உதவும். காற்றை சுத்தப்படுத்துவதன் மூலம், தொழிற்சாலை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளால் தாஜ் மகாலுக்கு ஏற்படும் பாதிப்பு குறையும்' என்றார்.

No comments:

Followers