நாட்டின் பொருளதாரம் எப்படிப் போனால் எனக்கென்ன? எனக்கு நிரந்தரமான ஒரு வருமானம் இருக்கிறது என்று யோசிப்பவரா நீங்கள்? உங்கள் பையில் 100 ரூபாய் இருந்து,நாளை ரூபாயின் மதிப்பு 1 குறைந்தால் உங்கள் பையில் இருப்பது 99 ரூபாயாகத்தான் இருக்கும்.அரசு நேரில் வந்து அவரவர் பையில் இருந்து 100 ரூபாய் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; பணவீக்கத்தைக் காரணம் காட்டி பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விட்டால் போதும்;ஏறும் விலையேற்றத்தை ஈடுசெய்ய உங்கள் பைகளை நீங்களே காலி செய்யத்தான் வேண்டும்.
இது குறித்து பொருளியல் வல்லுநர் சுபிக் பரூலா குறிப்பிடுகையில் “கடந்த 2010-11 ஆம் நிதியாண்டில் பணவீக்கம் மிகவும் அதிகரித்து இருந்தது.இதனையடுத்து பொதுமக்கள் அவர்களின் வருமனத்தில் பெரும்பகுதியை உணவுப் பொருட்கள் வாங்குவதற்காகச் செலவிட்டுள்ளனர்”என்கிறார்.
ஆசிய கண்டத்தில் கடன் சுமையுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி 39.3 லட்சம் கோடி கடன் உள்ளது.இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68 சதவீதம் ஆகும்.உலக வங்கியிடம் அதிக அளவு கடன் வாங்கியதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
“அரசின் நிதிக் கையிருப்பு குறைந்துள்ளதாலும் சிறு சேமிப்புத் திட்டங்களில் இருந்து அதிகப் பணம் திரும்பப் பெறப்பட்டதாலும் கூடுதலாகக் கடன் பெற வேண்டியுள்ளது” என மத்தியப் பொருளாதார விவகார்ங்கள் துறைச் செயலர் ஆர்.கோபாலன் குறிப்பிட்டுள்ளார்.ஆசியாவிலேயே இந்திய ரூபாயின் வெளி மதிப்பில் தான் டாலருக்கு எதிராக ஏப்ரல் முதல் இதுவரையில் 17% அளவிற்கு அதிக சரிவு ஏற்பட்டுள்ளது.டாலரின் தட்டுப்பாடுதான் காரணமென்றால் ஏன் மற்ற நாடுகளின் பணத்தின் மதிப்பு அந்த அளவுக்குச் சரிவடையவில்லை?
“நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பு நவம்பர் 25ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 426 கோடி டாலர் (21,300 கோடி)சரிவடைந்து 30,437 கோடி டாலராக (15,21,850 கோடியாக) குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 34,50 கோடி டாலர் சரிந்து 261,20 கோடி டாலராக குறைந்துள்ளது.2,680 நிறுவனங்களின் நிகர லாபம் சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 25% வீழ்ச்சியடைந்துள்ளது பரஸ்பர நிதி நிருவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு நவம்பர் 30 வரையிலான காலத்தில் 13,782 கோடி ரூபாய் சரிவடைந்து 6,81 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது 2011 ஜனவரி-நவம்பர் வரையான 11 மாத காலத்தில் புதிய பங்குகள் மூலம் திரட்டப்பட்ட தொகை 89% குறைந்து114 கோடி டாலராக (5,472 கோடி) சரிந்துள்ளது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பிலும்,தங்கத்தின் விலையிலும்,பங்கு சந்தையிலும் ஏற்ற இறக்கம் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும்.சற்று ஆழமாகச் சென்று பார்த்தால் சிறிது சிறிதாகச் சரிவை நோக்கியே செல்வது விளங்கும். சிறிது சிறிதாக நம்மீது சுமையை ஏர்றுகிறார்கள்;நாமும் பாரம் தெரியாமல் சுமந்து நடந்து கோண்டிருக்கிறோம்.
அண்மையில் அந்நிய நிதி நிறுவனங்கள் அவற்றின் மொத்த முதலீட்டில் இருந்து 3,263கோடி ரூபாயைத் திரும்பப் பெற்றுள்ளன.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படிஜூன் மாதம் வரையில் வெளிநாடுகளில் இந்திய முதலீடு 5.04 லட்சம் கோடி ரூபாய்.இந்தியா கடனில் மூழ்கும் போது வெளிநாடுகளில் வசமுள்ள இந்திய முதலீடுகளும் சேமிப்புகளும் முடக்கப்படும்.
மொத்த விலை குறீயீட்டு எண்(டபிள்யூபிஐ) அடிப்படையில் அளவிடப்படும் உணவுப் பணவீக்கம் அக்டோபர் 22 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.21 % உயர்ந்துள்ளது கடந்த ஓர் ஆண்டில் காய்கறி விலை 28.89% உயர்ந்துள்ளது.முட்டை,கறி,மீன் ஆகியவற்றின் விலை 13.36% உயர்ந்துள்ளது. ஐநட் பிராங் என்ற நிறுவனம் ‘வீட்டு விலைஉயர்வு’ பற்றி சர்வதேச அளவில் 2010,2011 ஆம் ஆண்டுகளில் ஏப்ரல் ஜூன் காலாண்டை ஒப்பிட்டு நடத்திய ஆய்வின் படி, இந்தியாவில் வீட்டு விலை 21.3% அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பிஸ்கட் நிருவனங்களான பிரிட்டானியா,ஐ.டி.சி,பார்லே உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் மீது 2% முதல் 10% வரை உயர்த்தியுள்ளன.
“சோப் மற்றும் அழகு சாதனப் பொருட்களின் உற்பத்திக்கான மூலப் பொருள் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது.இதனால் இந்த பொருட்களின் விலையை உயர்த்தத் தயாரிப்பளர்கள் திட்டமிட்டுள்ளனர்” என்று அடிப்படை இரசாயனம்,மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கவின்சில் தலைவர் சதிஷ் வா குறிப்பிட்டுள்ளார். முண்ணனி மிண்ணனு நிறுவனங்களானஏசர்,எல்.ஜி.சாம்சங்,லாவா,மைக்ரோமேக்ஸ்,அகாய்,
ஒனிடா போன்ரவை தங்களுடைய பொருட்களின் விலையை 10% வரை உயர்த்தியுள்ளன.கோத்ரெஜ்,எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வேர்ல்பூல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தொலைக்காட்சிப் பெட்டிகள்,வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் விலையை 8% வரை உயர்த்தியுள்ளன.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி ரூபாயின் மதிப்பை உயர்த்தாமல் போனால் பன்னாட்டு நிதியகத்தில் சேர்த்து வைத்துள்ளவற்றுக்கும் மதிப்பிருக்காது.இதுவரை வாங்கிய கடனோடு இன்னொரு லட்சம் கோடி லட்சம் கடன் வாங்கினாலும் அதற்கும் மதிப்பிருக்காது.
ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் மதிப்பில் 2,00,000 கோடிக்கு 200 கோடி 1000 ரூபாய் நோட்டுகளையும், மதிப்பில் 1,00,000 கோடிக்கு 200 கோடி 500 ரூபாய் நோட்டுகளையும்,மதிப்பில் 61,000 கோடிக்கு 610 கோடி 100 ரூபாய் நோட்டுகளையும்,மதிப்பில் 60,000 கோடிக்கு 120 கோடி 50 ரூபாய் நோட்டுகளையும் அச்சடிக்க உள்ளது. இவை மட்டுமின்றி 10,000 வரை மதிப்பிலான ரூபாய் நோட்டையும்,1,000 வரை மதிப்பிலான நாணயத்தையும் வெளியிட ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.
இந்தியரான நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும். ‘எவ்வளவு பணம் நம்மிடம் இருக்கிறது’ என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல பொருளதார வளர்ச்சி. ‘நம்மிடம் இருக்கும் பணத்திற்கு உலக சந்தையில் என்ன மதிப்பு இருக்கிறது’ என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் பொருளதார வளர்ச்சி. யோசித்துச் சொல்லுங்கள்,நாம் பொருளாதாரத்தில் வளர்கிறோமா? அதிகப்படியான பணத்தை அச்சிட்டு வெளிச்சந்தையில் உலவ விடுவது நாட்டின் பண மதிப்பை வெகுவாகக் குறைத்து விடும்.
இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப் படுத்த,அல்லது ஈடு செய்ய கடந்த 20 மாதங்களில் மட்டும் 13 முறை (3.75%) கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது.இதனால் தொழில்துறை உற்பத்தி சரிவடைந்து வருகிறது. உற்பத்தி வரி கடந்த அக்டோபரில் மட்டும் 11,120 கோடிலிருந்து 5.3% குறைந்து 10,537 கோடியாக உள்ளது.
ஆனால் மறுபுரம் இந்தியாவில் கார்கள்,தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பலவேறு ஆடம்பரப் பொருட்களின் மொத்த விற்பனை மதிப்பு 20% உயர்ந்து 28,500 கோடி ரூபாயாக உள்ளது. “இந்தியாவில் முறையாக வருமான வரி செலுத்துவோர் 3.36 கோடி (மொத்த மக்கள் தொகையில் 2.77%)” என நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிக தனிநபர் சொத்துகள் வைத்திருப்பவர்கள் 21% உயர்ந்து 1,53,000 ஆக உள்ளது. ‘டி.என்.எஸ் இந்தியா நிறுவனம்’ ஒரு டாலருக்கும் (49,00,000) அதிகமாக ரொக்கப் பணம் வைத்துள்ளவர்களைப் பணக்காரர்களாக எடுத்துக் கொண்டு நடத்திய ‘குளோபல் அஃப்லூவன்ட் இன்வெஸ்டர்’ சர்வேயின்படி இந்தியா 30 லட்சம் மக்களுடன் உலகின் இரண்டாம் இடத்தில் உள்ளது.இந்தியாவில் பணக்காரர்கள் வரிசையில் 2,260 கோடி டாலருடன் முகேஷ் அம்பானி முதலிடத்திலும்,1,920 கோடி டாலருடன் உருக்காலை அதிபர் லஷ்மி மிட்டல் இரண்டாம் இடத்திலும், 1,300 கோடி டாலருடன் விப்ரோ அசீம் பிரேம்ஜி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
அமெரிககாவின் போர்ப்ஸ் வணிக இதழ் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் டாலர் முதல் 100 கோடி டாலர் (4,500 கோடி) வரை வருவாய் ஈட்டும் முன்னணி 200 நிறுவனங்களைப் பட்டியல்லிட்டதில் 35 நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள்.2010-11 ஆம் நிதியாண்டில் பி.பி.ஒ நிறுவனங்களின் வருவாய் 13% உயர்ந்து 32,246 கோடியாக அதிகரித்துள்ளது.
இது சமநிலை இல்லாத பொருளாதாரம்;அரசிடமுள்ள கையிருப்பை விடவும் சில தனிமனிதர்களிடம் குவிந்திருக்கும் பொருளாதாரம். நாளை உலக நாடுகள் அவர்தம் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முற்படும். அந்த நாளில் மீண்டுவர முடியாத பொருளாதாரப் பின்னடைவை இந்த உலகம் சந்திக்கும். அரசு வரிகள் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முற்படுகிறது; அப்பாவிகள் அதில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இந்திய தேசம் தவறவிட்டுக் கொண்டிருக்கும் விஷயம் நாடு முழுமைக்கும் எப்படிப் பொருளாதாரத்தைச் சீராகப் பரப்புவது என்பதும்,நாட்டு மக்களின் செலவுகளை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதும் தான்.
இந்த தேசத்தின் விலையேற்றத்தோடு போட்டி போட்டுத் தோற்றுப் போனவர்களைத் தெருவெங்கும் பார்க்கலாம்.
நன்றி: http://valaiyukam.blogspot.com/2012/01/blog-post_5163.html
No comments:
Post a Comment