KILIYANUR ONLINE

Monday, 26 September 2011

பாரிசவாதமும் பரிகாரமும்பாரிசவாதம் - Stroke (Cerebro Vascular Accident)

மூளை உடலின் தலையாய உறுப்பாகும். உடலின் அனைத்துக் தொழி்பாடுகளையும் ஆரம்பித்து சீராக இயக்குவது நமது மூளையே. இம் மூளையில் உருவாகும் முதன்மையான பாதிப்பு அல்லது நோய் பக்கவாதம் என்றழைக்கப்படும் பாரிசவாதம்.பாரிசவாதம் என்றால் என்ன?
உடலின் குறிப்பிட்ட பாகங்கள் செயலிழந்து போதலே பாரிசவாதமாகும். உதாரணமாக உடலின் ஒருபக்கக் கைகால்கள் செயலிழத்தல் அல்லது கால்கள் செயலிழத்தல் அல்லது எல்லாக் கைகால்களும் செயலிழத்தல். சிலரின் முகத்தில் ஒரு பகுதியும் பாதிக்கப்படலாம். அவ்வாறனவர்களால் பேசுவதற்கும் விழுங்குவதற்கும் கூட முடியாமல் போகலாம்.பாரிசவாதம் எவ்வாறு ஏற்படுகிறது?
மூளை சரியாகத் தொழிற்படுவதற்கு அதற்குப் பிராணவாயுவும் (Oxygen) ஊட்டச்சத்துக்களும் (Nutreents) தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும். இவை குருதியின் மூலமே வழங்கப்படுகின்றன.மூளைக்குத் தேவையான குருதியைக் கொண்டு செல்லும் குருதிக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் மூலமும் அல்லது அவை வெடிப்பதனாலும் மூ்ளைக்குத் தேவையான குருதி கிடைக்காமல் போகின்றது. ஆகவே குருதி கிடைக்காத மூளையின் பாகங்கள் பழுதடைகின்றன.இவ்வாறு பாதிக்கப்பட்ட இக் குறித்த மூ்ளையின் பாகத்தால் இயக்கப்படும் உடலின் பகுதிகள் தமது செயற்பாட்டை இழந்து போகின்றது. இதுவே பாரிசவாதமாகும். மூ்ளையின் எப்பாகம் பாதிக்கப்படுகின்றதோ. அத்தோடு எவ்வளவு மூளைப்பாகம் பாதிக்கப்படுகின்றதோ அதற்கேற்ப உடலில் பாதிப்பு ஏற்படும். குருதிக் குழாய்கள் எவ்வாறு அடைபடுகின்றன? குருதியில் கட்டிகள் உண்டாதல் (Thrombosis), இக்கட்டிகள் குருதிக் குழாய்களை அடைப்பதால் மூளையில் பக்கவாதமும், இதயத்தில் மாரடைப்பும் (Heart attack-Ischaemic Disease) உண்டாகின்றது.இக்கட்டிகள் உண்டாக என்ன காரணம்?▪ புகையிலைப் பாவனை:
சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் புகைத்தல் (Smoking)
புகையிலை சப்புதல் (வெற்றிலையுடன்)
மூக்குப்பொடி பாவனை▪ கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உள்கொள்ளல் (High Cholesterol)▪ நீரிழிவு நோய் - Diabetes Mellitus - குருதியில் குளுக்கோஸின் அளவு கட்டுப்பாடின்றி அதிகரித்தல்▪ உயர் குருதியமுக்கம் - High blood pressure (Hipertension)▪ இதய நோய்கள்▪ மதுபாவனை - Alcohol abuse▪ உடற்பயிற்சியின்மை - Lack of Exercise (Sedenteric life style)▪ மன உளைச்சல் (Stress)▪ குடும்பத்தில் அல்லது பரம்பரையில் இதே பாதிப்பு உள்ளமை▪ அதிக உடற்பருமன் (Obesity)
குருதிக்குழாய்கள் ஏன் வெடிக்கின்றன?▪ உயர் குருதியமுக்கத்தைத் தாங்கமுடியமல்▪ தலையில் உண்டாகும் தாக்கம் - விபத்து மூலமாகவோ அல்லது விழுந்து தலை அடிபடுவதன் மூலம்▪ குருதிக் குழாய்களில் அதாவது நாடிகளில் உருவாகும் வீக்கம் வெடிப்பதால் (Aneurysm)இதனைக் குணப்படுத்த முடியாதா?இந்நோய் குணப்படுத்த முடியாத ஒன்றாகினும் சரியான பராமரிப்பி்ன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை சீராக வைத்திருக்கலாம். இந்நோயாளர்களில் 20% ஒருமாதத்திலும், 10% ஒருவருடத்துக்குள்ளாகவும் இறக்க வாய்ப்புண்டு. முகம், கண், வாய் பாதிக்கப்பட்டவர்களும், உடலின் அரைப்பாகத்துக்கு மேல் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்களும் குறுகிய காலத்தினுள்ளேயே இறக்கும் வாய்ப்புண்டு. ஆகவே இந்நோய் வந்தபின் வருந்துவதை விட வருமுன் காப்பதே சாலச் சிறந்ததாகும்.இந்நோயாளரைப் பராமரிப்பது எவ்வாறு?▪ முகம் பாதிக்கப்படாதிருப்பின் சாதாரணமாக உணவு உட்கொள்ளலாம். முகம்பாதிப்பு இருப்பின் மூக்கினூடாக செலுத்தப்படும் குழாய்மூலம் (naso Gastric tube) மருத்துவ ஆலோசனைப்படி சத்துள்ள நிறையுணவைத் திரவமாகக் கொடுக்கலாம்.▪ உடற்பயிற்சி (Physiotherapy)
தகுதிபெற்ற Physiotherapist மூலம் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் மேலதிக பாதிப்புகள் வராது தடுப்பதோடு காலப்போக்கில் சிறிதளவு முன்நேற்றத்தையும் எதிர்பாக்கலாம்.▪ மருத்துவ அறிவுரையின்படி, Blood Pressure மற்றும் Diabetes ஐ கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.▪ படுக்கைப்புண்கள் ((Bed Sores) வராது பாதுகாத்தல் - இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை திருப்பிப்புரண்டு படுக்கவைத்தல். தற்போது விசேடவகை மெத்தைகள் கடைகளில் கிடைக்கின்றன. வசதிக்கேற்ப, காற்றடைக்கக்கூடிய மெத்தைகளையோ அல்லது நீரடைக்கப்பட்ட மெத்தைகளையோ வாங்கிப் பாவிக்கலாம். இவற்றின் மூலம் ஒரே விதமாகப் படுப்பதால் உருவாகும் படுக்கைப்புண்கள் வராது தடுக்கலாம். ஒருவேளை படுக்கைப் புண்கள் ஏற்படின் தகுந்த மருத்துவரிடம் காட்டி புண்ணைச் சுத்தப்படுத்தி (Wound toilet) சரியான மருந்துகளைப் பாவித்தல்.▪ மாதமொரு தடவையேனும் மருத்துவசோதனை செய்தல்இந்நோய் ஏற்படாது தடுப்பது எவ்வாறு?

▪ புகையிலைப் பாவனையை உடன் நிறுத்துதல். புகையிலையை எவ்வடிவில் பாவித்தாலும் அது எமது உடலாரோக்கியத்தை நிச்சயம் பாதிக்கும் (சிகரெட், பீடி, சுறுட்டு, பைப், புகையிலை சப்புதல் மற்றும் மூக்குப்பொடி பாவனை).புகையிலையிலுள்ள Nicotin குருதியமுக்கத்தைக் கூட்டும்
மூளைக்கு கிடைக்கும் பிராணவாயுவைக் குறைக்கும்
குருதிக்குழாய்களில் கொழுப்புப் படிவதை கூட்டும்புகைப்பதால் பாரிசவாதம் மட்டுமன்றி மாரடைப்பு, நுரையீரல் தொண்டை மற்றும் வாய்ப்புற்றுநோய்கள், தொய்வு (Asthma), போன்ற நோய்களும் உண்டாகலாம்.மேலும் புகைப்பவர் தன்னை மட்டுமன்றி தன்னைச் சுற்றியிருப்போரையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றார் (Passive Smoking) ஆதலால் புகைத்தலை உடன் நிறுத்துவதன் மூலம் தன்னை மட்டுமன்றி தன் சுற்றத்தவரின் ஆரோக்கியத்தையும் பேணலாம்.மேலும், பலர் மூக்குப்பொடியை, அவை புகையிலைத்தூள் என்று அறியாமல் பீரங்கிக்கு மருந்து அடைவது போல் தமது மூக்கினுள் அடைத்துக் கொள்கின்றனர். பாவம்! அவர்களுக்குத் தெரியவில்லை புகைத்தலால் உண்டாகும் அதே பாதிப்பு

...

No comments:

Followers