KILIYANUR ONLINE

Thursday 2 June 2011

முன்னேறுவத​ற்கான வழி என்ன?

மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்குமே, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். சிலருக்கு, கடைசி மூச்சு வரை கூட, இந்த எண்ணம் இருக்கும். முன்னேறுவதற்கான வழிகளைக் கற்றுக் கொடுக்க ஏராளமான புத்தகங்கள், வகுப்புகள், தனி படிப்புகள் இருந்தாலும், எல்லாருக்குமே அவை பொருந்துமா என்பது கேள்விக்குறியே."பிரைடே' என்ற துபாய் பத்திரிகையில், எலிசபெத் என்ற எழுத்தாளர், 10 வழிமுறைகளை எழுதியுள்ளார். அவை:
1. உயர் பதவியை அடைய, போட்டி மனப்பான்மை தேவை. போட்டி என்பது, மற்றவர்களை "போட்டுக் கொடுத்து' முன்னுக்கு வருவது அல்ல. உங்கள் திறமையை அதிகரித்து, தொடர்ந்து அதை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில், உங்கள் திறமை இவ்வளவு தான் என்ற தீர்மானத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்படும். அது தான் உங்கள் எல்லைக் கோடு. அது என்ன என்பதை கண்டுபிடிக்கும் வரை, தொடர்ந்து உழைக்க வேண்டும்.
2. உயர் பதவியை அடைய வேண்டும் என்ற வேகத்தில், நான்கு கால் பாய்ச்சல், எட்டு கால் பாய்ச்சலில் செல்வதை விட, ஒவ்வொரு வேலையையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், அனைத்து வேலைகளிலும் நீங்கள் அத்துப்படி ஆகி விடுவீர்கள். உச்சப் பதவியில் அமரும் போது, உங்கள் கீழ் பணியாற்றும் யாரும் உங்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது.
3. ஒரு வேலையை முழுதுமாகக் கற்று முடிக்கும்போது, உங்கள் தன்னம்பிக்கை உயரும். தொடர்ந்து அதே பணியைச் செய்தபடி இருந்தால், அந்தப் பணியை வேகமாகச் செய்து முடித்து, "அடுத்து என்ன வேலை செய்யலாம்?' என்று சிந்திக்கத் துவங்கி விடுவீர்கள். இதுவே முன்னேற்றத்துக்கான அடிப்படை.
4. உங்கள் வீட்டை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவு அலுவலகத்தையும் நேசிக்க வேண்டும். உங்கள் வீட்டின் மூலை முடுக்குகளை நீங்கள் அறிந்து வைத்துள்ளது போல், அலுவலகத்தையும் அறிய வேண்டும். அலுவலகத்தை உங்கள் வீடாக நினைத்துக் கொண்டால், வீட்டை அழகாக நிர்வகிப்பது போல, அலுவலகத்தையும் அழகாக நிர்வகிப்பீர்கள்.
5. அனைத்தையும் அறிந்து கொண்டு, நடுநிலையுடன் செயல்பட்டு, நீண்ட நேரம் அலுவலகத்தில் அமரும் பழக்கம் உள்ளவராக இருந்தால், நீங்கள் நினைத்தபடி வேலைகள் நடக்கும்; அலுவலகக் கட்டுப்பாடுகள் கூட உங்களிடம் மண்டி இடும்.
6. நீங்கள் தற்போது பணியாற்றும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள, நிறைய பொறுமை, சகிப்புத் தன்மை தேவை. இதைக் கைகொண்டால், உங்களை அனைவரும் மதிப்பர்; உங்களை நம்பி வேலைகள் தானாக வந்து சேரும்.
7. எங்கு பணி புரிந்தாலும், நீங்கள் நீங்களாகவே இருங்கள். அப்போது தான் உங்கள் தனித்துவம் வெளிப்படும்.
8. "இந்த வேலை போரடிக்கிறது; வேறு வேலை பார்க்கலாமா...' என்று, நிலையற்ற வகையில் சிந்திக்காதீர்கள். உங்களால் செய்ய முடிந்த பணியைத் தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் திறமைக்கு மீறிய வேலையை நீங்கள் செய்யவில்லை. போரடிக்கும் வேலையை வேகமாகச் செய்து முடித்தால், அடுத்த வேலை தானாகவே உங்கள் மடியில் வந்து விழும்.
9. "இது முடிஞ்சாச்சு... அடுத்து என்ன...' என்று பரபரப்பாக, வேகமாக ஓடியபடியே இருந்தாலும், ஒரு நாள், மீண்டும் பழைய இடத்திற்கே தான் வரவேண்டி இருக்கும். இதற்கு ஏன் வாழ்க்கையை அனாவசியமாக "டென்ஷன்' படுத்திக் கொள்கிறீர்கள்? நிதானமாக, கவனத்துடன் தற்போதைய பணியைச் செய்து கொண்டே இருந்தால், நிலையான முன்னேற்றம் ஏற்படும்.
10. மற்றவர்கள், "டென்ஷனுடன்' ஓடுவதைப் பார்த்து ரசித்தபடி அமர்ந்திருங்கள். நீங்கள் "ரிலாக்ஸ்' ஆகி விடுவீர்கள்.
நீங்கள் உயர் பதவி வகிப்பவரா? எப்படி முன்னேறினீர்கள்? எடுங்கள் பேனாவை,

1 comment:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய வழிகள்..

Followers